"வெளியே வந்தால்.. தொலைச்சிடுவேன்.." போலீஸ் இருக்கும் போதே மிரட்டல்! மாவுக்கட்டு போட்டும் அடங்கவில்லை
தங்களை போலீஸார் பொய் வழக்கில் கைது செய்ததாகவும், அதை பத்திரிகையில் எழுதாவிட்டால் வெளியே வந்து தரமான செயலை செய்துவிடுவேன் என்றும் ரவுடி பகிரங்கமாக மிரட்டல் விடுத்தான்.
சென்னை: மாமூல் கேட்டு வடமாநில இளைஞரை வெட்டிய ரவுடிகளை சிறைக்கு அழைத்து சென்ற போது, அங்கிருந்த பத்திரிகையாளர்களை அவர்கள் பகிரங்கமாக மிரட்டிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
போலீஸார் முன்னிலையிலேயே பத்திரிகையாளர்களை மிரட்டுவதும், வெளியே வந்து பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி செல்வதும் அவர்களுக்குச் சட்டத்தின் மீது துளியும் பயம் இல்லாததையே காட்டுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதுபோன்ற நபர்கள்தான் பிற்காலத்தில் பெரிய ரவுடிகளாக மாறி சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

வடமாநில இளைஞருக்கு வெட்டு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ராஜா சிங் என்பவர் சாலையோரத்தில் ஹெல்மெட் விற்று வருகிறார். இவரிடம் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரவுடிகளான சதீஷ் குமார் (22) மற்றும் ராகேஷ் (23) ஆகியோர் மாமூல் கேட்டுள்ளனர். அதற்கு ராஜா சிங், இதுவரை வியாபாரம் ஏதும் ஆகவில்லை.. நாளை மாமூல் தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகள், ராஜா சிங்கை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

மடக்கிப் பிடித்த போலீஸ்
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு உடனடியாக வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜா சிங்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிசிடிவி காட்சிகளைப் பார்த்த போது ராஜா சிங்கை வெட்டியது சதீஷ் குமார் மற்றும் ராகேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மாவுக்கட்டு போட்டும்..
இந்நிலையில், அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்த போது, தங்களிடம் இருந்த கத்தியைத் தர மறுத்து அங்குமிங்கும் ஓடியதால் கீழே விழுந்ததில் அவர்களின் கை லேசாக உடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக மாவுக் கட்டும் போடப்பட்டது. இந்த சூழலில், அவர்களைக் காவல் நிலையத்தில் இருந்து சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்ற போது அங்குப் பத்திரிகையாளர்கள் இருந்தனர்.

பகிரங்க மிரட்டல்
அப்போது அவர்களைப் பார்த்த ராகேஷ் என்ற ரவுடி, மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். மேலும், போலீஸார் முன்னிலையிலேயே உதைப்பதைப் போலக் காலை தூக்கினான். அதுமட்டுமல்லாமல், தங்களை போலீஸார் பொய் வழக்கில் கைது செய்ததாகவும், அதை பத்திரிகையில் எழுதாவிட்டால் வெளியே வந்து தரமான செயலை செய்துவிடுவேன் என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தான். அப்பாவி இளைஞரை வெட்டிய குற்ற உணர்ச்சியும் இல்லாமல், போலீஸார் மீது பயமும் இல்லாமல் ரவுடி செய்த இந்த செயலுக்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications