எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு -பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்!
சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளான இன்று அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழாசிரியராக பணியை தொடங்கி கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர் என்று பல பரிணாமங்களை அடைந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு இதோ;

புரட்சிக் கவிஞர்
'புரட்சிக் கவிஞர்' பாவேந்தர் பாரதிதாசன் கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு புதுச்சேரியில் 29.04.1891 அன்று மகனாகப் பிறந்தார். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை இணைத்து 'கனகசுப்புரத்தினம்' என்று அழைக்கப்பட்டார். தனது இளம் வயது தொடங்கி தமிழ் மொழி மீது தணியாத தாகமும் பற்றும் கொண்டிருந்தார். 1946 ஆம் ஆண்டு அவரது "அமைதி-ஊமை" என்ற நாடகத்திற்காக அவர் 'தங்கக் கிளி பரிசு' வென்றார்.

சாகித்ய அகாடமி
பாரதியாரிடம் நெருங்கிய நட்பு கொண்ட பாரதிதாசன், அன்று முதல் பாரதியை தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு, பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். 'பிசிராந்தையார்' நாடகத்திற்காக 1970ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் மறைவிற்குப் பிறகு 'சாகித்ய அகாடமி விருது' வழங்கப்பட்டது.

தமிழாசிரியர்
பாரதிதாசன் ஒரு தமிழாசிரியர், தமிழ்க் கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர் என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. பாவேந்தர் பாரதிதாசன் 86க்கும் மேற்பட்ட நூல்கள், கதைகள், கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

சங்கே முழங்கு
'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு', "தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்" என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் தான் பாவேந்தர் பாரதிதாசன். தன் படைப்பாற்றல் மூலம் தமிழுக்குப் பல வழிகளில் தொண்டாற்றிய பாரதிதாசன் 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசனை "தன்மான இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்" என்று பெரியாரும், 'புரட்சிக் கவிஞர்' என்று அண்ணாவும் போற்றினர். 06.05.1990 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் சிலையைத் கருணாநிதி நிறுவி அதனை திறந்தும் வைத்தார். 02.01.1968 அன்று நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பாவேந்தருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் 'புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன் சிலை திறந்து வைக்கப்பட்டது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications