Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சிதம்பரத்திற்குள் கருணாநிதி நுழையத் தடை!.. ” திமுகவின் குரலாக ‘முரசொலி’ மாறியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடு முரசொலி. இதை முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி, 1942இல் தொடங்கினார். அப்போது இந்தப் பத்திரிகை துண்டுப் பிரசுரமாக வெளிவந்தது.

இந்தத் துண்டறிக்கையைத் திருவாரூரிலிருந்த கிருஷ்ணா பிரஸ் அச்சகத்தில் முதன்முதலில் அச்சிடப்பட்டது. அதன் உரிமையாளரின் நாராயணசாமிப் பிள்ளை. இவர் ஒரு காங்கிரஸ்காரர் என்பது ஒரு சுவாரஸ்யமான செய்தி.

History of Murasoli as official newspaper of DMK

அந்தக் காலத்திலேயே நண்பர்களுடன் சேர்ந்து நிதி திரட்டி சுமார் ஆயிரம் பிரதிகளுக்குக் குறையாமல் 'முரசொலி' அச்சிட்டு வந்தார் கருணாநிதி. திருவாரூரைத் தாண்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் முரசொலி கவனம் பெற்றுவந்தது.

ஒருமுறை சிதம்பரத்துத் தீட்சிதர்களைப் பற்றி 'வருணமா? மரணமா?' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார் கருணாநிதி. அது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அதற்காகச் சிதம்பரம் நகரத்திற்குள் நுழையக் கருணாநிதிக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தளவுக்கு அனல் பறக்கும் பத்திரிகையாக, தன் இளம் வயதிலேயே முரசொலியை நடத்திப் பெயர் எடுத்தார் கருணாநிதி.

திமுகவை நிறுவிய அண்ணாதுரை, 'திராவிட நாடு' பத்திரிகையைக் கட்சியின் கொள்கை ஏராக நடத்திவந்தார். ஆனால், இரண்டாம் உலகப் போர் சமயம் இந்தியாவின் மீது சீனா போர் தொடுக்கப் போவதாக அச்சம் நிலவிய காலத்தில் 'திராவிட நாடு' கோரிக்கையைக் கைவிட்டார் அவர்.

History of Murasoli as official newspaper of DMK

அதற்கு அவர், 'வீடு இருந்தால்தான் ஓடு' மாற்ற முடியும் என்று விளக்கம் சொன்னார். அப்படி என்றால், முதலில் நமக்கு என்று ஒரு நாடு அவசியம், அதனால் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுகிறோம் என்ற பொருளில் அவர் சொன்ன எளிமையான உதாரணம்தான் இந்த ஓடு மாற்றும் கதை.

கோரிக்கையைக் கைவிட்ட பிறகு 'திராவிட நாடு' என்ற பெயரில் பத்திரிகை வெளியிட வேண்டிய தேவை இல்லாமல் போனது.

அதன்பின் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக அண்ணாதுரை விரல் நீட்டிக் காட்டிய பத்திரிகை 'நம்நாடு'. அண்ணாதுரைக்கு அடுத்து இரா. நெடுஞ்செழியன், இரா. செழியன், சி. பி. சிற்றரசு ஆகியோர் இதன் முகமாக இருந்தனர்.

அண்ணாதுரை பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தார். பெரியாருடன் கருத்துவேறுபாடு வந்தபோது தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக எம். பார்த்தசாரதி தொடங்கிய மாலையணி இதழில் ஆசிரியராக பணியாற்றினார்.

History of Murasoli as official newspaper of DMK

பின்னர் 1956இல் தி.மு.க.வுக்காக 'நம்நாடு'வை தொடங்கி, அதன் ஆசிரியராக இருந்தார். 1963இல் காஞ்சி வார இதழை நிறுவி அதன் ஆசிரியராக இருந்தார். மேலும் Home Land எனும் ஆங்கில வார இதழை 1957இல் தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார்.

இவரது மறைவுக்குப் பின்னர் அனைத்து பத்திரிகைகளும் ஒளிமங்கிப் போயின. அந்தக் காலகட்டத்தில் 'முரசொலி'யின் தேவை திமுகவுக்கு வேண்டி இருந்தது. 1942இல் துண்டுப்பிரசுரமாக முரசொலியைக் கருணாநிதி தொடங்கிய போது அவர் பள்ளிப்படிப்பு தேர்வைக்கூட ஒழுங்காக முடிக்காத மாணவராக இருந்தார். ஆகவே, பத்திரிகையில் ஆசிரியர்களுக்குப் பயந்து சேரன் என்ற புனைபெயருக்குள் மறைந்துகொண்டு எழுதிவந்தார்.

கருணாநிதிக்கு 'முரசொலி'யை நடத்துவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பெரிய பணபலம் தேவைப்பட்டது. அதுவும் இரண்டாம் உலகப் போர் நடந்துவந்த காலம் அது. காகிதங்களுக்குப் பஞ்சம் நிலவிய காலம்.

History of Murasoli as official newspaper of DMK

அந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் கருணாநிதி தனது கொள்கையின் 'போர்வாள்' ஆக முரசொலியைக் கொண்டுவந்தார். தொடர்ந்து பத்திரிகையை நடத்த வேண்டும் என்றால் பணம் தேவை. அந்தப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்றால் ஏதாவது வேலைக்குச் செல்ல வேண்டும்.

ஆனால், வேலைக்குச் செல்வதில் கருணாநிதிக்கு விருப்பம் இல்லை. முழு நேர அரசியல்தான் என்பதை இளம்பருவத்திலேயே முடிவு கட்டிவிட்டார் அவர். வேலைக்குப் போகாமல் பணம் சம்பாதிக்க ஒரு விழியைக் கண்டுபிடித்தார். கொள்கை விளக்கங்களை நாடகமாக எழுதித் தர முடிவு எடுத்தார்.

ஆர்.வி.கோபால் நடத்திவந்த நாடகக் குழுவில் கருணாநிதிக்கு ஓர் இடம் கிடைத்தது. நாடகம் எழுதிக் கொண்டே நடிக்கவும் செய்தார் கருணாநிதி. அதன் மூலம் வருவாய் ஈட்டினார். இவர் எழுதிய சாந்தா அல்லது பழனியப்பன் நாடகம் 25 நாட்கள் தொடர்ந்து ஓடியது. அதன் மூலம் நல்ல புகழைச் சம்பாதித்தார் மு.க.

History of Murasoli as official newspaper of DMK

இந்த நாடகத்திற்குத் தலைமை தாங்குவதற்காகத்தான் பாண்டிச்சேரி வந்தார் பெரியார். அங்கே நாடகத்தை நடத்த முடியாமல் ரகளை நடந்தது. அதன்பின் கருணாநிதி தாக்கப்பட்டார். மறு உயிர்பெற்ற கருணாநிதியை தன் 'குடிஅரசு' பத்திரிகையில் பணிபுரிவதற்காகப் பெரியார் ஈரோட்டுக்கு அழைத்துப் போனார்.

அங்கே அவருக்கு 40 ரூபாய் சம்பளம். அந்தச்சமயத்தில்தான் அவருக்கு சினிமா சான்ஸ் கிடைத்தது. அதன் வருமானத்தைக்கொண்டு, கட்சிப் பணி மற்றும் பத்திரிகைப் பணியை வேகப்படுத்தலாம் என சினிமா துறைக்குள் புகுந்தார். 'ராஜகுமாரி'க்கு வசனம் எழுதினார்.

இந்தியா விடுதலைப் பெற்ற சமயம் பெரியார், 'சுதந்திர தினத்தை' கறுப்பு நாளாக அறிவித்தார். ஆனால், அண்ணாதுரை, '200 ஆண்டு அவமான நீக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 15' கொண்டாடலாம் என்றார்.

History of Murasoli as official newspaper of DMK

இந்தக் கருத்து மோதலால் அண்ணாதுரை மற்றும் பெரியார் உறவில் சின்ன விரிசல் உண்டானது. அந்த நேரத்தில் பொருளாதார தட்டுப்பாட்டால் நின்றுபோன 'முரசொலி'யை மீண்டும் வேகப்படுத்தத் திட்டமிட்டார் கருணாநிதி. அதற்குப் பணம் தேவை என்பதால் மனைவியின் நகைகளை அடகு வைத்து பத்திரிகையைக் கொண்டுவந்தார்.

மீண்டும் முரசொலி 14-1-1948 முதல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. தனது பத்திரிகையில் கிறிஸ்து பிறந்த ஆண்டு முறையைக் கடைப்பிடிக்காமல் 'பெரியார் ஆண்டு' முறையை அறிமுகப்படுத்தினார். அதற்காக விழா எடுத்தார். தலைமை தாங்க பாவலர் பாலசுந்தரம் அழைத்தார். 'பராசக்தி' திரைக்கதையின் மூல ஆசிரியர் இவர்தான்.

திருவாரூரைத் தலைமையாகக் கொண்டு 'முரசொலி' 25 இதழ்கள் வெளியாகின.

அதன்பின்னர் 1954 முதல் சென்னையிலிருந்து வார இதழாக வெளிவரத் தொடங்கியது. 1960-ஜூலை வரை இது வார வெளியீடாகத் தொடர்ந்து. இதன் அலுவலகம் பல இடங்களில் செயல்பட்டது.

History of Murasoli as official newspaper of DMK

ஒரு கட்டத்திற்குப்பின் மௌண்ட் ரோட்டுக்கு அலுவலகம் மாறியது. அதாவது இப்போது அண்ணா சாலை ஆயிரம் விளக்கில் பாரத ஸ்டேட் வங்கி இருக்கும் இடத்தில்தான் முரசொலி பழைய கட்டிடம் இருந்தது.

வார இதழான முரசொலி 7 மாதங்களில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தக் காலத்திலேயே முரசொலியில் வெளியாகும் படைப்புகளுக்குச் சன்மானம் வழங்கப்பட்டதாகக் கவிஞர் சுரதா ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

History of Murasoli as official newspaper of DMK

முரசொலியில் கருணாநிதி, முதன்முதலாக 'பொன்முடிக்கு', 'நீட்டோலை என்ற தலைப்பில் கடிதங்கள் எழுதினார். அதன் பின்னர் தான் 'உடன்பிறப்பே' என்ற சொல்லைக் கையாளத் தொடங்கினார்.

17-09-1960க்குப் பின்னர் நாளேடாக 'முரசொலி' வெளியாக ஆரம்பித்தது. இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்த போது 'முரசொலி'அதைத் தைரியமாக நின்று எதிர்த்தது. பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பாற்ற 'எமர்ஜென்சியை' நையாண்டி செய்தது. அதுவே ஒரு பெரிய போராட்டக் கதை. இப்படி படிப்படியாக வளர்ந்து இன்று மணிவிழாவைக் கண்டுள்ளது கருணாநிதியின் முதல் குழந்தையான முரசொலி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+