சென்னையை அதிர வைத்த கொள்ளை.. ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது எப்படி?.. கொள்ளையர்கள் திடுக்கிடும் தகவல்
சென்னை: சென்னை எஸ்.பி.ஐ ஏ.டி.எம். மையங்களில் உள்ள டெபாசிட் இயந்திரங்களை குறிவைத்து வடமாநில கும்பல் நடத்திய கொள்ளை தமிழ்நாட்டையே அதிர வைத்தது.
Recommended Video
சென்னையின் பல இடங்களில் உள்ள மையங்களில் டெபாசிட் இயந்திரத்தை உடைக்காமல் கிட்டத்தட்ட ரூ.1 கோடி வரை கொள்ளையடித்துள்ளனர் வட மாநில கொள்ளையர்கள்.
டெபாசிட் மிஷினில் ஏடிஎம் கார்டை போட்டு, பின் நம்பர், வித்ட்ராயல் போன்ற விவரங்களை என்டர் செய்துள்ளனர். பணம் வெளியே வந்ததும் சென்சாரை மறைத்து விட்டனர்.

நூதன கொள்ளை
பணத்தை கஸ்டமர் எடுக்காவிட்டால் 20 வினாடியில் பணத்தை ஏடிஎம் மீண்டும் உள்ளிழுத்துக்கொள்ளும். சென்சாரை மறைத்து விட்டு பணத்தையும் கொள்ளையர் கையில் பிடித்துக் கொள்கின்றனர். இதனால் பணத்தை திரும்ப உள்ளிழுத்துச் சென்றதைப் போல ஏடிஎம்மில் பதிவாகி விடுகிறது. சென்சாரை மறைப்பதால் பணம் எடுக்கப்பட்ட விவரம் பேங்கிங் சிஷ்டத்தில் பதிவாகாது. பணம் எடுத்தவரின் கணக்கிலும் பதிவாகாது.

கொள்ளையில் ஈடுபட்டது எப்படி?
வங்கி அதிகாரிகள் போலீசாரை அதிர வைத்த இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஹரியானா மாநிலத்தில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக அமீர் அர்ஷ், அவரது கூட்டாளி வீரேந்திர ராவத் ஆகியோரை ஹரியானா சென்று தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை சென்னை கொண்டு வந்து கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடுக்கிடும் தகவல்
சைபர் கிரைம் கொள்ளையில் நிபுணத்துவமாக விளங்கும் மேவாட் கொள்ளையர்கள்தான் சென்னை கொள்ளையிலும் ஈடுபட்டதாக போலீசாருக்கு தெரியவந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் மூன்றாவது நபரான நசீம் ஹுசேன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதாவது ஹரியானாவில் இரண்டு கிராமங்களை சேர்ந்த கொள்ளை கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பலை வழிநடத்தியவர்
இந்த இரண்டாவது கும்பலை வழிநடத்தியவர் நசீம் ஹுசேன் ஆவார். சென்னையில் கொள்ளையடிக்க திட்டமிட்ட இவர்கள் ஒன்று சேர்ந்து வராமல் லாரி, விமானம் மற்றும் ஜீப் மூலம் தனித்தனியாக சென்னைக்குள் புகுந்துள்ளனர். நசீம் ஹுசேன் தனது ஜீப்பில் சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் கொள்ளையை அரங்கேற்றிய பிறகு புதுச்சேரி, ஓசூர், பெங்களூரு வழியாக ஹரியானாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

ஹரியானாவில் முகாம்
அவ்வாறு செல்லும் வழியில் பல இடங்களில் நசீம் ஹுசேன் தனது கைவரிசையை காட்டியுள்ளார். சென்னையில் மட்டும் ரூ.17 லட்சத்தை திருடியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். சுமார் 30பேர் கொண்ட இரு கொள்ளை கும்பல் ஹரியானாவில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் ஹரியானாவில் முகாமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications