ஓங்கி முழங்குகிறேன்! ஜெய் பீம்! அல்லாஹு அக்பர்! நாடாளுமன்றத்தில் சீறிய திருமா.. RSS பற்றி பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டை பிளவுபடுத்துகிறது. அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விசிக எம்பி திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார்.

கர்நாடகாவில் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய மாணவிகள் பியு கல்லூரிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஹிஜாப் விவகாரம் குறித்து தமிழ்நாடு எம்பிக்கள் பலர் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் குரல் கொடுத்து வருகின்றன.

ஹிஜாப்

ஹிஜாப்

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி திருமாவளவன் நாடாளுமன்றத்தில் மக்களவையில் பேசுகையில், கர்நாடகாவில் கல்லூரிகளில் எந்த அளவிற்கு மாணவர்கள் இடையே பிரச்சனைகள் உள்ளது என்பதை நாம் அறிவோம். இது ஒரு பள்ளியின், கல்லூரியின் பிரச்சனை அல்ல. கர்நாடக என்ற ஒற்றை மாநிலத்தின் பிரச்சனை அல்ல. இது மொத்த தேசத்தின் பிரச்சனை.

திருமாவளவன்

திருமாவளவன்

இந்திய ஒன்றிய அரசின் நிலைப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுமையையும் நாசகரமான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார்கள். இது எந்த வகையில் ஏற்புடையது அல்லது. இதற்கு காரணமான ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். ஹரித்வாரில் 20 லட்சம் இஸ்லாமியர்களை கொலை செய்ய வேண்டும் என்று பேசுகிறார்கள்.

ஆர்எஸ்எஸ் தடை

ஆர்எஸ்எஸ் தடை

பிரதமர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார். உள்துறை அமைச்சர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இஸ்லாமிய பெண்கள் அரசியலமைப்பு சட்டம் வழங்கும் உரிமையின் அடிப்படையில் உடை சுதந்திரம் பெற்றுள்ளனர். அதை தடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

கர்நாடகா ஹிஜாப்

கர்நாடகா ஹிஜாப்


கர்நாடகாவில் நடக்கும் சம்பவங்களை தடுத்து நிறுத்தியாக வேண்டும். இதை நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் இந்தியர்களை இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என்று பிரிக்கிறார்கள். இந்துக்களை மேல் சாதி, கீழ் சாதி என்று பிரிகிறார்கள். பிரித்தாளும் சூழ்ச்சியே சங்பரிவார் அமைப்பின் சூழ்ச்சியாக இருக்கிறது.இந்த போக்கை ஆதரித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சிதான் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்வதாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.

பிரிவினை

பிரிவினை

அவர் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. இந்த போக்கை நான் எதிர்க்கிறேன். சமூக நீதி நலத்துறையை பிரித்து ஓபிசி நலப்பிரிவு உருவாக்க வேண்டும். ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தின் மூலம் நாட்டை பிளவு படுத்தும் நபர்களுக்கும், சக்திகளுக்கும் என்னுடைய கண்டனங்கள். இதற்கான எதிர் குரல் இந்தியாவில் ஜெய் பீம் என்றும், அல்லாஹு அக்பர் என்று ஒலிந்துகொண்டு இருக்கிறது. எனவே இந்த அவையில் நான் ஓங்கி முழங்குகிறேன்.. ஜெய் பீம்.. அல்லாஹு அக்பர்! என்று விசிக எம்பி திருமாவளவன் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+