காவி கலர்.. வள்ளுவர் ஓவியத்துக்கு தடை! அன்பில் மகேஷின் அப்பட்ட அதிகார துஷ்பிரயோகம்.. பறந்த கண்டனம்!
சென்னை: காவி வண்ணம் தீட்டப்பட்ட திருவள்ளுவர் ஓவியத்தை அகற்றச் சொல்லிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அப்பட்ட அதிகார துஷ்பிரயோகம் எனவும், மாணவர்களிடம் திராவிடக் கொள்கையை திணிப்பது அநாகரிகமான செயல் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” குமரியில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டை ஒட்டி ஓவியக் கண்காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. ஓவியக் கண்காட்சியில் பங்கு கொண்ட மாணவர் ஒருவர் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் தீட்டி இருந்தார்.

கண்காட்சியைப் பார்வையிட வந்த கல்வி அமைச்சர் திரு. அன்பில் பொய்யாமொழி அவர்கள் அந்த ஓவியத்தை நீக்கக் கூறியதுடன் இனி இதுபோன்றவற்றை அனுமதிக்கக்கூடாது என கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காவி திருவள்ளுவர்:
ஓவியத்தை கண்காட்சியிலிருந்து நீக்கிய படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்தச் செயலானது ஒட்டுமொத்த அதிகார துஷ்பிரயோகம், அராஜக போக்கு, மிகுந்த கண்டனத்திற்குரியது. நாட்டின் அனைத்து குடிமகன்களுக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை தங்களது கருத்தை வெளிப்படுத்த அரசியலமைப்பு சட்டமானது உரிமை வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, மாணவர்களின் படைப்புத் திறனை, ஆர்வத்தை, நிறத்தை காரணம் காட்டி முடக்குவது சிறுபிள்ளைத்தனமான செயல்.
இந்து முன்னணி:
காவி என்பதை திமுக கட்சியும் அதன் தலைவர்களும் நிறமாக மட்டுமே பார்க்கின்றனர். காவி வண்ணம் என்பது துறவின் உச்சம். மனிதனின் உயர்ந்த நிலையாகும். அத்தகைய நிலையில் தெய்வப்புலவர் வாழ்ந்துள்ளார் என்ற வகையில் திருவள்ளுவரை மாணவர் சிந்தித்து வரைந்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருமுன்பு வரை வெளிவந்த அனைத்து பெரியோர்களின் படங்களும், திருவுருவச் சிலைகளும், ஓவியங்களும், தமிழனின் பாரம்பரியத்தை, ஆன்மீகத்தை பிரதிபலிப்பதாகவே இருந்தது. திமுக ஆட்சியில் தான் திருவள்ளுவர் முதல் வடலூர் வள்ளலார் வரை பலரது அடையாளங்கள் சிதைக்கப்பட்டன.
திராவிட அரசியல்:
தமிழனின் அடையாளத்தை சிதைத்து தமிழனின் புகழை கீழ்மைபடுத்தியது திராவிட அரசியல்தான் என்பதை சுட்டிக் காட்டுகிறோம். திருவள்ளுவர் ஏதோ திமுகவின் கண்டுபிடிப்பு போல சித்தரித்து, அவரை சிறுமைப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதை தமிழர்கள் உணர வேண்டும். திருவள்ளுவருக்கு வழிபாடு உள்ள கோவில்களை திமுக அமைச்சர் அகற்ற சொல்லுவாரோ? கன்னியாகுமரியில் திமுக கட்சியின் முயற்சியால் தான் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டதாக அமைச்சர் அன்பில் பொய்யாமொழி நினைக்கிறார் போலும்.
திருவள்ளுவர் சிலை:
உண்மையில் குமரியில் தற்போதுள்ள இடத்தில் திருவள்ளுவருக்கு திருவுருவ சிலை வைக்க ஏற்பாடு செய்தது இந்து அமைப்புகள் தான். சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைத்தபோது அதனை நிறுவிய தலைவர் ஏக்நாத் ராணடே அவர்கள், அதன் அருகில் உள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் திருவுருவ சிலை அமைப்பது தொடர்பாக அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களிடம் ஆலோசித்தார். தமிழக அரசு சார்பில் அதனை நிறுவுவதாக அவர் கூறினார். அதன்பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் தலைமையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். உண்மையில் அப்போதே அதனை நிறுவியிருந்தால் தற்போது ஐம்பது ஆண்டுகள் ஆகியிருக்கும். அதன்பின் திராவிட அரசியலால் 25 ஆண்டுகள் கழித்துதான் சிலை நிறுவப்பட்டது.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி:
இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொய்யாமொழி அவர்கள், மாணவர்களிடம் திராவிடக் கொள்கையை திணிப்பது அநாகரிகமான செயல். கருத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் என்பது பற்றியெல்லாம் வாய் கிழிய பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் செயல்படுத்தும் திராணியை தமிழக அரசு வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய போக்கு திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்காது. குறுகிய மனப்போக்குடன் செயல்படும் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்களையும், தமிழக அரசையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.” என கூறியுள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications