சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. செங்கல்பட்டுக்கு ஏமாற்றம்
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்தது.. அங்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள 'மொந்தா' புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் நேற்று காலை முதலே மிதமான மழை பெய்தது. மாலை வேளையில் கனமழை பெய்தது. இன்றும் கனமழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் அறிவித்துள்ளது.
அதேநேரம் சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சென்னையின் புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்னையைப் போலவே கனமழை பெய்து வருகிறது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்படவில்லை.. காலையில் இருந்தே விடுமுறை அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மழை தற்போது ஓரளவு குறைந்துவிட்ட நிலையில், சிறிய அளவில் சாரல் மழையாகவே சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வருகிறது. புயல் இன்று காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளதால், ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. இந்த மொந்தா புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிதாக பாதிப்பு இல்லை. அதேநேரம் புயல் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications