Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முக்கோண இடி".. எடப்பாடி பழனிசாமி போடும் கோலம்.. டெல்லி பறந்த மெசேஜ்.. பாஜக, திமுகவே எதிர்பார்க்கலயாமே

எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் கூட்ட பேச்சு 3 விதமான அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2 நாட்களாகவே, எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் பேச்சுக்கள்தான், அதிமுக கூடாரத்தை திகைக்க வைத்து வருகிறது..!

சுப்ரீம்கோர்ட் தந்த உத்தரவால், ஓபிஎஸ் கை ஓங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி பின்னடைவை சந்தித்துவிட்டதாகவும், இதனால் அப்செட் ஆகி, சில நாட்களாகவே சைலண்ட்டாக இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால், அதெல்லாம் வெறும் புரளிதான்.. உண்மையை சொல்லப்போனால், இந்த ஒரு மாத காலமாகத்தான், எடப்பாடி பழனிசாமி ஏகப்பட்ட வியூகங்களை கையில் எடுத்தாராம்..

 3 அம்புகள்

3 அம்புகள்

ஒருபக்கம் பாஜக, மறுபக்கம் ஓபிஎஸ், இதற்கு நடுவில் திமுக என 3 பக்கமும் செக் வைப்பதற்கான, திட்டங்களைதான் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்தாராம்.. அதில் முதல் பிளானைதான், நாமக்கல் மாவட்ட அதிமுக கூட்டத்திலும் அம்பலப்படுத்தினார் என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.. அந்த கூட்டத்தில், மொத்தம் 3 விதமான மறைமுக மெசேஜ்களை எடப்பாடி பழனிசாமி இந்த நாமக்கல் கூட்டத்தில் உணர்த்தியதாக கூறுகிறார்கள்.

 அம்பு A

அம்பு A

முதல் அம்பை திமுக பக்கம் எய்துள்ளார்.. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை, தன்னுடைய ஆதரவாளர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடு பொடியாக்கி அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும், எம்பி தேர்தலுடன் சேர்த்தே, சட்டமன்ற தேர்தலும் நிச்சயம் நடக்கத்தான் போகிறது என்று பேசியுள்ளார். அதுமட்டுமல்ல, "அதிமுகவுக்கு எந்தளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், சக்தியும் இருக்கிறது என்பதை இன்று நடைபெறும் கூட்டம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது" என்று பேசியுள்ளார்..

 மாஸ் கூட்டம்

மாஸ் கூட்டம்

இதற்கு காரணம், சமீபகாலமாகவே, "அதிமுக என்ற கட்சியே காணாமல் போய் கொண்டிருக்கிறது, அந்த கட்சியில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன, அப்படி ஒரு கட்சி இருப்பதே இன்று தமிழக மக்களுக்கு தெரியாமல் போகிறது" என்றெல்லாம் திமுக தலைவர்கள் பொதுவெளியில் விமர்சித்து கொண்டே இருப்பதால்தான், அதற்கு பதிலடி தரும்விதமாகவே, நாமக்கல்லில் திரண்டு வந்த கூட்டத்தையே, உதாரணமாக காட்டி எடப்பாடி சொன்னாராம்.

 அம்பு B

அம்பு B

இரண்டாவது அம்பு ஓபிஎஸ் பக்கம் எய்துள்ளார்.. ஓ.பன்னீர்செல்வத்தை B-டீம் என்று விமர்சித்ததோடு அதிமுகவில் பிளவில்லை என்று பெருமையாக பேசினார்.. அதிமுக பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான், இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓபிஎஸ்ஸின் அரசியல் கனவில் ஓங்கி அடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரையில் நடந்த காதணி விழாவில் ஓபிஎஸ் பேசியபோது, அதிமுக மீண்டும் இணையும் என்று கூறியிருந்தார்.. ஆனால், அதற்கெல்லாம் சான்ஸே இல்லை, ஓபிஎஸ் கட்சியில் இணைய 1 சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று அழுத்தமான மெசேஜ் தந்துள்ளார்.

 அம்பு C

அம்பு C

மூன்றாவது அம்பு பாஜக பக்கம் எய்துள்ளார்... ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் சேர்த்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளதே, பாஜகவுக்கான ஷாக் பதிலடிதான்.. அதையும் மீறி, எம்பி தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்றும்கூறி, டெல்லியையே அசரடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. எம்பி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும், இப்போது தேசிய முற்போக்கு கூட்டணியில் அதிமுக உள்ளது என்றும் எச். ராஜா சமீபத்தில்கூட கூறியிருந்தார்.. அதாவது, பாஜக தலைமையில் அதிமுக கூட்டணி இருப்பதை போலவே எச்.ராஜாவின் அந்த பேச்சும் அமைந்திருந்தது.. ஆனால், எடப்பாடி பழனிசாமி, மெகா கூட்டணி என்று திடுதிப்பென்று சொல்லி உள்ளது, பாஜகவை குழப்பியடித்து வருகிறது.

 1, 2, 3 ப்ளான்கள்

1, 2, 3 ப்ளான்கள்

இந்த 3 விதமான மெசேஜ்கள் மட்டுமல்ல, இன்னொரு விஷயத்தையும் நாமக்கல்லில் எடப்பாடி சூப்பராக ப்ளே செய்துள்ளாராம்.. அதாவது, தன்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டபடியே பேசினாராம்.. குறிப்பாக, எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, இந்த இயக்கம் அழிந்துவிடும், சிதைந்துவிடும் என்று கனவு கண்டவர்கள், அந்த கனவையெல்லாம் தவிடுபொடியாக்கிய, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்ஐிஆர் ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் நிலைநாட்டிக் காட்டினார்..

சதிகாரர்கள்

சதிகாரர்கள்

அப்போது சதிகாரர்கள் எவ்வளவோ சதி செய்தார்கள். அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்தார்கள். அப்படித்தான் இப்போதும், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீது வழக்குகள் தொடுக்கிறார்கள்" என்று பேசியுள்ளார்.. அதாவது, அன்று சதிகாரர்களிடம் இருந்து கட்சியை ஜெயலலிதா காப்பாற்றியது போலவே, இன்று கட்சியை தான் காப்பாற்றுவதாகவும், அதேபோல, பொய் வழக்குகளை எதிர்த்து போரிடுவதாகவும் எடப்பாடியின் பேச்சு அமைந்திருந்தது..

 ஜெ.ஜெ.

ஜெ.ஜெ.

ஏற்கனவே, தன்னை ஒரு ஜெயலலிதா போலவே எடப்பாடி நினைத்து கொண்டிருக்கிறார், அதனால்தான், ஜெ.பாணியிலேயே கட்சியை ஆள நினைக்கிறார், ஜெ.பாணியிலேயே கட்சிக்கு ஏகபோக உரிமை கொண்டாட பேராசை படுகிறார் என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவரது நாமக்கல் பேச்சு, ஓபிஎஸ் கூடாரத்தையே வெலவெலக்க செய்துவிட்டதாம்.. அதுமட்டுமல்ல, இந்த விஷயம் டெல்லி வரை பாஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வட்டமடிக்கின்றன.. என்ன நடக்க போகிறதோ? தெரியவில்லை.. பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+