சனாதன தர்மத்துக்கு எதிராக சமர் நடத்திய அய்யா வைகுண்டர்-ஆளுநர் ரவிக்கு எதிராக பக்தர்கள் கொந்தளிப்பு!
சென்னை: சனாதன தர்மத்துக்கு எதிராக சமர் நடத்தியவர் அய்யா வைகுண்டர்; அவரை சனாதன தர்மத்தைப் பாதுகாத்தவர் என தமிழ்நாடு ஆர்.என்.ரவி பேசியிருப்பது அய்யா வைகுண்டர் பக்தர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
அய்யா வைகுண்டரின் 192-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டிருந்த செய்தி: விஷ்ணு பகவானின் அவதாரமான அய்யா வைகுண்டரின் 192வது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றவும், சமூகப் பாகுபாடுகளை ஒழிக்கவும் தோன்றியவர் அய்யா வைகுண்டர். ஞானம் மற்றும் ஆன்மிகத்தின் ஊற்றாகவும் சனாதன தர்மத்தின் நியதியாகவும் விளங்கும் அவரது அகிலத்திரட்டு அம்மானை புத்தகம் மனிதகுலத்தை எக்காலத்திற்கும் வழிநடத்தும். இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார்.

மேலும் "அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலம்; சனாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார் எனவும் ஆளுநர் ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் ஏற்கனவே சனாதன தர்மத்தைப் பாதுகாத்தவர் அய்யா வைகுண்டர் என பேசியது பெரும் சர்ச்சையானது. தேர்தல் காலங்களில் அதுவும் லோக்சபா தேர்தல் காலங்களில் அய்யா வைகுண்டரை புகழ்வது போல பேசுவதாக நினைத்து கொண்டு இப்படியான பேச்சுகள் முன்வைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக அய்யா வைகுண்ட பக்தர்கள் கூறுகையில், சனாதனம் பேசுகிற உருவ வழிபாடு என்ற அடிப்படைக்கே எதிரானவர் அய்யா. அய்யாவை வணங்கும் இடங்கள் சனாதனம் சொல்கிற கோவில்கள் எனவும் அழைக்கப்படுவது இல்லை. அய்யாவை வணங்கும் இடங்கள் பதிகள்தான். இந்த பதிகளில் ஒரு கண்ணாடிதான் இருக்கும். அதாவது நீ வணங்கும் இறைவன் என்பவன் உனக்குள்தான் இருக்கிறான் என்கிற தத்துவத்தைச் சொல்கிறவர் அய்யா வைகுண்டர். அதனால்தான் அய்யாவின் பதிகளில் கண்ணாடிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது சனாதனத்தின் அடிப்படை அம்சங்களை அடியோடு நிராகரித்தவரே அய்யா வைகுண்டர்.
சரி அய்யா வைகுண்டர் காலத்தில் சனாதன தர்மத்துக்கு பாதிப்பு ஏற்பட்ட காலம் என்கிறாரே ஆளுநர் ஆர்.என்.ரவி.. உண்மைதானா? உண்மையில் சனாதனத்தை தூக்கிப் பிடிக்க சனாதனத்தின் பெயரால் மண்ணின் பூர்வ குடிகள் மீது மனிதகுல விரோதமான அடக்குமுறைகள் ஏவப்பட்ட காலம்.
அதாவது,
பெண்கள் மார்பு சேலை அணிய தடை
பெண்கள் இடுப்பில் குடம் சுமக்கவும் தடை
பெண்கள் நகைகள் அணியவும் தடை
ஆண்கள் தலைப்பாக கட்டத் தடை
ஆண்கள் மீசை வளர்க்கத் தடை
ஆண்கள் வளைந்த கைப்பிடி குடை பயன்படுத்தத் தடை
இப்படித்தான் சனாதன தர்மத்தின் பேரால் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள்- வன்கொடுமைகள், அய்யா வைகுண்டர் காலத்தில் நிகழ்த்தப்பட்டன. இவை அனைத்தையும் அதாவது ஆளுநர் ரவி சொல்வது போலவே சனாதன தர்மத்தின் பேராலான இக்கொடுமைகளை அய்யா வைகுண்டர் ஏற்றாரா? எதிர்த்தாரா? என்பதற்கு சரித்திரத்தில் பதில் உள்ளது.. சரித்திரப் புரட்டை ஆளுநர் பதவியில் இருந்து செய்யக் கூடாது எனவும் அய்யா வைகுண்டர் பக்தர்கள் கொந்தளிக்கின்றனர்.
ஏனெனில் சனாதன தர்மத்தின் பெயரால் மேலே இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க அய்யா வழி என சனாதனத்துக்கு எதிரான சமயத்தையே உருவாகியவர் அய்யா வைகுண்டர். அவரை இப்போது வலதுசாரிகள் கபளீகரம் செய்ய பார்க்கிறார்கள் என்பது தீவிர அய்யா வழி பக்தர்கள் கருத்தாக உள்ளது. இடுப்பில் துண்டும் தலையில் தலைப்பாகையும் கட்ட கூடாது என்றது சனாதனம். ஆனால் அய்யா வைகுண்டரோ துண்டை தலைப்பாகையா கட்டு என கட்டளையிட்ட போராளி. அய்யா வழியில் இன்றும் தலைப்பாகை அணிவது இதற்குதான். ஒவ்வொரு அய்யா வழி பதியில் ஜாதி- மதம்- ஆண்- பெண் என ஒரு வேறுபாடும் இல்லை. சனாதனம் கற்பித்த அத்தனை ஒடுக்குமுறைகளையும் காலந்தோறும் தகர்க்கும் வகையில் வலிமையான அய்யா வழி எனும் சமயத்தை தந்தவர் அய்யா வைகுண்டர். அய்யா வழி வழிபாட்டு முறை ஏதேனும் சனாதனத்தின் உயிர்நாடி சமஸ்கிருதத்தில் இருக்கிறதா? சனாதனம் நீஷபாசை என சொல்லும் தமிழில் இருக்கிறதா? என்றெல்லாம் ஆராயாமல் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கக் கூடாது.
ஆளுநர் ரவி தாம் சொல்கிற அய்யா வைகுண்டரின் அகிலத் திரட்டின் ஒரு பாடலையாவது படித்திருப்பாரா? சனாதனம் வலியுறுத்துகிற அத்தனை வகையான ஆதிக்கத்தையும் அடித்து நொறுக்கிற ஆகப் பெருங் கலகக் குரல் அய்யா வைகுண்டரின் அகிலத் திரட்டு.
"ஏடுதந்தேன் உன்கையில் எழுத்தாணியும் கூடத் தந்தேன்
பட்டங்களும் பட்டயமும் தந்து பகை தீர்ந்தேன் என் மகனே.." என அய்யா வைகுண்டர் வலியுறுத்துவது எதனைத் தெரியுமா? சூத்திரன் படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என சொன்ன சனாதனத்துக்கு எதிரான அய்யா வைகுண்டரின் சண்டமாருத முழக்கம் இது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும்.. புரிந்தும் புரியாமல் பொய்யும் புனைபுரட்டுமாய் சனாதனம் பேசும் சக்திகளுக்கு எப்படி புரியும்? என்பதுதான் அய்யா வைகுண்டர் பக்தர்களின் ஆவேச கோபம்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications