Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த வீடியோவை நோட் பண்ணீங்களா? அன்னபூரணிக்கு இவ்வளவு பக்தர்கள் வந்தது எப்படி? என்னதான் நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்னபூரணி அரசு அம்மா.. கடந்த 2 நாட்களாக சோஷியல் மீடியாவில் இவர்தான் டிரெண்ட். தான்தான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு இந்தியாவில் தோன்றிய பலர் இருக்கிறார்கள். இதில் தங்களுக்கு என்று பெரிய அளவில் பக்தர்களை கொண்டு சிலர் வெற்றியும் பெற்று வலம் வந்து இருக்கிறார்கள்.

Recommended Video

    அன்னபூரணி ஆதிபராசக்தியின் அவதாரமா? யார் இந்த பெண் சாமியார் ? | Oneindia Tamil

    இன்னும் சிலரோ ஏதாவது தவறு செய்து போலீசில் மாட்டி சிறைக்கு சென்ற சம்பவங்களும் நடந்துள்ளன. ஏற்கனவே ஏகப்பட்ட சாமியார்கள் நாட்டில் இருக்கும் நிலையில் தன்னை தானே அவதாரம் என்று அறிவித்து தோன்றி இருப்பவர்தான்.. அன்னபூரணி என்னும் அன்னபூரணி அரசு அம்மா.

    பேஸ்புக், ட்விட்டர் முழுக்க கடந்த 2 நாட்களாக இவரின் வீடியோதான் டிரெண்டிங் டாப்பிக். இந்த வீடியோக்களை ஒவ்வொன்றாக பார்த்ததில் சில வீடியோக்கள் சிரிப்பு மூட்டும் விதமாகவும், சில வீடியோக்கள்.. யார்டா நீ (சமுத்திரக்கனி குரலில் படிக்கவும்) என்று சொல்லும் அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருந்தது.

    அன்னபூரணி பேஸ்புக் பக்கம்

    அன்னபூரணி பேஸ்புக் பக்கம்

    அன்னபூரணி தனது அருள்வாக்கு வீடியோக்கள் மார்க்கெட்டிங் செய்வதற்கு என்று பேஸ்புக் பக்கம் ஒன்றை வைத்து இருக்கிறார். இதில்தான் அதிர்ச்சி தரும் தனது "அவதார் பார்ட் 3" வீடியோக்களை (பார்ட் 2 தான் கேமரூன் எடுத்துக்கிட்டு இருக்கிறாரே) வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார். நம்மைப் படைத்த இறைசக்தியான அகிலத்தை ஆளும் நம் தாய் அவர்கள் தன் மீது அன்பும் பக்தியும் கொண்ட அனைத்து மக்களுக்காகவும் இங்கு அவதாரமாக வந்துள்ளார்..

    பேஸ்புக் முகப்பு

    பேஸ்புக் முகப்பு

    தெய்வத்தாயான அம்மாவை தரிசித்து அம்மாவின் அருளையும் ஆசியையும் பெறுவதன் மூலம் தீராத உடல் பிரச்சனை, மன பிரச்சனை மற்றும் அனைத்து வித கஷ்டங்களும் தீர்ந்துவிடும், என்பதுதான் இந்த பேஸ்புக் பக்கத்தின் முகப்பு விளக்கம். அன்னபூரணி பக்தர்களிடம் நேற்று பேசிய போதே.. அவர்கள் அன்னபூரணி என்ற பெயரை கூட சொல்ல மறுத்துவிட்டனர். அவர்களை அம்மா என்றுதான் சொல்லுவோம், பெயரை நீங்களே தேடி கண்டுபிடித்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்... அந்த அளவிற்கு பய பக்தியாம்!

    பய பக்தி

    பய பக்தி

    அதிலும் ஒரு பக்தர் ஒரு படி மேலே போய்.. மேல்மருவத்தூரில் மக்கள் கும்பிடும் உண்மையான ஆதிபராசக்தி அம்மனே இவர்தான்.. அந்த அம்மன்தான் இப்போது அவதாரமாக வந்துள்ளனர். பங்காரு அடிகளார் கும்பிடும் அம்மனே இவர்தான். அது அவருக்கும் விரைவில் புரியும் என்று கூறி அதிர்ச்சி தந்தார். அட என்னங்க இது புது சர்ச்சையா இருக்கு என்று நினைத்துக்கொண்டுதான் அன்னபூரணியின் பேஸ்புக் வீடியோக்களை ஆராய்ந்தோம்.

    சிரிப்பு வீடியோ

    சிரிப்பு வீடியோ

    அன்னபூரணியின் பேஸ்புக் பக்கத்தில் பல வீடியோக்கள் சிரிப்பு மூட்டும் விதத்தில் இருந்தன. ப்ரீலேன்சுக்கு கல்யாண் வீடியோ எடிட் செய்யும் யாரையோ அழைத்து வந்து நிறைய வீடியோக்களை எடுத்து பின்னணியில் ஆடி மாசத்தில் போடப்படும் அம்மன் பாடல்களை போட்டு அவரின் பக்கம் முழுக்க அப்லோட் செய்து உள்ளனர். 20க்கும் மேற்பட்ட வீடியோக்களை இப்படி எடிட் செய்து பதிவேற்றி உள்ளனர். அன்னபூரணி முழு கெட்டப்பில் மாலை அணிந்து, கையை ஆசி வழங்குவது போல அசையாமல் வைத்துக்கொண்டு நடந்து வரும் வீடியோக்கள்தான் அதிகம் இருக்கிறது.

    வைரல் வீடியோக்கள்

    வைரல் வீடியோக்கள்

    அதிலும் சில வீடியோக்களில் அன்னபூரணி நடந்து வரும் போதே, அவரின் பாதை முழுக்க பூக்களை தூவி பக்தர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். தாமரை மாலை அணிந்து கண் முழுக்க சிவந்து கண்ணீர்விட்டபடி அன்னபூரணி அருள் வாக்கு (???) அளிக்கும் வீடியோக்களும் கூட கண்ணில் பட்டன. இதெல்லாம் போக ஒரு படி மேலே போய் பல நூறு ஆண்கள் அங்கே கூடி நின்றனர்.

    ஆட்டம்

    ஆட்டம்

    அப்போது உடலில் எதோ வைப்ரேஷன் வந்தவர் போல ஆடிக்கொண்டே அன்னபூரணி அருள்வாக்கு வழங்கிய வீடியோவும் பெரிய வைரலாகி உள்ளது. ஆனால் நமக்கு அதிர்ச்சி தந்த வீடியோ என்றால்.. வயதான ஒரு பெண்மணி அன்னபூரணியின் காலில் விழுந்து கிடந்தபடி.. கால் பாதங்கள் இரண்டையும் தனது காதில் வைத்துக்கொண்டு.. ஹை டெசிபலில் கத்திக்கொண்டு இருந்தார். எங்க அம்மா வந்துட்டாங்கடா.. இனி எந்த ஆட்டமும் இருக்காது என்று வயதான பெண் கூறிய வீடியோ அதிர்ச்சி தரும் விதத்தில் இருந்தது.

    சந்தேகம்? எப்படி?

    சந்தேகம்? எப்படி?

    இந்த பெண்மணி அன்னபூரணி நீண்ட நாட்களுக்கு முன்பு எல்லாம் இப்படி அருள்வாக்கு வழங்கவில்லை. திடீரென தோன்றிய இவருக்கு எப்படி இத்தனை பின் தொடர்பாளர்கள் என்ற கேள்விதான் எழுந்தது. அதிலும் எப்படி கண்மூடித்தனமாக எப்படி இவ்வளவு பக்தர்கள் என்ற கேள்வி எழுந்தது. அதிலும் சில வயதான ஆண்கள், பெண்கள் அன்னபூரணி காலில் விழுந்து கண்ணீர் விடும் வீடியோக்கள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தனர்.

    கல்ட் குழு

    கல்ட் குழு

    ரஜினியின் கழுகு படத்தில் வரும் கல்ட் சாமியார் குழு போல பார்க்கவே கொஞ்சம் பீதியாகவும் .. கொஞ்சம் காமெடியாவும் அன்னபூரணி பேஸ்புக் பக்கம் இருந்தது. எங்களிடம் போனில் பேசிய இரண்டு பக்தர்களும் (கட்டுரை இந்த லிங்கில் உள்ளது) நேற்று கண்ணீர் வடித்தனர். வீடியோக்களில் இருக்கும் பலரும் கண்ணீர் வடித்தபடி காட்சி அளித்தனர்... ஆம் அன்னபூரணி அருகே செல்லும் எல்லோரும் கண்ணீர்வடித்தபடி கிளிசரின் உருவாக காட்சி அளித்தனர். எப்படி வெகு சில நாட்களில் இவருக்கு இப்படிப்பட்ட தீவிர பக்தர்கள் தோன்றினார்கள் என்பதுதான் வியப்பாக உள்ளது.

    மறுப்பு

    மறுப்பு

    அன்னபூரணி பக்தர்களிடம் அவர் எப்படி இந்த அருள்வாக்கு பயணத்தை தொடங்கினார், எப்படி அவருக்கு இவ்வளவு பக்தர்கள் வந்தார்கள் என்று கேட்டதற்கு.. அவரின் பக்தரோ.. ஹிஸ்டரி எல்லாம் சொல்ல முடியாது சார்.அவங்க ரொம்ப நாளா அருள் வாக்கு வழங்குகிறார்கள். நீங்க நேரில் வந்து பாருங்க வேறு எதுவும் சொல்ல முடியாது என்று கூறிவிட்டு போனை துண்டித்தார்.

    இதனால் அவர் எப்படி இந்த இடத்திற்கு வந்தார் என்பதுதான் புதிராக உள்ளது.இந்த நிலையில்தான் தற்போது அன்னபூரணி அருள்வாக்கு நடத்தும் நிகழ்ச்சிக்கு போலீஸ் தடை விதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+