திமுக அமைச்சர்கள் பொடி ஆழ்வார்களா? ஏன் அசிங்கப்படுத்துறீங்க.. எடப்பாடிக்கு இந்து அமைப்பு கண்டனம்
சென்னை: திமுக அமைச்சர்களை விமர்சிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொடியாழ்வாரின் பெயரை பயன்படுத்தியது ஆழ்வாரையே அசிங்கப்படுத்தும் செயல் என இந்து தமிழர் கட்சித் தலைவர் ராமரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரையும் திமுக அமைச்சர்களையும் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் தறிகெட்டு ஓடும் குதிரைகள் போல அமைச்சர்கள் கட்டுப்பாடின்றி தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்கள்.
இந்த நிலையில் திறமையற்ற முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் என்று நான் சொன்ன போது அவருடைய "தொண்டரடிப்பொடியாழ்வார்"களுக்கு கோபம் கொப்பளித்தது. ஆனால் இப்போது அவரே தன்னால் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று புலம்பியதை இந்த நாடு வேடிக்கை பார்த்தது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

திமுக அமைச்சர்கள்
இந்த நிலையில் திமுக அமைச்சர்களை தொண்ரடிப்பொடியாழ்வார் என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் பயன்படுத்தியுள்ளதற்கு இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ராமரவிக்குமார் அறிக்கை
அந்த அறிக்கையில், அதிமுக கட்சி இடைக்கால பொதுசெயலாளர்- முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர். திருமு.க.ஸ்டாலின் திமுகவினரை, அரசு நிர்வாகத்தை விமர்சிக்க முழு உரிமைகள் இருக்கிறது. ஆனால் எடப்பாடியார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொண்டரடி பொடியாழ்வார் என்கின்ற ஸ்ரீ வைணவ மத ஆழ்வாரை- பெரியவரை உதாரணப்படுத்தி பேசுவது கண்டனத்திற்குரியது தேவையற்றது. மாண்புடைய முன்னாள் முதலமைச்சருக்கு இது மாண்பு அல்ல. தொண்டரடிப்பொடியாழ்வார் (Thondaradippodi Alvar) வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் ஆவார். ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பத்தாவதாக வரும் இவருக்கு 'விப்ர நாராயணர்' என்பது இயற்பெயர் ஆகும்.

அரங்கநாதனுக்கு பாமாலை சாற்றுதல்
திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையைத் தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டு செய்து வந்தார். ஆழ்வார்களின் வசனங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று போற்றப்படுகிறது. இந்தப் பிரபந்தம் ஓதப்படும் 108 வைணவ கோயில்கள் திவ்ய தேசம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.அவரது படைப்புகளில் திருப்பள்ளி எழுச்சி பத்து வசனங்களைக் கொண்டதாகவும், திருமாலை நாற்பது வசனங்களைக் கொண்டதாகவும் உள்ளது.

நாலாயிர திவ்ய பிரபந்தம்
இவை இரண்டும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள 4000 சரணங்களில் கணக்கிடப்பட்டுள்ளன. தொண்டரடிப்பொடி மற்றும் பிற ஆழ்வார்களின் படைப்புகள் வைணவத்தின் தத்துவ மற்றும் இறையியல் கருத்துகளுக்குப் பங்களித்தன. மூன்று சைவ நாயன்மார்களுடன் சேர்ந்து, அவர்கள் தென்னிந்திய பிராந்தியத்தின் ஆளும் பல்லவ மன்னர்களைப் பாதித்தனர். இதன் விளைவாகத் தென்னிந்தியாவில் பௌத்தம் மற்றும் சமண மதத்தை வளரவிடாமல் தடுத்தனர் என்பது வரலாறாக உள்ளது. மேலும், இந்து மதத்தின் இரு பிரிவுகளான சைவம் மற்றும் வைணவம் தோன்றக் காரணமாக விளங்கினர்.

தென்னிந்திய விஷ்ணு கோயில்கள்
தென்னிந்திய விஷ்ணு கோயில்களில், தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தொடர்புடைய படங்களும் பண்டிகைகளும் உள்ளன. வசந்த உத்ஸவம் திருவிழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது, மேலும் அவர் பராமரித்ததாக நம்பப்படும் தோட்டத்தில் ஒன்பது நாட்கள் தொண்டரடிப்பொடி மற்றும் பிற ஆழ்வார்களின் வசனங்கள் தினசரி பிரார்த்தனையின் ஒரு பகுதியாகவும், தென்னிந்தியாவின் பெரும்பாலான விஷ்ணு கோவில்களில் பண்டிகை சந்தர்ப்பங்களிலும் ஓதப்படுகின்றன. இவ்வாறு ராமரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்












Click it and Unblock the Notifications