Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விநாயகர் சதுர்த்தி: சிறிய கோவில்கள் திறந்திருக்கும் - சிலைகளை கரைக்க நடவடிக்கை - அரசு தகவல்

சிறிய கோவில்களின் முன்பு வைக்கப்படும் சிலைகளை இந்து அறநிலையத்துறை எடுத்து நீர்நிலைகளில் கரைக்கும் என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிறிய கோயில்கள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு, வழிபட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உரிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு கடந்த ஆண்டை போலவே கோவில்கள் முன் வைக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளது.

Hindu temple action to dissolve Ganesha idols - Government information in the High Court

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் படி விநாயகர் சிலை ஊர்வலகங்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. அதே நேரத்தில், வீட்டில் தனிப்பட்ட வகையில் நடத்தப்படும் விநாயக சதுர்த்தி விழா வழிபாட்டுக்கும், வழிப்பட்ட சிலைகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவோம் என இந்து முன்னணி, பாஜக, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 1.25 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ளதாக இந்து முன்னிணி அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள காடேஸ்வரா சுப்ரமணியம், தற்போது கொரோனா குறைந்து வருவதால் அரசு வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பூங்காக்கள் வழக்கம்போல் செயல்பட அனுமதித்து உள்ளது. இந்த ஆண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த இந்து முன்னணி மாநில நிர்வாக குழு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் இடங்களிலும், கோவையில் 4 ஆயிரம் இடங்களிலும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிவைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு நாள் முதல் 9 நாட்கள் வரை அந்தந்த ஊர்களில் வழக்கம்போல் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும். விசர்ஜன ஊர்வலமும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.அரசு அனுமதி தராவிட்டால் தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை நடத்துவோம் என்று கூறியுள்ளார் காடேஸ்வரா சுப்ரமணியம்.

இந்தநிலையில் இந்து முன்னேற்ற கழக திருப்பூர் தலைவர் கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் காரணமாக கொரோனா பரவல் மீண்டும் ஏற்படாத வகையில், நிலையான செயல்பாட்டு விதிகளை வகுக்க வேண்டுமென ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும் மனு கொடுத்தும், இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான விதிகளை வகுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழக அரசு தடை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தியன்று பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அனுப்பி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் பொது இடங்களில் இந்த ஆண்டும் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தார்.

மேலும், சிறிய கோவில்கள் திறந்து இருக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்த அவர், வழிப்பட்ட சிலைகளை இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள் கொண்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும் எனவும் விளக்கமளித்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+