"இந்துக்களுக்கு இனி பாதிப்பு.. கர்நாடகாவுக்கு மோசமான நாட்கள்” தேர்தல் முடிவால் பொங்கிய அமர் பிரசாத்!
சென்னை : கர்நாடசா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, பாஜக ஆட்சியைப் பறிகொடுத்திருக்கும் நிலையில், "கர்நாடகாவில் இந்துக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். கர்நாடகாவில் மோசமான நாட்கள் வரப் போகின்றன" என பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், வரலாறு காணாத அளவாக 73.91 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

இந்நிலையில், இன்று கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை தாண்டி முன்னிலை பெற்று வருவதால், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. முடிவு அறிவிக்கப்பட்ட 113 தொகுதிகளில் காங்கிரஸ் 68, பாஜக 30, மஜத 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 111 தொகுதிகளில் காங்கிரஸ் 68; பாஜக 34; மஜத 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் வெற்றி முகத்தைத் தொடர்ந்து, பெங்களூர் மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, "முதலாளிகளுக்கும் மாநிலத்தின் ஏழை மக்களுக்கும் இடையேயான போட்டி. இதில் ஏழை மக்கள், பண பலத்தை தோற்கடித்துள்ளனர். அன்பை இந்த நாடு நேசிக்கிறது என்பதை கர்நாடக மக்கள் காட்டியுள்ளனர். இது அனைவருக்கும் கிடைத்த வெற்றி." எனத் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக முயற்சித்தும் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற நாங்கள் தவறிவிட்டோம். தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு முடிவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். இந்த முடிவை வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாடமாக ஏற்றுக்கொள்கிறோம்" என்றார்.

இந்நிலையில், கர்நாடகா தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, "கர்நாடகாவில் இந்துக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். அதிகாரப் பசி கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகாவில் ஜனநாயகத்தை அழித்து எல்லாவற்றிலும் ஊழலைச் செயல்படுத்துவார்கள். தேச விரோதிகளுக்கு ஆதரவான மாநிலமாக கர்நாடகா மாறும். கர்நாடகாவில் மோசமான நாட்கள் வரப் போகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications