வயர்லெஸ்சில் பறந்த தகவல்.. நெல்லை அருகே சேஸிங்.. சபாஷ் சிபிசிஐடி.. 5 போலீசார் கைது பரபர பின்னணி
சென்னை: நேற்று இரவு முதல் பரபரத்து கிடக்கிறது தென் தமிழகம்.. சாத்தான்குளம் சித்திரவதை கொலை தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான, போலீசாரை விரட்டி விரட்டி சேஸிங் செய்து கைது செய்துள்ளனர் சிபிசிஐடி போலீசார்.
Recommended Video
சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக பல சாட்சியங்களும் ஆதாரங்களும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
இத்தனைக்கும் அவர்கள் செய்த 'பெரும்குற்றம்' குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு செல்போன் கடையை திறந்து வைத்து இருந்தார்களாம். அப்படி நடந்திருந்தால் அது தவறுதான் என்ற போதிலும் கைது நடவடிக்கை, அபராதம் உள்ளிட்டவை சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதே தவிர, லாக்கப்பில் வைத்து சித்திரவதை செய்வது சட்டத்தை மீறிய செயல் என்பதால்தான் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுக்க இந்த சம்பவத்துக்கு இத்தனை கொந்தளிப்புகள்.

ஜெட் வேகத்தில் சிபிசிஐடி
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்ததோடு சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைத்தது. வழக்கை கையில் எடுத்த கையோடு, சிபிசிஐடி விசாரணை ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது. மொத்தம் 12 டீம்கள் போட்டுள்ளதாக கூறுகிறார் சிபிசிஐடி ஐஜி சங்கர். சமீப காலத்தில் எந்த வழக்கிற்கும் இத்தனை டீம்கள் போடப்பட்டது கிடையாது என்கிறது போலீஸ் வட்டாரம்.

விமர்சனங்கள்
நேற்று இரவு, சாத்தான்குளம் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் மட்டுமே கைது செய்யப்பட்டதால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு காவல் நிலையம் என்பது இன்ஸ்பெக்டரின் முழு கட்டுப்பாட்டில் இருக்க கூடிய பகுதி. அவருக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய விஷயம் எப்படி நடக்க முடியும்? ஏன் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்படவில்லை என்று கடும் கேள்விகள் எழுந்தன.

5 போலீசார் கைது
இந்த நிலையில் இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், மற்றும் கான்ஸ்டபிள் முத்துராஜ் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இறுதியாக ஆய்வாளர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்ட பிறகு மக்களிடம் ஓரளவு கொந்தளிப்பு அடங்கி உள்ளது என்று சொல்லலாம். ஆகமொத்தம் நேற்று இரவு முதல் இன்று காலை வரை, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்போகும் அளவுக்கு தந்தை மற்றும் மகனை தாக்கியது ஏன் என்று சிபிசிஐடி போலீசார் அவர்களிடம் துருவித்துருவி விசாரித்து வருகின்றனர்.

தாமதம் ஏன்
உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட நிலையில் மற்றவர்களை கைது செய்ய ஏன் தாமதம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவருமே தலைமறைவாக இருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் கூறுகின்றன. இவர்களில் பல போலீசார் தப்பி ஓடிய போது, வாகன சோதனைகளிலும், சேஸ் செய்தும்தான் பிடித்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வயர்லெஸ் செய்தி, சேஸிங்
நேற்று இரவு ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் உள்ள சோதனைச்சாவடி போலீசாருக்கு வயர்லெஸ்சில் தகவல்கள் பறந்துள்ளன. சாத்தான்குளம் வழக்கில் தொடர்புள்ளவர்கள் நமது மாவட்ட எல்லையை கடந்துவிடக் கூடாது. தக்க சோதனை நடத்துங்கள் என்று இன்ஸ்ட்ரக்ஷன் பறந்துள்ளன. இதையடுத்து ஒவ்வொருவராக சிக்க ஆரம்பித்தனர். அதேநேரம், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை, நெல்லை டூ மதுரை சாலையில், வாகனத்தில் சேஸ் செய்து பிடித்துள்ளது சிபிசிஐடி காவல்துறை.
-
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications