தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஏன்? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உரிய அனுமதி இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஏன்? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது ஐகோர்ட்.

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும், தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அமைப்பதை எதிர்த்து பூட்டுத்தாக்கு கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் கே. வாசுதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

High court Ranipet chennai highways

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கே. வாசுதேவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. செல்வராஜ், குறிப்பிட்ட பகுதியில் ஏற்கெனவே பேருந்து நிறுத்தம் உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை பயன்படுத்தி கூடுதலாக பேருந்து நிறுத்தம் அமைக்க எந்த வித அவசியமும் இல்லை.

பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கு போதிய முன் அனுமதி பெறாமல் கட்டுமானங்கள் கேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சட்டமன்ற உறுப்பினர் நிதியை தவறாக பயன்படுத்தி இந்த பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு வருவதால் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் எம்.எம். ஸ்ரீ வஸ்தவா மற்றும் அருள்முருகன், தேசிய நெடுஞ்சாலை அருகே பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டால் அதை சுற்றி கடைகள் அமையுமே? அதனால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நாளடைவில் விபத்துகள் ஏற்பட வழிவகுக்கும் பகுதியாக மாறுமே என தெரிவித்தனர்.

விபத்து ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ளாமல் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக 2 வாரங்களில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி துறை இயக்குநர், பொதுப்பணித் துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+