மிரட்டும் டிட்வா புயல்.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில் லீவு? விவரம்
சென்னை: புயல் காரணமாக ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், நாளை தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல நாளை சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல கடலூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகியிருந்த புயல், தற்போது தமிழ்நாட்டை நோக்கி முன்னேறி வருகிறது. இலங்கையில் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் சுமார் 56 பேர் பலியாகி இருக்கின்றனர். கடும் வெள்ளம் மற்றும் சூறாவளி காற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் நாளை புயல் தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து, நேற்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், துறை செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.
நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், சில மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. விடுமுறை என்பதால் நாளை சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என்றும், தனது உத்தரவில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
பள்ளிகளைப் போல, கல்லூரிகளுக்கு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்காலில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக சிதம்பரம் அண்ணாமலையார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த தேர்வுகள், வேறு தேதியில் நடைபெறும் என்றும், மாற்று தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு!












Click it and Unblock the Notifications