நிர்மலா நிதியமைச்சர் ஆக முடியாது? நிதிஷ் முட்டுக்கட்டை! ‘இந்து’ ராம் ஓபன் டாக்
சென்னை: யாராலும் தோற்கடிக்க முடியாத தலைவர் மோடி என்று இருந்த ஒளிவட்டம் மறையவிட்டதாக நியூயார்க் டைம்ஸ் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளதாக 'இந்து’ ராம் கூறியுள்ளார்.
இந்திய அரசியல் வரலாற்றில் 1962க்குப் பிறகு முதல் முறையாக ஒரு அரசாங்கம் தொடர்ந்து மூன்று முறை அரியணையில் அமர உள்ளது.

“அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வாக்காளர்கள் ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளனர். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள உடைக்க முடியாத நம்பிக்கை ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம்.
நாம் முன்னேற வேண்டுமானால் ஊழலைக் கடுமையாகத் தாக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டம் கடினமானது” என்று வெற்றிக்குப் பிறகு நடந்த கூட்டத்தில் மோடி பேசியுள்ளார். .
ஆனால், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குக் கிடைத்துள்ள "தார்மீக தோல்வி" என்று எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஒருமனதாக மோடியைத் தலைவராக இன்று தேர்ந்தெடுத்துள்ளனர். அதனை அடுத்து அவர் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.
மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்க உள்ள மோடி, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மிக நீண்ட ஒரு உரையை இன்று நடந்த என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் நிகழ்த்தி உள்ளார்.
குறிப்பாக “ஆட்சி நடத்துவதற்குப் பெரும்பான்மை என்பது முக்கியமல்ல; இன்னும் 10 ஆண்டுகளுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிதான் நடக்கும். நாட்டை ஜனநாயகப் பாதையில் வழிநடத்தி, 140 கோடி மக்களுக்குமான ஆட்சியைத் தருவோம்” என்று மோடி பேசினார்.
இந்நிலையில், 'இந்து’ ராம் புதியதாக அமைய உள்ள மோடி ஆட்சி பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
குறிப்பாக பாஜக அமைத்துள்ள கூட்டணி ஆட்சி பற்றி ராம் பேசுகையில், “நிதிஷ்குமாரும் சந்திரபாபு நாயுடுவும் எந்தத் துறையைக் கேட்டாலும் பாஜக கொடுக்க வேண்டிய நிலையில்தான் உள்ளது. ஏனென்றால், இந்த இருவரை நம்பித்தான் மோடியே பிரதமராக இருக்கிறார்.
ஆகவே, நிதியமைச்சர் எங்களுக்குத் தேவை எனக் கேட்கலாம். உள்துறை அமைச்சர் பதவிகூட கேட்கலாம். இன்னும் கூடுதலாகப் போய் துணைப் பிரதமர் பதவி கூட கேட்கலாம். அந்த உரிமை இந்த 2 கட்சிகளுக்கு இருக்கின்றன. இல்லை என்றால் நிலையான ஆட்சியை எதிர்பார்ப்பது கஷ்டம்.
நிலையான ஆட்சியைத் தர முடியாத அளவுக்கு இந்தியா கூட்டணி பாஜகவைக் கொண்டுவந்து நிறுத்துவிட்டது. இது இந்தியா கூட்டணியின் சாதனை என்றுதான் சொல்வேன்.
ஏனென்றால், இப்போது பாஜகவினால் 'ஒரே நாடு ஒரே தேர்தல்’ போன்ற திட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது. அதை எல்லாம் தடுக்க இந்தக் கூட்டணி பயன்படும். கூடவே காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் அதை எதிர்த்து வலிமையாகப் போராடும்.
ஆகவே, மோடி அரசுக்குப் பல வகைகளில் நெருக்கடி இருக்கின்றது. சுலபமாக ஆட்சி செய்வது கடினம். ஏனென்றால், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.
தேர்தலில் தோற்கடிக்க முடியாத பிம்பம் எனக் கூறப்பட்டு வந்த மோடி, இந்தத் தேர்தலில் வாரணாசியில் பின்னடைவைச் சந்தித்தார். இதனால் யாராலும் தோற்க முடியாது என்று சொல்லப்பட்ட அவருடைய ஒளிவட்டம் சிதைந்து போய்விட்டது என்று எழுதி உள்ளது.
நமது நாட்டில் 3 ஆவது முறையாகப் பதவியேற்கிறார் என்று ஊடகங்கள் பெருமை பேசி வருகின்றன. ஆனால், வெளிநாட்டில் மோடியின் பிம்பம் உடைக்கப்பட்டுவிட்டது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “நிதிஷ்குமாரும் சந்திரபாபு நாயுடுவும் சபா நாயகர் பதவி கேட்பதாகத் தகவல்கள் வருகின்றன. கடந்த காலங்களில் பாஜக அவையில் எந்தக் கட்சியையும் பேசவே விடவில்லை.
அதனால், இந்த முறை அந்தப் பதவியைக் கேட்கிறார்கள் என நினைக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் நிர்மலா சீதாராமன் வகித்த நிதி அமைச்சர் பதவியைக் கூட இவர்கள் கேட்க முடியும்.
ஆனால், இந்த முறை நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக முடியாது” என்று கூறியுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications