காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 149 பள்ளிகளுக்கு விடுமுறை.. கோவில் குடமுழுக்கால் மாணவர்களுக்கு ஜாலி!
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி இன்று டிசம்பர் 8 ஆம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாநகர் பகுதியில் உள்ள 149 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டம் நேற்று மாலை 3 மணிக்கு ஓரிக்கை மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் நடைபெற்றறது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதற்கான சிறப்பு பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று, மூலவர் மகா சுவாமிகள் சன்னிதியில் வழிபாடு நடத்தினார்.

ஏகாம்பரநாதர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இக்கோயிலில், கடந்த 17 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், ஆகம விதிகளின்படி திருப்பணிகள் நிறைவுற்றதை தொடர்ந்து, இன்று காலை 5.45 மணியளவில் இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.
இந்த ஆன்மீக நிகழ்வை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்துள்ளனர்.. பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
காஞ்சிபுரம் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் நடைபெறும் விழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்டம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டும், உள்ளூர் மக்கள் இந்த விழாவில் பங்கேற்கும் வகையிலும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மற்றும் அதனை சுற்றியுள்ள 149 பள்ளிகளுக்கு இன்று டிசம்பர் 8 ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications