சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சூப்பர் முயற்சி.. குவியும் பாராட்டு
சென்னை: சென்னை மாநகராட்சி கழிவுகளை மறுசுழற்சி செய்து அதன் அத்தனை வளங்களையும் பயன்படுத்துவது, இயற்கை உரங்களை தயாரிப்பது, அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவது, வருவாயை உருவாக்குவது என்று பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது. இந்த முயற்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள மக்கள் தொகையில் 4ல் ஒரு பங்கு சென்னையில் தான் இருக்கிறது. சுமார் 1 கோடி பேருக்கு மேல் சென்னை மாநகராட்சியின் தற்போதைய எல்லைக்குள்ளேய வசிக்கிறார்கள். சென்னை பெருநகர சுற்றுப்புறத்தை கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை 1.5கோடி முதல் 2 கோடிவரை இருக்கலாம்.
இவ்வளவு மக்கள் தினசரி பயன்படுத்தும் குப்பைகளை அகற்றுவதற்கான பணி என்பது மிகப்பெரியது . நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் பல டன் குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மூன்று இடங்கள்
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் சேகரிக்கப்படும் சுமார் 5,000 டன் குப்பைகள் முறையாக பதப்படுத்தவும், மறுசுழற்சி செய்யவும் திட்டங்களை செய்துவருகிறது மாநகராட்சி. சென்னையில் மிகப்பெரும் குப்பை மேடாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி, மாதவரம் ஆகியவை திகழ்கின்றன.

இயற்கை உரம்
சென்னை மாதவரம் கண்டம்பாளையம் குப்பை கிடங்கில் உள்ள மறுசுழற்சி மையத்தில், சந்தைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றன. குப்பை கழிவுகளை மறுசுழற்சி செய்து அதன் அத்தனை வளங்களையும் பயன்படுத்துவது, இயற்கை உரங்களை தயாரிப்பது, அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற பணிகளை செய்து வருகிறது. . இந்த முயற்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

தெர்மாகோல்கள்
சென்னை மாநகராட்சி தயாரிக்கும் இயற்கை உரங்கள் மலிவான விலையில் மக்களுக்கு விற்கப்படுகின்றன. மேலும் தெர்மாகோல்கள், தரம் பிரிக்கப்பட்டு அவை நிறுவனங்களுக்கு பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் சாக்குப்பைகளும் பிரித்தெடுக்கப்பட்டு எரிப்பதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு
மேலும் 25 டன்னுக்கு மேல் தேங்காய் ஓடுகள் குப்பைக் கிடங்குகளில் கொட்டுவதற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய சென்னை மாநகராட்சியின் வரம்புகளின் கீழ் ஐந்து அலகுகள் நிறுவப்பட்டுள்ளன. மரக் கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் செங்கற்களும் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி பல்வேறு வகையான கழிவுகளை மறுசுழற்சி செய்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுவதுடன், வருவாயும் பெருக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி இன்று அதிகாரிகளுடன் சென்று இதை ஆய்வு செய்தார்.

பூத்தொட்டி
சரி குப்பை போடும் நாம் என்ன செய்ய வேண்டும்.. நம் வீட்டிலிருந்து குப்பை வெளியேறினால் போதும் என்று நினைக்கக்கூடாது. அப்படி செய்தால் எதிர்காலத்தில் அனைவருக்கும் ஆபத்தாக முடியும். நம் வீட்டில் மக்கும் குப்பையை, ஒரு பூத்தொட்டியில் போட்டு அவற்றை உரமாக்கலாம். பிளாஸ்டிக் மற்றும் நாளிதழ்களை மறுசுழற்சிக்கு எடுத்துக் கொள்ளும் கடைகளுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் 80% குப்பை வெளியே செல்வதை தடுக்க முடியும்.

வேலை மிச்சம்
ஒருவேளை உங்களால் இவை முடியாது என்றால், மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்பிரித்து இரண்டு குப்பை தொட்டிகளை வைத்துக்கொள்ளுங்கள். அப்படி சேகரிக்கப்படும் குப்பைகளை குப்பை வண்டிகளில் கொட்டுங்கள். இதை செய்தாலே பெரிய வேலை மிச்சமாகும். ஆனால் பலரும் இப்படி செய்வது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications