வீட்டுக்கடன் இஎம்ஐ பலருக்கும் மாறியது... பேங்க் ஆஃப் பரோடாவில் நடந்த சிறு தவறால்.. பெரிய ட்விஸ்ட்
சென்னை: மார்ச் மாதத்திற்கான வீட்டுக் கடன் தவணைகளை வசூலிக்கும்போது, பேங்க் ஆஃப் பரோடாவின் கணினி அமைப்பில் ஒரு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தை விட அதிகப்படியான வட்டி விகிதம் வாடிக்கையாளர்களிடம்கூட தவறுதலாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து வழக்கமான இஎம்ஐ தொகையை விட கூடுதல் தொகை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே அதிகப்படியான தொகையைச் செலுத்தி உள்ளார்கள். இதற்கு வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. எனினும் இந்த சிஸ்டம் தவறால், பல வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் வீட்டுக்கடன் வாங்கி உள்ளீர்களா.. உங்களிடம் வங்கி வழக்கமாக எடுக்கும் தொகையை விட கூடுதலாக இஎம்ஐக்கு வசூலித்தால் எப்படி இருக்கும்.. நிச்சயம் உங்களின் அன்றாட வாழ்க்கை செலவு தொடங்கி சிபில் ஸ்கோர் வரை பாதிக்கப்படும் தானே. அப்படித்தான் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் நடந்த ஒரு தவறு வாடிக்கையாளர்களை பாதித்துள்ளது.

செக் பவுன்ஸ், இசிஎஸ் பிரச்சனை
ஏனெனில் மார்ச் மாதத்திற்கான வீட்டுக் கடன் இஎம்ஐ தொகை பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு வழக்கமானதாக இல்லை.. அதிகமாகி உள்ளது. ஏன் அதிமானது என்றே தெரியாமல் பலர் இஎம்ஐ கட்டியுள்ளனர். இஎம்ஐக்கு அளவாக பணம் வைத்திருந்தவர்களின் நிலைமைதான் சிக்கல் ஆகி உள்ளது. செக் பவுன்ஸ், இசிஎஸ் பிரச்சனையை சந்தித்துள்ளார்கள். ஏன் இப்படி சிக்கல் வந்தது..
வீட்டுக் கடன் தவணை அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது
மார்ச் மாதத்திற்கான வீட்டுக் கடன் தவணைகளை வசூலிக்கும்போது, பேங்க் ஆஃப் பரோடாவின் கணினி அமைப்பில் ஒரு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தை விட அதிகப்படியான வட்டி விகிதம் வாடிக்கையாளர்களிடம்ட தவறுதலாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து வழக்கமான இஎம்ஐ தொகையை விட கூடுதல் தொகை எடுக்கப்பட்டுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா விளக்கம்
இந்தத் தவறு குறித்து 'எகனாமிக் டைம்ஸ்' செய்தி நிறுவனம் வங்கித் தரப்பிடம் கேட்டுள்ளது. அதற்கு பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. இது ஒரு எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு என்றும், இதனைச் சரிசெய்யத் தேவையான நிவாரண நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டதாகவும் வங்கி தெரிவித்துள்ளது. தவறுதலாகக் கூடுதலாக எடுக்கப்பட்ட தொகை, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கிற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு
மாதக் கடைசியில் அல்லது மார்ச் போன்ற நிதி ஆண்டு முடியும் தருணத்தில், திட்டமிடாத கூடுதல் தொகை கணக்கிலிருந்து எடுக்கப்படுவது நடுத்தர வர்க்கத்தினரின் பட்ஜெட்டைப் பாதிக்கும். கணக்கில் போதிய பணம் இல்லாத சூழலில், இந்தத் தவறான கூடுதல் தேவையால் 'செக் பவுன்ஸ்' அல்லது 'இசிஎஸ் ரிட்டர்ன்' போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு வங்கி அபராதம் விதிக்கக் கூடாது என்பது வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்
உங்கள் மார்ச் மாத வங்கி ஸ்டேட்மெண்ட்டை சரிபாருங்கள். வழக்கமான இஎம்ஐ விட கூடுதல் தொகை எடுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். கூடுதல் தொகை எடுக்கப்பட்டிருந்தால், உடனடியாக உங்கள் கிளை மேலாளரையோ அல்லது வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தையோ தொடர்பு கொண்டு புகார் எண்ணைப் பெற்றுக்கொள்ளுங்கள். கூடுதல் தொகை உங்கள் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications