பொன்.மாணிக்கவேல் பொய் வழக்கு போடுகிறார்.. இந்து அறநிலையத்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார்!
பொன்.மாணிக்கவேல் பலர் மீது பொய் வழக்கு போடுகிறார் என்று இந்து அறநிலையத்துறை சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறது.
சென்னை: பொன்.மாணிக்கவேல் பலர் மீது பொய் வழக்கு போடுகிறார் என்று இந்து அறநிலையத்துறை சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறது.
தற்போது தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கும் இடையே கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது போலீசார் அடுக்கடுக்காக புகார் அளித்து வருகிறார்கள்.

ஏற்கனவே பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி 13 காவல் அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்தனர். அதன்பின் 4 அதிகாரிகள் அவர் மீது புகார் அளித்தனர். இந்த நிலையில் இந்து அறநிலையத்துறையும் மாணிக்கவேலுக்கு எதிராக களமிறங்கி உள்ளது.
பொன்.மாணிக்கவேல் மீது இந்து அறநிலையத்துறை சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து வந்து பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்துள்ளார்.
இதற்கு பின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில், இதுவரை 10 அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்.மாணிக்கவேலால் இந்து அறநிலையத்துறையே முடக்கப்படும் அபாயம் உள்ளது.
பொன்.மாணிக்கவேல் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சிலைகடத்தல் தொடர்பான எந்த வழக்கிலும் அவர் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அவர் பதிவு செய்த வழக்குகளில் எந்த உண்மையும் இல்லை. கோயில்களில் உள்ள அறங்காவலர்களே சிலைகளுக்கு பொறுப்பு என்பதை அவர் உணர வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications