சென்னையில் இனி தண்ணீர் பிரச்சினையே இருக்காது.. களமிறக்கப்படும் ரோபோ கேமராக்கள்.. இது வேற லெவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் குடிநீர் சப்ளை என்பது பெரிய பிரச்சினையாகவே இருந்து வரும் நிலையில், சீரான குடிநீர் சப்ளை இருப்பதை உறுதி செய்யச் சென்னை மாநகராட்சி முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தியாவில் முக்கிய நகரங்கள் என்றால் அதில் சென்னைக்கு முக்கிய இடம் இருக்கிறது. ஐடி, ஆடோமொபைல் உள்ளிட்ட துறைகளில் சென்னை முக்கிய இடத்தில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

 How chennai corp is planning to use Robot cameras to monitor chennai pipelines

இப்படி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் சென்னைக்கு வருகிறார்கள். இதனால் சென்னை தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

சென்னை குடிநீர்: தலைநகர் சென்னையில் மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் அரசின் கடமையாகிறது. இருப்பினும், இதில் சில சிக்கல்கள் இருக்கவே செய்கிறது. அதில் முக்கியமானது சுத்தமான குடிநீர். சென்னையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் மூலம் தண்ணீர் சப்ளை செய்வது என்பதே இன்னும் நடக்காத ஒன்றாகவே இருக்கிறது. சென்னை என்று இல்லை நமது நாட்டில் அனைத்து பெருநகரங்களும் எதிர்கொள்ளும் சிக்கலாக இது இருக்கிறது.

இதைச் சரி செய்ய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே குடிநீர் சப்ளை இருக்கும் பகுதிகளிலும் கூட முறையாகக் குடிநீர் சப்ளை தரப் பல சிக்கல்கள் இருக்கிறது. அந்த சிக்கல்களைச் சரி செய்வது சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முக்கிய முடிவு: இதற்கிடையே முதல்முறையாகச் சென்னையின் கழிவுநீர் அமைப்புகளில் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சியாகச் சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் அதிநவீன எண்டோபோட் கேமராக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இது சென்னை மக்கள் நல்ல குடிநீரை பெறுவதை உறுதி செய்யும்.

சென்னையில் நகர் முழுக்க 91 லட்சம் இணைப்புகளுக்கு மாநகராட்சி 1,000 எம்.எல்.டி தண்ணீரை வழங்கி வருகிறது. அதேநேரம் சென்னை தனது பைப் லைன்களை அப்கிரேட் செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் பழைய பைப்லைன்கள் பழுதாகி வருவதாக அடிக்கடி புகார்கள் எழுந்துள்ளன. இந்த பிரச்சினையைச் சரி செய்யவும் பைப்லைனில் இருக்கும் சிக்கல்களை அடையாளம் காணவும் சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் எண்டோபோட் கேமராக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

மூத்த அதிகாரி: இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதற்கட்டமாக வளசரவாக்கத்தில் ஆய்வு செய்தோம். அதில் எச்டிபிஇ குழாய்கள் அதிகளவில் சேதமடைந்து இருப்பதைக் கண்டறிந்தோம். எனவே, இந்த எச்டிபிஇ குழாய்களுக்குப் பதிலாக, டிஐ குழாய்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். நகர் முழுக்க நீர் எடுத்துச் செல்வதில் இருக்கும் சிக்கலைத் தீர்க்க ஒரு விரிவான திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம்" என்றார்.

மேலும், அதிகாரிகள் ஆய்வு நடத்தி, குழாய்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் கசிவுகளைக் கண்டறிய எண்டோபோட் கேமராக்களைப் பயன்படுத்தப் பரிந்துரைத்தனர் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்கு உடன் அடையாளம் கண்டு சரி செய்ய முடியும். இது சென்னையில் தங்கு தடையில்லாமல் குடிநீர் சப்ளை இருப்பதை உறுதி செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+