மாணவர்களுக்கு வைரத்தில் நெக்லஸ், கம்மல், மோதிரம் போடுறாரே! விஜய்க்கு பணம் எப்படி வருகிறது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10, 12 ஆம் வகுப்புகளில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வைர நெக்லஸ், வைர கம்மல், வைர மோதிரம், உதவித் தொகை எல்லாம் வழங்குகிறாரே, நடிகர் விஜய்க்கு நிதி எப்படி கிடைக்கிறது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மாணவர்களுக்கு அவர் அளிக்கும் ஊக்கத்தொகைக்கான நிதியும் எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவர் கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கியதுடன் சான்றிதழையும் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

vijay tamil nadu


அது போல் இந்த ஆண்டும் நடிகர் விஜய் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மாவட்ட அளவில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அது போல் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

கடந்த முறையும் சரி இந்த முறையும் சரி, விஜய், மாணவர்களுக்கும் அவருடைய பெற்றோர்களுக்கும் மதிய உணவை அளித்தார். அது போல் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர போக்குவரத்தையும் நிர்வாகிகள் மூலம் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்வை அவர் இரு ஆண்டுகளாக செய்து வருகிறார். ஏற்கெனவே அவரது ரசிகர் மன்றத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்யுமாறு விஜய் அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது அரசியலுக்கு வந்த விஜய்யின் நலத்திட்ட உதவிகள் பெரிதும் பேசப்படுகின்றன.

தற்போது ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படம்தான் கடைசி என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் அவர் இறங்க போகிறார். அவருடைய இலக்கு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தல் என கட்சித் தொடங்கும் போதே அறிவித்தார். எனவே அதுவரை நடக்கும் தேர்தல்களுக்கும் இடைத்தேர்தல்களுக்கும் யாருக்கும் ஆதரவும் இல்லை என்றும் அறிவித்துவிட்டார்.

கடந்த ஆண்டு திண்டுக்கல்லை சேர்ந்த நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்களை பெற்ற நிலையில் அவருக்கு விஜய், வைர நெக்லஸை பரிசாக அளித்தார். அது போல் இந்த ஆண்டு மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரத்தை பரிசாக கொடுத்திருந்தார்.

அது போல் ஊக்கத் தொகையும் ரூ 5000 வரை கொடுத்ததாக தெரிகிறது. கல்வி விருது வழங்கும் விழாவை நடத்துவதற்கான செலவும் வைரம் வாங்குவதற்கும் விஜய்க்கு நிதியுதவி எப்படி கிடைக்கிறது என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து இயக்குநர் பிரவீன் காந்தி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜய் தனது சொந்த செலவில்தான் இந்த விருது வழங்கும் விழாவை நடத்தி பரிசு பொருட்களையும் வாங்குகிறார். அவருக்கு யாரும் நிதி வழங்கவில்லை. கட்சியினரிடமும் இருந்து அவர் பெற்றுக் கொள்ளவில்லை என பிரவீன் காந்தி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+