ரஜினி மகள் அறிமுகம் செய்த Hoote App... எழுதப் படிக்க தெரியாவர்களுக்கு வரப்பிரசாதம்..!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, ஹூட் என்ற பெயரில் புதிய செயலி (Hoote App) ஒன்றை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என ஆசையிருந்தும் எழுதப் படிக்கத் தெரியாத காரணத்தால் பலருக்கும் அந்த ஆசையை நிறைவேற்ற முடிவதில்லை. இந்நிலையில் இவர்களுக்கான வரப்பிரசாதமாக ரஜினி மகளின் ஹூட் ஆப் பார்க்கப்படுகிறது.

ஆம், ஹூட் ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜாக யார் வேண்டுமானாலும் உலகின் எந்த மூலையிலிருந்தும் தங்கள் மனதில் தோன்றும் கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட முடியும். அம்டெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹூட் குரல் பதிவு செயலியை நிறுவியுள்ளார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா.
தற்போது தமிழ், இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 15 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளிலும் ஹூட் செயலி வெளியிடப்படுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தை அடுத்தக்கட்டமாக இந்த செயலி மேம்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்த செயலியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று டெல்லியில் தொடங்கி வைத்ததோடு தனது வாழ்த்தை முதல் குரல் பதிவாக பதிவு செய்துள்ளார். அலைபேசிகள் மட்டுமின்றி கடிகாரம் உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களிலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு போட்டியாக ஹூட் செயலி விரைவில் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயலியை உருவாக்கியுள்ள நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவை பொறுத்தவரை கிரியேட்டிவாக ஏதேனும் ஒன்றை செய்துகொண்டே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
ரஜினிகாந்தை வைத்து 3d தொழில்நுட்பத்தில் படம், அனிமேஷன் பணிகள் என அவர் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டினார். இப்போது அடுத்தகட்டமாக ஹூட் என்ற செயலியை வடிவமைத்துள்ளார். இதனிடையே சவுந்தர்யாவின் கணவர் குடும்பத்தினர் மருந்து உற்பத்தி நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அபெக்ஸ் லேபாரட்டரீஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தை சவுந்தர்யாவின் கணவர் விசாகன் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. அரவிந்த் பார்த்தசாரதி என்பவர் ஹூட் செயலிக்கான (Hoote App) ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications