60.. 11.. நம்பரை கேட்டதுமே வெலவெலத்த ஓபிஎஸ்.. பேப்பரை பார்த்ததுமே அதிர்ந்த எடப்பாடி.. கிளைமாக்ஸ்?

எடப்பாடி பழனிசாமிக்கு 2 விதமான சாய்ஸ்கள் இருப்பதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடிதடி பஞ்சாயத்து வரை அதிமுக சென்றுவிட்ட நிலையில், இதன் தீர்வு என்னவாக இருக்கும் என்ற குழப்பமும், கலக்கமும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருமே கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறார்கள்.. இரு தரப்பிலுமே அவரவர் ஆதரவாளர்களும் கொந்தளித்து உள்ளனர்.

பெரும்பாலும் எடப்பாடிக்கே சாதகமான சூழல் உள்ளது 4 நாட்களுக்கு முன்பே, ஆலோசனை குழுவில் தெரிந்துவிட்டது.. இருந்தாலும், ஓபிஎஸ்ஸை தவிர்த்துவிட்டு, எந்த முடிவையும் எடுக்க முடியாத சூழல் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், தான் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது, தன் கையெழுத்து இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் ஓபிஎஸ் இருப்பதாக சொல்கிறார்கள்.. இல்லாவிட்டால், இது தொடர்பாக சட்டரீதியான பிரச்சனையை கிளப்புவார்.. அல்லது டெல்லி சப்போர்ட்டை வைத்து எடப்பாடிக்கு நெருக்கடி தருவார் என்றே கணிக்கப்படுகிறது.. அதனால்தான், ஒற்றைத் தலைமைக்கு ஓபிஎஸ்சை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டு வருகிறார்.. இதற்கான காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டு வருகிறார்.

 கோர்ட் - இலை

கோர்ட் - இலை

இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ் பகிரங்கமாகவே தெரிவித்துவிட்டதுடன், அதுகுறித்து ஈபிஎஸ்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று, பிரச்சனையை எடப்பாடி பக்கமே திசை திருப்பி விட்டுள்ளார்.. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ இன்னும் பதில் சொல்லவில்லை.. ஒருவேளை பகிரங்கமாக ஒற்றை தலைமை பற்றி சொல்லிவிட்டால், ஓபிஎஸ் கோர்ட்டில் போய் நிற்பார் அல்லது தேர்தல் ஆணையத்தில் போய் நிற்பார்.. இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிட்டு செக் வைப்பார் என்பதை எடப்பாடி உணராமல் இல்லை.

சமாதானம்

சமாதானம்

அதனாலேயே, ஓபிஎஸ்ஸை பகைத்து கொள்ளாமல், அமைதி போக்கில் சமாதான முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. எப்படியும் பொதுக்குழுவுக்கு முன்பே, இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.. மேலும் ஓபிஎஸ் கெடுவும் விதித்துள்ளதால், அதிமுகவே டென்ஷனில் உள்ளது.. நேற்று ராமநாதபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை பார்த்தால், ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட அரசியல் என்னவாக இருக்கும் என்ற யூகமும் கிளம்பி உள்ளது.. சசிகலா + ஜெயலலிதா + ஓபிஎஸ் 3 பேரின் போட்டோக்களை வைத்து போஸ்டர்களை ஒட்டி உள்ளார்கள்..

 ஸ்டன் ஆன எடப்பாடி

ஸ்டன் ஆன எடப்பாடி

அதற்கேற்றார்போல், சசிகலா விஷயத்தில் ஓபிஎஸ் இந்த நிமிடம் வரை கறார் தன்மையை வெளிப்படுத்தவும் இல்லை. போதாக்குறைக்கு இன்று காலையில், ஓபிஎஸ் குறித்த விளம்பரங்கள் செய்தித்தாள்களில் வந்ததுமே, எடப்பாடி இன்னும் கலக்கமாகி விட்டார்.. இதே யுக்தியைதான், கடந்த வருடமும் ஓபிஎஸ் கையில் எடுத்தார்.. அதாவது, யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் தலைதூக்கும்போது, ஓபிஎஸ் குறித்த விளம்பரங்கள் வெளியாகி இருந்தது.. இத்தனைக்கும் அப்போது, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று ஓபிஎஸ்தான் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

 நியூஸ்பேப்பர்

நியூஸ்பேப்பர்

"என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த அண்ணன் ஓபிஎஸ்ஸுக்கு என்னுடைய நன்றி" என்று எடப்பாடியாரும் நன்றிகளை சொல்லியிருந்தார். அதற்கு பிறகுதான் இந்த விளம்பரங்கள் வெளியாகி, எடப்பாடிக்கு குழப்பத்தை தந்தது.. இப்போதும் அதே யுக்தியை ஓபிஎஸ் கையில் எடுத்துள்ளார்.. எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக் கொண்டிருந்த எடப்பாடிக்கு இன்றைய தின பேப்பரை பார்த்ததுமே அதிர்ச்சிதான் ஏற்பட்டுள்ளது.. எடப்பாடி பழனிசாமிக்கு கிட்டத்தட்ட 90 சதவீத ஆதரவு இருப்பதாக தெரிகிறது..

 11 பேர் மட்டுமே?

11 பேர் மட்டுமே?

இதை தெரிந்துகொண்டுதான், ஓபிஎஸ், முன்கூட்டியே பிரச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டார், அதனாலேயே அவசர அவசரமாக செய்தியாளர்களையும் சந்தித்தார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. எடப்பாடி பழனிசாமிக்கு 60க்கும் மேற்பட்ட மா.செ.க்கள் ஆதரவு என்றும், ஓபிஎஸ்சுக்கு வெறும் 11 பேர் மட்டுமே ஆதரவு என்றும் செய்திகளும் வெளியாகிய நிலையில், இதுவும் ஓபிஎஸ்ஸுக்கு பயத்தை தந்துவிட்டதாம்..

 போஸ்டிங் சிக்கல்

போஸ்டிங் சிக்கல்

ஒருவேளை, ஓபிஎஸ்ஸின் வழிக்கு எடப்பாடி பழனிசாமி, இணங்கி சென்றால் இப்போதுபோலவே, பாஜக - திமுக ஆதரவு மனப்பான்மையில் ஓபிஎஸ்ஸின் செயல்பாடுகள் இனியும் தொடரக்கூடும் என்கிறார்கள்.. அல்லது ஓபிஎஸ்ஸை, புறக்கணித்தால், இலையை முடக்கி நிச்சயம் கட்சிக்கே செக் வைப்பார்.. இந்த பிரச்சனைக்கு 2 தீர்வு இருப்பதாக சொல்கிறார்கள்.. ஒன்று புது போஸ்டிங் உருவாக்கி, இரு தலைவர்களும் கட்சியை நடத்துவது, அல்லது எது வந்தாலும் பார்த்துக் கொள்வோம் என்ற துணிச்சலுடன் எடப்பாடி களமிறங்குவது.. இதில் எது நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

ராஜன் செல்லப்பா

ராஜன் செல்லப்பா

இதனிடையே ராஜன் செல்லப்பா சொல்லி உள்ள கருத்து, முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.. அதாவது "மாவட்டச் செயலாளர் 90 சதவீதம் பேர் ஒற்றை தலைமையை எதிர்பார்க்கின்றனர்... நல்ல தலைமையை உருவாக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.. கிளைக் கழகச் செயலாளர், தொண்டர்களின் எண்ணங்களை இனி நிறைவேற்ற போகிறோம்... அவர்கள் நல்ல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும். 2019 ஆம் ஆண்டே ஒற்றைத் தலைமையின் கீழ் வர வேண்டும் என்று நான் சொன்னேன்.. இப்போது பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுப்பதை ஏற்று ஒற்றுமையாக அனைவரும் செயல்பட வேண்டும். கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் சரி...

சேவல் சின்னம்

சேவல் சின்னம்

ஓபிஎஸ் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிகாரப்பூர்வமான கூட்டம் கிடையாது.. அதற்கு எந்தவிதமான அழைப்பும் எனக்கு வரவில்லை. அன்று, ஜானகி பெருந்தன்மையாக விட்டு கொடுத்தது போல் திறமையானவர்களுக்கு விட்டு கொடுத்தால் கட்சி சிறப்பாக இருக்கும். எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா தனிக் கட்சி ஆரம்பித்தபோது, சேவல் சின்னத்தில் போட்டியிட்டவர் எடப்பாடி.. மேலும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியும்கூட.. 4 வருடங்கள் அதிமுக ஆட்சியை சிறப்பாக நடத்திய கட்சியை கட்டிக் காப்பாற்றியவருக்கு இன்னொருவர், தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும்" என்றார்.. ராஜன் செல்லப்பா சொல்லும், 90சதவீத ஆதரவு என்ற தகவல், ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் கலக்கத்தை தந்து வருவதாகவே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+