ஜஸ்ட் 30 நிமிடம் தான்! இம்மானுவேல் சேகரன் மணிமண்டபத்துக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு? பின்னணி என்ன?
சென்னை: தேவேந்திர குல வேளாளர் பிரிவை சேர்ந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடியில் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு நிலையில் அதன் பின்னணியில் 30 நிமிடத்தில் நடந்த விஷயம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செல்லூரில் பிறந்தவர் இமானுவேல் சேகரன். இளம்வயதிலேய சுதந்திர போராட்டங்களுக்காக குரல் கொடுத்து போராட தொடங்கினார். இதனால் அவர் சிறைக்கும் சென்றார். அதன்பிறகு இந்திய ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றினார்.

இந்த வேளையில் தான் தீண்டாமை கொடுமைகள் அரங்கேற தொடங்கினது. இதனால் மனம் வெறுத்து போன அவர் ராணுவ பணியை ராஜினாமா செய்துவிட்டு தீண்டாமைக்கு எதிராக களமாட தொடங்கி தேவேந்திர குல வேளாளர் மக்களின் தலைவராக மாறினார்.
அதன்பிறகு 1957 செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இமானுவேல் சேகரனுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
திமுக சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரமக்குடிக்கு சென்று இமானுவேல் சேகரனுக்கு மரியாதை செலுத்தினார். இதற்கிடையே தான் தியாகி இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மணிமண்டபம் கட்டி தர வேண்டும் என்பது தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில் அதனை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் இமானுவேல் சேகரனின் மகள் பிரபாராணி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தனது தந்தை இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட முதல்வர் ஸ்டாலின் வெறும் 30 நிமிடத்தில் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரபாராணி கூறியதாவது: கடந்த திங்கட்கிழமை சென்னை சென்று முதல்வர் அலுவலகத்தில் முதல் அமைச்சர் ஸ்டாலினை சென்று சந்தித்தோம். எங்கள் சமுதாயத்தின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர் அனைவரும் பார்த்தோம்.
அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கையை நான் வைத்தேன். தலைவரின் பிறந்தநாள், இறந்தநாளை அங்கீகாரம் செய்து அரசு விழாவாக கொண்டாட வேண்டும். மேலும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதை கேட்ட முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறினார். இதையடுத்து அதற்கான பைலை உடனடியாக அவர் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பினார். நான் 11.30 மணிக்கு ஸ்டாலினை சந்தித்த நிலையில் 12 மணிக்கு எனக்கு போன் வந்தது.
நீங்கள் கொடுத்த பைல் முதல்வர் ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து வந்ததாகவும், மணிமண்டபம் அமைப்பது கொடுப்பது தொடர்பாக அனுமதி கோரியுள்ளனர். அவர்களே ஒரு இடத்தை கூறினார். அந்த இடம் எங்களுக்கு மனநிறைவாக இருந்தது. இதையடுத்து அரசு எங்கள் சமுதாய தலைவர்களுடன் சேர்ந்து கலந்தாலோசனை செய்து இடம் தேர்வு செய்தனர்.
நேற்று இரவு 1 மணிக்கும் போன் செய்தார்கள். நாளை காலை மணிமண்டபம் குறித்து அறிவிக்க உள்ளோம். இந்த இடம் பிடித்துள்ளதாக என கேட்டனர். இது மிகவும் சந்தோஷமாக உள்ளது. எங்களின் நீண்டநாள் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்'' என்றார்.
இந்நிலையில் தான் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு என்பது திமுகவுக்கு அரசியல் ரீதியாகவும் பலன் அளிக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது தேவேந்திர குல வேளாளர்கள் தற்போது பாஜகவின் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டி தருவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருப்பது என்பது தேவேந்திர குல வேளாளர்களின் ஓட்டுகள் திமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படலாம் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications