உங்கள் ஊரில் மோசடி செய்யும் பஞ்சாயத்து தலைவருக்கு எப்படி ஆப்பு வைக்கலாம்?
சென்னை: நம்மை ஆட்சி செய்வோருக்கு நாம் தான் எஜமான்.. எனவே மக்கள் தங்கள் ஆட்சியாளர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க தயங்கவே கூடாது.. அவர்களை எதிர்த்து கண்டிப்பாக கேள்வி கேட்க வேண்டும். இந்த செய்தியில் உங்கள் ஊரில் மோசடி செய்யும் பஞ்சாயத்து தலைவருக்கு எப்படி ஆப்பு வைக்கலாம் என்பதை பார்ப்போம்..
இந்தியா முழுவதுமே உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் பலமாக உள்ளது. இதில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருக்கக்கூடாது என்று நினைத்த அரசு, அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட தடை விதித்துள்ளது. அரசியல் கட்சிகளின் சின்னங்கள் உள்ளாட்சி மன்றங்களில் ஒதுக்கப்படாது. யாராக இருந்தாலும் அவர்கள் தரும் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். மக்கள் பணி செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும் போட்டியிட்டு வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவராக வேண்டும் என்ற நோக்கத்தில் இது கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால், அரசியல் கட்சியில் உள்ளவர்களே தேர்தலில் நிற்கிறார்கள். லட்சங்களை கொட்டி வாக்குகளை விலை கொடுத்து வாங்கி தேர்தலில் வெற்றியும் பெறுகிறார்கள். அப்படிப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் நேர்மையாக நடப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நம்முடைய முட்டாள்தனம் தான். அதேநேரம் பணம் செலவழித்து வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் முறைகேடாக செயல்பட்டு கொள்ளையடிப்பது தெரிந்தால் அவர்களுக்கு தாராளமாக நீங்களே ஆப்பு வைக்கலாம். அது மிகவும் எளிதான விஷயமும் கூட.. கண்டிப்பாக பஞ்சாயத்து தலைவர் சிக்கலில் சிக்குவார் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்..
உங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர், உங்கள் வரிப்பணத்தில் என்னென்ன செல்வு செய்கிறார் என்பதை ஆன்லைனிலேயே நீங்கள் பார்த்துவிட முடியும்.. நீங்கள் ஏன் பஞ்சாயத்து தலைவர் செலவு செய்வதை பார்க்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் பஞ்சாயத்து தலைவர் எழுதும் செலவு கணக்கை நீங்கள் பார்ப்பது தெரிந்தால், சின்ன வேலைக்கு பெரிய தொகை எழுத பயப்படுவார்.. உதாரணத்திற்கு உங்கள் ஊரில் தண்ணீர் வடிய வடிகால் கட்டுகிறார்கள். அந்த வடிகால் கட்டும் ஒப்பந்ததாரரிடம் நீங்கள் போய் சொல்வீர்கள்.. கொஞ்சம் அகலமாக கட்டுங்கள் என்று.. ஆனால் அவரோ பஞ்சாயத்தில் கொடுத்த பணத்திற்கு இவ்வளவு தான் கட்ட முடியும் என்பார்..
அதை 2மாதம் கழித்து செக் பண்ணினால், அந்த ஒப்பந்ததாரருக்கு, அந்த பணிக்கு உங்கள் பஞ்சாயத்து தலைவர் எவ்வளவு வரிப்பணம் கொடுத்தார் என்பதை https://egramswaraj.gov.in/ இணையதளம் மூலம் அறிய முடியும்.. தற்போதைய நிலையில் இந்தியாவின் பிரதமரால் கூட செக்கில் கையெழுத்து போட்டு அரசு கஜானாவில் பணம் எடுக்க முடியாது. ஆனால் பஞ்சாயத்து தலைவருக்கு செக்கில் கையெழுத்து போட்டு பணம் எடுக்கும் அதிகாரம் இருக்கிறது..
அதனால் இங்கு தவறு நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. உதாரணத்திற்கு 50 ரூபாய் செலவு செய்துவிட்டு 5 ஆயிரம்கூட செலவனதாக கணக்கு எழுதிக்கொள்ள முடியும். இந்த வெப்சைட் மூலம் பஞ்சாயத்தில் எவ்வளவு நிதி இருக்கிறது. பஞ்சாயத்து தலைவர் கையில் பணமாக எவ்வளவு வைத்துள்ளார்.. அதேபோல் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளார் என்பதை பார்க்க முடியும். இந்த https://egramswaraj.gov.in/ வெப்சைட்டில் உங்கள் பஞ்சாயத்து தலைவர் மட்டுமல்ல.. இந்தியாவில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களின் கணக்கையும் பார்க்க முடியும்..
https://egramswaraj.gov.in/ வெப்சைட்டில் உள்ள போனால் கடைசியில் accounting என்று உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதற்குள் போனால் ACCOUNTING ENTITY WISE REPORT என்று இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். அதற்கு போய் Cash Book Report என்று இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே போனால், மாதம் வாரியாக என்று கிளிக் செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு எந்த நிதியாண்டு என்பதை செலக்ட் செய்யுங்கள்.. பின்னர் எந்த மாநிலம் என்பதை செலக்ட் செய்யுங்கள். பின்னர் மாவட்டத்தை செலக்ட் செய்யுங்கள்.
பின்னர் பிளாக் என்பதில் உங்கள் தாலுகாவை செலக்ட் செய்யுங்கள். அதன்பிறகு வில்லேஜ் என்பதில் உங்கள் பஞ்சாயத்தை செலக்ட் செய்யுங்கள்.. அதன்பிறகு எந்த மாதம் என்பதை செலக்ட் செய்யுங்கள். பின்னர் கேப்சியா குறியீடு கேட்கும். அதன்பின்னர் டவுன்லோடு ஆகும். அதில் பஞ்சாயத்து தலைவர் கையில் எவ்வளவு பணம் உள்ளது. எவ்வளவு பணம் வங்கியில் உள்ளது. எந்த திட்டத்திற்கு என்ன செலவு செய்தார் என்பதை எளிதாக அறிய முடியும். அதை வைத்து நீங்கள் உங்கள் பஞ்சயாத்து தலைவரிடம் தாராளமாக கேள்வி கேட்க முடியும். தவறுகள் நடந்திருப்பது தெரிந்தால் தாராளமாக நீங்கள் அவருக்கு ஆப்பு வைக்க முடியும்..
மோசடி செய்யும் பஞ்சாயத்து தலைவருக்கு காத்திருக்கும் ஆப்பு...!!!😄😄😄 pic.twitter.com/lJpwCGJRbv
— கைப்புள்ள (@kaippulla123) December 13, 2023
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications