பைபர், ஏர் பைபர் எல்லாம் ஓரம் போ! வெறும் 199க்கு அதிவேக இண்டர்நெட்! எல்லாம் ரெடி.. அசத்துதே அரசு..!
சென்னை: பல்வேறு தனியார் நிறுவனங்கள் பைபர் கேபிள் மற்றும் ஏர் பைபர் மூலம் இணையதள சேவையினை வீடுகளுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் வெறும் 199 ரூபாய்க்கு ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேக இணையதள வசதி அடுத்த மாதம் தமிழகத்தில் தொடங்கப்பட இருப்பதாகவும், இதற்காக கேபிள்கள் பதிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய நவீன யுகத்தில் செல்போன் இல்லாமல் யாராலும் செயல்படவே முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அதே நேரத்தில் ஆண்ட்ராய்டு போன்கள் இணைய சேவை இல்லாமல் இயங்காது என்பதால் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட இணைய சேவை நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டி வருகிறது.
அதே நேரத்தில் நகர்புறங்களை பார்க்கும் பொழுது கிராமப் புறங்களில் இன்னும் அதிவேக இணையதள சேவை இல்லை என்ற நிலையே உள்ளது. பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னும் முழுமையாக கிராமத்திற்கு இணைய சேவையை வழங்கவில்லை. தற்போது அதிவேக இணைய சேவை வழங்கும் ஃபைபர் மற்றும் ஏர்பைபர் சேவைகளை தரும் நிறுவனங்கள் கிராமப் புறங்களில் அடியெடுத்து வைக்கவில்லை.

இந்த நிலையில் பாரத் நெட்டு திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையதள சேவை வழங்கும் திட்டம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு பைபர் ஆப்டிகல் நெட்வொர்க் நிறுவனம் மூலம் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்போது தமிழகத்தில் 12,525 பஞ்சாயத்துக்களை ஆப்டிகல் பைபர் கேபிள்கள் மூலம் அதிவேக இணையதள சேவை வழங்கப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதற்காக 55 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு தமிழகத்தில் கேபிள் பதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 11,800 கிராமங்களில் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்ட நிலையில், வனப் பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் கேபிள் பதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அங்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த மாதத்திற்குள் அதிவேக இணையதள சேவையை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 4000 கிராமங்களில் இணையதள சேவை வழங்குவதற்கான தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் மேலும் 4000 கிராமங்களுக்கும் அதனைத் தொடர்ந்து மீதமுள்ள கிராமங்களுக்கும் அறிவிப்புகள் வழியாக இருக்கிறது. ஏஜென்சிகள் நியமனம் நிறைவடைந்த உடன் மத்திய அரசின் அனுமதி பெற்று கிராம மக்களுக்கு அதிவேக இணைய இணைப்பு தொடங்கப்படும் எனவும் அடுத்த மாதத்திற்குள் இந்த பணிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேக இணையதள சேவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்த ஆண்டு முதல் வருடத்திற்கு ஒரு கோடி இணைப்புகள் என்ற இலக்குடன் இணையதள சேவையை வழங்க அரசு திட்டம் தீட்டி இருக்கிறது. மேலும் வீடுகள், வணிக நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 20 எம்பிபிஎஸ் வேகத்தில் 199 கட்டணத்தில் வீடுகளுக்கும், சேவைக்கேற்றவாறு 399 மற்றும் 499 ஆகிய திட்டத்தின் கீழ் வேகத்திற்கு ஏற்றபடி கட்டணம் வழங்கப்படும். வணிக நிறுவனங்களுக்கு 899 மற்றும் 1199 ஆகிய இரு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகவும், கூடுதலாக சில சேவைகள் இருக்கும் என்கின்றனர் டான்ஃபிட் அதிகாரிகள்.
-
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications