மழை.. இந்த 7 காரணங்கள் இருந்தால் தான் பள்ளிகளுக்கு விடுமுறை.. பள்ளி கல்வித்துறை போட்ட அதிரடி ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்தும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்ற கவலை மாணவர்களுக்கு உள்ளது. ஆனால் கீழ் கண்ட 7 முக்கிய காரணங்கள் இருந்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது. அதன்படிதான் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிக்கிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டி உள்ள கேரள மாநிலத்தின் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் மிதமான மழைக்கு பதில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் 37 செமீ மழை பெய்துள்ளது. இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் மிககனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதுதவிர தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு , திருவள்ளூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, மயிலாடுதுறை, நாகை கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

holidays for TN schools only if there are 7 main rain reasons listed below : School Education

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிப்பது வழக்கமாக உள்ளது.

சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கும் நிலையில் விடுமுறை விடப்படவில்ல்லை. லேசான மற்றும் மிதமான மழைபெய்தாலே பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று மாணவர்கள் தவறாக நினைக்கிறார்கள். மழைகாலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு 7 கட்டுப்பாடுகள் பள்ளி கல்வித்துறை விதித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளின் படியும். மழையின் தீவிரத்தை பொறுத்துமே மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கிறார்கள். அந்த ஏழு கட்டுப்பாடுகளை பற்றி இப்போது பார்ப்போம்.

1. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றாலோ, போக்குவரத்து பாதிக்கப்பட்டோலோ மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மிதமான மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது.

2. மழை நிலவரத்தை ஆராய்ந்து 3 மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

3. முதன்மை கல்வி அலுவலர்கள் மழையின் தீவிரத்தை ஆராய்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

4. மழையின் தீவிரத்தை உணர்ந்து அதிகம் பாதிக்க கூடிய குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும். மாவட்டம் முழுவதற்கும் விடுமுறை அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

5. கோயில் திருவிழாக்களின் போது அளிக்கப்படும் விடுமுறையை வேறொரு நாளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும்.

6. மழை காரணமாக அளிக்கப்படும் விடுமுறைகளை சனிக்கிழமைகளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் கற்க முடியும்.

7. மழையால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் மழைநீர் தேங்கியிருந்தால், உடனடியாக மழைநீர் வெளியேற்றப்பட்டு போதுமான வசதிகள் செய்து தரப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+