ஓமிக்ரான் பீதி.. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
சென்னை: கொரோனாவின், ஓமிக்ரான் பாதிப்பு பெரும் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் பொய்யானது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்களித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த புதிய வகை கொரோன வைரஸ் அதிகமான வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாகவும் உருமாற்றங்கள் அதிகம் கொண்டதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வைரசுக்கு பி11529 என்றும், ஓமிக்ரான் எனவும் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து சென்ற பயணிகள் உடலில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தடை
இதனையடுத்து உச்சபட்ச எச்சரிக்கையில் உள்ள உலக நாடுகள் புதிய வகை வைரஸ் தாக்கத்தால் தங்கள் நாடுகளுக்கு விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் வர தடை கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

தடுப்பூசி போட்டிருந்தாலும்
மேலும் இந்த வகை வைரஸ் தடுப்பூசியை எதிர்க்கும் தன்மை கொண்டதாக அறிகுறிகள் இருப்பதால் தடுப்பூசி போட்டு இருந்தாலும் மக்கள் எச்சரிக்கை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி, கல்லூரிகள்
அதன்படி, ஓமிக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க, 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மொரிசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த சூழலில் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவ வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படும் என்ற வதந்தி சமூகவலைதளத்தில் மிக வேகமாகப் பரவியது.
Recommended Video

குழப்பம்
இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகினர். இதுதொடர்பாக உரிய விளக்கம் அரசுத் தரப்பில் இருந்து வரவில்லை. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications