சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவில் தந்தை ராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் ஏற்பட்ட பிணக்கு தேர்தலுக்குள் சரியாகிவிடும் என்று தான் பலரும் கணித்திருந்தார்கள். ஆனால் அந்த விரிசல் அதிகமாகி இப்போது தந்தையும் மகனும் வேறு வேறு முகாம்களில் தஞ்சமடைந்து தேர்தலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் தன்னோடு இருப்பார்கள் என சசிகலா நம்பிய டிடிவி தினகரன் பாஜகவின் அழுத்தத்தால் எடப்பாடி இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்.

அதற்கு ஒரு படி மேலே போய் ஓபிஎஸ் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் ராமதாசும் சசிகலாவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் கமிறங்க தயாராகிவிட்டார்கள். இந்த கூட்டணி எந்த அளவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை டேமேஜ் செய்யும் என்பது தான் இப்போது காத்திருக்கும் டுவிஸ்ட்.

tamil nadu assembly elections 2026 dmk

தமிழகத்தின் மேற்கு மண்டலம் என்று அழைக்கப்படும் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருக்கிறது. அதிமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக மேற்கு மண்டலம் இருப்பது அனைவரும் அறிந்ததே.

தமிழக அரசியலில் மிகப்பெரிய ட்விஸ்ட்

ஆனால், புதிதாக கூட்டணி அமைத்துள்ள ராமதாசால் வடமாவட்டங்களிலும், சசிகலாவால் தென் மாவட்டங்களிலும் என் டி ஏவின் வெற்றி பாதிக்கப்படக்கூடும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவிற்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டு கட்சிகளின் உத்தேச தொகுதி பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி பாமக வட மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளது.

குறிப்பாக பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட 18 தொகுதிகளில் பாப்பிரெட்டிப்பட்டி, கும்மிடிப்பூண்டி, தர்மபுரி, விழுப்புரம், ஆற்காடு, திருவள்ளூர், பாலக்கோடு, விக்கிரவாண்டி, திருத்தணி, செய்யாறு, செஞ்சி, திண்டிவனம், மயிலம், வானூர், நெய்வேலி, விருத்தாசலம், மேட்டூர், சோளிங்கர், புவனகிரி என கிட்டத்தட்ட 90 சதவீதம் தொகுதிகள் வடமாவட்டங்களில் வருகின்றன.

இந்த தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக வன்னிய சமூக ஓட்டுக்கள் இருப்பதால் அந்த ஓட்டுகள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் யார் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு தான் வெற்றி. வட மாவட்டங்களில் உள்ள இந்த பாமகவிற்கான 90 சதவீத தொகுதிகளில் ராமதாஸின் செல்வாக்கு அன்புமணியின் செல்வாக்கிற்கு கடும் சவாலாக இருக்கும். அதே போல் வெளியாகி உள்ள அமமுக உத்தேச பட்டியலின்படி நாங்குநேரி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், பெரியகுளம், மதுரை மத்தி, காரைக்குடி உள்ளிட்ட தொகுதிகள் தென் மாவட்டங்களிலும், திருவையாறு, திருச்சி மேற்கு, மன்னார்குடி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் டெல்டா மாவட்டங்களிலும் வருகின்றன.

சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்

இதில் டெல்டா மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் டிடிவி தினகரன் செல்வாக்கு எடுபடும் என வைத்துக் கொண்டாலும் தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் என இருபெரும் சவால்களை தினகரன் சந்திக்க நேரிடும். அந்த சவால்களை முறியடித்தால் மட்டுமே அமமுகாவின் பெருவாரியான வெற்றி சாத்தியமாகும். இதனால், ராமதாஸ்- சசிகலா கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை பாதிக்கும் காரணியாக அமையப் போகிறது என எச்சரிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எனவே சொந்த சமூக வாக்குகள் விவகாரத்தில் தினகரனுக்கு சசிகலா, ஓபிஎஸ் என்னும் இருபெரும் சவாலும், அன்புமணிக்கு சொந்த தந்தையாகிய ராமதாஸ் என்கிற சவாலும் நேர் எதிரில் உள்ளன. இந்த சவால்களை சமாளிக்க டிடிவி தினகரனும் அன்புமணி ராமதாஸும் தாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளர்களில் மிக மிக கவனமாக இருந்தால் தங்கள் வெற்றியை ஓரளவு சாத்தியமாக்கலாம் என்பதே கள எதார்த்தம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+