உடலுக்குள் புகுந்ததும்.. இப்படித்தான் கிட்னியை குறி வைக்கிறது கொரோனா வைரஸ்.. பரபரப்பு தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் செயற்கை சுவாசத்தை போல் டயாலிசிஸ் கருவிக்கும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்த கொரோனாவால் சிறுநீரகம் எப்படி செயலிழக்கிறது என்பதை பார்ப்போம்.

Recommended Video

    கொரோனா வைரஸ் கிட்னியை இப்படிதான் குறி வைக்கிறது... பரபரப்பு தகவல்

    கொரோனா வைரஸின் அறிகுறியாக காய்ச்சல், சளி, இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்டவை கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் நேரடியாக சிறுநீரக மண்டலத்தை தாக்குவதால் உயிரிழப்பிற்கு வழி வகுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    கொரோனா வைரஸ் நேரடியாக சிறுநீரகங்களை பாதிக்கிறதா என்பது தெரியவில்லை. இல்லாவிட்டால் பல்லுறுப்பு கோளாறுகளில் சிறுநீரக பாதிப்பும் ஒரு பகுதியா என்பதும் தெரியவில்லை.

    என்சைம்கள்

    என்சைம்கள்

    இதற்கு காரணம் சிறுநீரகத்தின் மேல் ஏராளமான ஏஞ்சியோடென்சின் என்சைம்களை (Angiotensin-converting enzyme 2 (ACE2)) கொரோனா வைரஸ் நேரடியாக தாக்குவதாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த என்சைம்கள் சிறுநீரகத்தின் வெளிப்புறத்தில் காணப்படுகின்றன. இதன் மூலமே கொரோனா வைரஸ்கள் செல்களில் நுழைகின்றன. இந்த என்சைம்கள் சிறுநீரகங்களில் மட்டுமல்லாது இதயம், நுரையீரல்கள், குடல்கள், தமனிகள், ரத்தக் குழாய்கள் மீதும் காணப்படும்.

    நீரிழிவு

    நீரிழிவு

    ரத்த கொதிப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இதயத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட சீராக இயங்குவதற்கு இந்த என்சைம்கள் உதவுகின்றன. வுகானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 85 நோயாளிகளில் 27 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக பாதிப்பு என்பது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது என ஒரு ஆய்வு சொல்கிறது.

    சீனா

    சீனா

    அது போல் கொரோனாவால் சீனாவில் பாதிக்கப்பட்ட 1,099 நோயாளிகளில் 93.6 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 91.1 சதவீதம் பேருக்கு நிமோனியாவும் 3.4 சதவீதம் பேருக்கு கடுமையான சுவாசக் கோளாறுகளும் ஏற்பட்டது. ஆனால் 0.5 சதவீதம் பேருக்கு மட்டுமே சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மற்றொரு ஆய்வில் கூறப்படுகிறது. இரு ஆய்வுகளிலும் இரு மாறுபட்ட முடிவுகள் இருந்தாலும் கொரோனாவால் சிறுநீரகம் பாதிக்கப்படுவது உறுதி என்பதை இரு ஆய்வுகளும் தெரிவித்துள்ளன.

    ஆரோக்கியமான செல்கள்

    ஆரோக்கியமான செல்கள்

    உடலில் திறனற்ற நோய் எதிர்ப்பு மண்டலமானது சைட்டோகைன் ஸ்ட்ராம் என்பதை தூண்டுகிறது. பொதுவாக நம் உடலில் ஒரு வைரஸ் நுழையும் போது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் உடல் முழுவதும் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது புதிய வைரஸை எதிர்த்து சண்டையிடும் என்பது நமக்கு தெரிந்ததே. அந்த வகையில் Cytokine Strom என்றால் ரத்த வெள்ளை அணுக்களை அதிகமாக வெளியிட்டு அவை பாதிக்கப்பட்ட திசுக்களை சரி செய்வதற்கு பதிலாக நல்ல ஆரோக்கியமான செல்களையும் சேர்த்து அழிக்கும்.

    செயலிழப்பு

    செயலிழப்பு

    இதனால் பல உறுப்புகள் செயலிழப்பு, செப்சிஸ் (அழுகிய புண்ணால் ரத்தத்தில் நச்சுத் தன்மை உண்டாவது) உள்ளிட்டவை ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கிறது. எனவே கொரோனாவால் சிறுநீரக கோளாறு ஏற்படுவதுடன் பல்லுறுப்புகளும் செயலிழக்க வாய்ப்புள்ளது. மற்றொரு வழி சிறுநீரக செல்களில் அதிகமாக இருக்கும் ஏஞ்சியோடென்சின் என்சைம்களால் சிறுநீரகங்களை கொரோனா நேரடியாக தாக்குவதாலும் சிறுநீரகம் செயலிழக்கிறது.

    நீரிழிவு நோய்

    நீரிழிவு நோய்

    பொதுவாக ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். இதை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஏஞ்சியோடென்சின் என்சைம்களை கொரோனா தாக்குவதால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் எனப்படும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சிறுநீரக கோளாறு

    சிறுநீரக கோளாறு

    டயாலிசிஸ் என்றால் சிறுநீரக கோளாறு ஏற்பட்ட நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள தேவையில்லாத பொருட்கள் மற்றும் திரவங்களை கருவி மூலம் பிரித்தெடுக்கும் முறையாகும். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே சிறுநீரகம் பாதித்தோரின் உயிருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. தற்போது கொரோனாவால் ஏராளமானோருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுவதால் கடந்த சில வாரங்களாக செயற்கை சுவாச கருவி, பாதுகாப்பு உபகரணங்களை போல் டயாலிசிஸ் கருவிகளுக்கும் இந்தியாவில் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+