சென்னை ஏர்போர்ட்டில் 2 மாதங்களில்.. ரூ.167 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்.. பிரபல யூடியூபர் கைது
சென்னை: இலங்கை தங்கக் கடத்தல் கும்பலுக்கு உதவியாக இருந்ததாகக் கூறப்படும் பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 2 மாதங்களாகப் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தைக் கடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது.. அவர் இலங்கை தங்கக் கடத்தல் கும்பலுக்கு எப்படி உதவினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்டை நாடுகள் வழியாக நமது நாட்டிற்குத் தங்கம் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தங்கக் கடத்தல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது

இதற்கிடையே இலங்கை தங்கக் கடத்தல் கும்பலுக்கு உதவியாக இருந்ததாகக் கூறப்படும் பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது.. அவர் இலங்கை தங்கக் கடத்தல் கும்பலுக்கு எப்படி உதவினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தங்கக் கடத்தல்: அதாவது இலங்கை தங்கக் கடத்தல் கும்பலுக்கு உதவியதாக முகமது சபீர் அலி என்ற பிரபல யூடியூபர் தான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஏர்ஹப் என்ற கடையை நடத்தி வந்துள்ளார். ஏர்போர்ட்டில் அந்த கடையை அமைக்கத் தேவையான குத்தகை பணம் அவரிடம் இல்லாத நிலையில், அதற்கும் கூட தங்கக் கடத்தல் கேங்கை சேர்ந்த அபுதாபியில் வசிக்கும் ஒருவர் தான் நிதியுதவி செய்தார்.
அதாவது முகமது சபீரால் குத்தகை தொகை ரூ.70 லட்சத்தைச் செலுத்த முடியாத நிலையில், அபுதாபியைச் சேர்ந்த அந்த நபரே அந்த தொகையைச் செலுத்தியுள்ளார். இவர்களின் கடை சென்னை ஏர்போர்ட்டில் விமானங்கள் புறப்படும் பகுதியில் அமைந்துள்ள நிலையில், அவர்கள் கடந்த 2 மாதங்களில் சுமார் ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கத்தைக் கடத்த உதவியுள்ளனர். இதையடுத்து சபீர் அலி மற்றும் அவரது ஊழியர்கள் 7 பேரை சுங்கத்துறை கைது செய்தனர்.
சில்லறைக் கடைகள்: சென்னை விமான நிலையத்தில் சில்லறைக் கடைகளைக் குத்தகைக்கு விடும் வித்வேதா பிஆர்ஜி நிறுவனத்திடம் இருந்து ஏர்ஹப் இந்த கடையை அமைக்க ஒப்பந்தம் பெற்றுள்ளது. அவர்கள் தங்கக் கடத்தலுக்கு உதவியது வெளிச்சத்திற்கு வந்தவுடன், ஏர்ஹப் உடனான ஒப்பந்தத்தை அவர்கள் ரத்து செய்துள்ளதாக வித்வேதா பிஆர்ஜி தெரிவித்துள்ளது.
இந்த ஏர்ஹப் என்பது பொம்மைகள், நினைவுப் பொருட்கள் மற்றும் ஹேண்ட் பேக்குகளை விற்பனை செய்யும் கடையாகும். ஆனால் பெயருக்குத் தான் இந்த கடை என்றாலும் பின்னணியில் தங்கக் கடத்தல் நடக்கிறது. சென்னை ஏர்போர்ட்டில் transit பயணிகளாக வருவோர் கடத்தல் தங்கத்தை இவர்களிடம் கொடுத்துவிடுவார்கள்.. அதை வெளியே இருக்கும் நபர்களுக்குக் கொடுப்பதே இவர்கள் வேலையாகும். இதற்காகவே முகமது சபீர் மற்றும் ஏழு பேரை அந்த கேங் வேலைக்கு எடுத்து பயிற்சி கொடுத்துள்ளது.
தங்கக் கடத்தல் கேங்: சென்னையில் வசிக்கும் 29 வயதான முகமது சபீர் அலி யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.. இந்த யூடியூப் சேனல் மூலமாகவே தங்கக் கடத்தல் கேங் முகமது சபீரை தொடர்பு கொண்டுள்ளனர். அதன் பிறகு தங்கக் கடத்தல் கும்பல் கொடுத்த ஐடியாவின் பெயரிலேயே சென்னை ஏர்போர்ட்டில் இந்த கடையைத் திறந்துள்ளார்.
சபீர் அலிக்கு சில்லறை விற்பனையில் அனுபவம் இல்லை.. ஆனால் அபுதாபியில் உள்ள இலங்கை தங்கக் கடத்தல் கேங் கொடுத்த பணத்தின் மூலமாகவே அவர் இந்த சில்லறை விற்பனை கடையை தொடங்கியுள்ளார்.. கடந்த பிப். மாதம் இந்த கடை திறக்கப்பட்ட நிலையில், அதற்கான பணியாளர்களை சபீர் ஆன்லைன் மூலமாகவே எடுத்துள்ளார்.
267 கிலோ தங்கம்: அதன் பிறகு கடந்த 2 மாதங்களில் சுமார் ரூ. 167 கோடி ரூபாய் மதிப்புள்ள 267 கிலோ தங்கத்தைக் கடத்த உதவியுள்ளனர். இதற்காக அவர்களுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை கமிஷன் கிடைத்துள்ளது.
இந்த ஏர்ஹப்பில் வேலை செய்யும் எட்டு ஊழியர்களும் தற்காலிக ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தான். ஆனால் அவர்களுக்கு சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அமைப்பு வழங்கிய ஐடி கார்ட் இருந்துள்ளது. தற்காலிக ஊழியர்களுக்கு இந்த ஐடி கார்ட் வழங்குவது விமான நிலைய விதிகளை மீறுவதாகும். எனவே அது குறித்தும் அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
-
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
தூத்துக்குடி மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... இரவில் வந்ததுமே அப்படியொரு மகிழ்ச்சி -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications