சென்னை ஏர்போர்ட் வளாகத்தில் நள்ளிரவில் சினிமா பாணியில் நடந்த திகில் சேசிங்.. பரபரப்பு
சென்னை: சினிமா பாணியில் நள்ளிரவில் பழவந்தாங்கல் சப்வேக்குள் பைக்கில் வந்தவரை வழிமறித்து தங்க செயினை பறித்துவிட்டு,மற்றொரு பைக்கில் தப்பி சென்ற 3 போ் கொண்ட வழிப்பறி கும்பலை போலீசார் விரட்டி சென்றனர். அப்போது அவர்கள் சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் புகுந்து மழைநீர் கால்வாய்க்குள் விழுந்தனர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனா்.
சென்னை பழவந்தாங்கல் சப்வேயில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பைக்கில் வந்த ஒருவரை 3 போ் கொண்ட கும்பல் வழிமறித்தது. ,அவா் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க செயினை பறித்தனா். பின்பு செயின் பறிப்பு ஆசாமிகள் 3 பேரும் ஒரே பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் ஜிஎஸ்டி சாலை நோக்கி பறந்தனா்.
செயின் பறிகொடுத்தவா் விடாமல் பைக்கில் விரட்டி வந்தார். .அதோடு பைக் நம்பரை குறிப்பிட்டு அவசர போலீஸ் 100 க்கும் தகவல் கொடுத்தார். செயின் பறிப்பு ஆசாமிகளின் பைக் மின்னல் வேகத்தில் ஜிஎஸ்டி சாலையில் வந்து சென்னை விமானநிலைய வளாகத்திற்குள் நுழைந்தது. ஆனாலும் விடாமல் செயினை பறிகொடுத்தவரும் விரட்டி வந்தார்.

விரட்டிய போலீஸ்
இதற்கிடையே போலீஸ் கட்டுப்பாட்டு அறை தகவலின் பேரில்,அப்பகுதியில் இரவு ரோந்து பணியிலிருந்த போக்குவரத்து போலீசார் சென்னை விமானநிலைய போலீசாா் ஆகியோரும் விரட்டினா். விமானநிலைய வளாகத்திற்குள் புகுந்த செயின் அறுப்பு ஆசாமிகள், விமானநிலைய நிர்வாக அலுவலகம் அருகே சென்று,விமானநிலைய ஊழியா்களின் குடியிருப்பு பகுதிக்கு சென்றனர்-

கல்வாயில் விழுந்தனர்
பின்பு BCAS அலுவகம் அருகே உள்ள சாலை வழியாக மீண்டும் ஜிஎஸ்டி சாலைக்கு செல்ல முயற்சித்தனா். ஆனால் விமானநிலைய வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரிகார்டில் பைக் மோதி,அருகே உள்ள மழைநீா் கால்வாயில் விழுந்தனா்.

போலீசார் விசாரணை
உடனடியாக விரட்டி வந்த போலீசார் மற்றும் விமானநிலைய ஊழியா்கள் சூழ்ந்து கொண்டனா். கால்வாயிக்குள் விழுந்து கிடந்தவா்களை தூக்கி, நன்கு கவனித்து போலீசார் விசாரணை நடத்தினா். அதற்குள் செயினை பறிகொடுத்தவரும் அங்கு வந்துவிட்டார்.

போலீஸ் ஸ்டேசன்
அதன்பின்பு அவா்களை சென்னை விமானநிலைய போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்துகின்றனா்.சென்னை விமானநிலைய வளாகத்திற்குள் நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications