வீட்டு கடன்.. வங்கியில் உங்களுக்கு லோன் இருக்கா? வீட்டுக்கே வர்றாங்களாமே "ஸ்வீட்" ஆபீசர்ஸ்.. பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனிமேல் பேங்க்கில் இருந்து உங்களுக்கு போன் வந்தால், நீங்கள் அதை இனி அவாய்ட் செய்யவே முடியாது.. வேறு வழியில்லை.. ஏன் தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை செயல்படுத்தி வருகிறது.. அவ்வப்போது இந்த திட்டங்களில், சிறப்பு சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது.

Home Loan and SBI to send chocolates to borrowers who are likely to delay monthly EMI amount

அதிலும், கொரோனா காலத்தில் எஸ்பிஐ வங்கியின் சேவை அளப்பரியது. வேலைவாய்ப்பின்றி, பொதுமுடக்கத்தில் அவதிப்பட்டபோது, சிறப்பு சலுகை ஒன்றை எஸ்பிஐ அறிவித்திருந்தது.

பொதுமுடக்கம்: ஏதாவது அவசர காரணத்துக்காக உங்களுக்கு பணம் தேவைப்பட்டால், வீட்டிலிருந்தபடியே 45 நிமிடங்களுக்குள் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்றும், 6 மாதத்துக்கு மாத தவணை கட்ட வேண்டியதில்லை என்றும் அப்போது அறிவித்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்க்க வைத்திருந்தது.

முக்கியமாக, வீட்டுக்கடனுக்காக விண்ணப்பிக்கும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக வட்டி விகிதத்தில் கூடுதலான தள்ளுபடிகளையும் அறிவித்து வருகிறது.. இந்நிலையில், திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டு வாடிக்கையாளர்களை திகைக்க வைத்துள்ளது. அதாவது, வாங்கிய கடனை உரிய தேதியில் திருப்பி செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு, சாக்லெட் அனுப்பும் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி அமல்படுத்தியிருக்கிறது.

கஸ்டமர்கள்: வாங்கிய கடனை, பல கஸ்டமர்கள் திருப்பி செலுத்தாமல் உள்ளனர்.. இவர்களின் மாதாந்திர தவணைக்காலம் முடிந்த பிறகும்கூட, அந்த கடனை திருப்பி செலுத்தவில்லையென்றால், முதலில் வங்கியில் இருந்து போன் செய்து பேசுகிறார்கள்..

ஆனால், பேங்க்கில் இருந்து போன் என்றதுமே, பலரும் அதை எடுப்பதில்லை.. தவிர்த்து விடுகிறார்கள்.. அதனால்தான், வங்கியில் இருந்து வரும் அழைப்புகளை வாடிக்கையாளர்கள் எடுக்காமல் இருந்தால், அவர்களுக்கு கடனை செலுத்தும் எண்ணம் இல்லை என்றே கருதப்படுகிறது.

சாக்லெட்கள்: அதனால்தான்,முன்னறிவிப்பின்றி திடுதிப்பென்று, அவர்களது வீட்டிற்கே சென்று அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது மிகவும் பயனுள்ள உத்தியாகவும் கருதப்படுகிறது.. இதற்காகவே, சாக்லெட்களை டெலிவரி செய்வது என்றும், தனிப்பட்ட வருகைகளை மேற்கொள்வது என்றும், புதுபுது ஐடியாக்களை எஸ்பிஐ கையிலெடுக்க முடிவு செய்துள்ளது.

கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு, ஃபின்டெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் அவர்களை நேரில் சந்தித்து, ஒவ்வொருவருக்கும் ஒரு சாக்லெட்டுகளை கொடுத்து செல்வார்கள். பிறகு, அடுத்து வரவிருக்கும் EMI-களை அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள்..

சூப்பர் திட்டம்: இப்படி ஒரு திட்டத்தின் சோதனை கட்டத்தை எஸ்பிஐ நடத்தி வருகிறது.. 15 நாட்களுக்கு முன்புதான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.. ஒருவேளை, இந்த திட்டம் வெற்றி பெற்றால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வங்கி வெளியிடுமாம்.. ஆக, இனிமேல் போன் கால்களை அவாய்ட் செய்தாலும், பேங்க்கில் இருந்து வீட்டிற்கு ஆள் வந்து நின்றுவிடும்போல தெரிகிறது.. அதுவும் கையில் சாக்லெட்டுடன்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+