பாமக எம்எல்ஏ அருள் மீதான கொலை முயற்சி வழக்கு.. காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: பாமக எம்எல்ஏ அருள் மீதான கொலை முயற்சி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற நேரிடும் என்று நீதிபதி எச்சரித்தார்.
கடந்த சில மாதங்களாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சி தலைமை பதவி தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவருமே, தங்களிடம் தான் பாமக இருக்கிறது என உரிமை கோரி வருகின்றனர். இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

இதனால் இருவரின் ஆதரவாளர்கள் இடையே கடுமையான கருத்து மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி சேலம் மேற்கு பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அருள் தரப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சேலம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் மொத்தம் 5 வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் தரப்பில் அளித்த புகாரில் அன்புமணி தரப்பினர் மீது இரண்டு வழக்கும், அன்புமணி தரப்பினர் அளித்த புகாரில் எம்எல்ஏ அருள் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது மொத்தம் 3 வழக்குகளையும் காவல்துறை பதிவு செய்தது.
இந்நிலையில் அருளுக்கு எதிராக புகார் அளித்த செந்தில்குமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தாம் அளித்த புகார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஏத்தாப்பூர் காவல்துறை, சட்டமன்ற உறுப்பினர் அருள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் காவல்துறை எந்த மேல் நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அருளுக்கு எதிராக மட்டும் இரண்டு புகார்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் அருள் தரப்பினர் அளித்த புகார் மீது தங்களின் தரப்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அருள் சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால் நியாயமான முறையில் விசாரணை நடைபெறவில்லை, காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனர். எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, காவல்துறை தரப்பில் இந்த புகார் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார். மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற நேரிடும் என எச்சரித்தார். பின்னர் மனு தொடர்பாக காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 20 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications