பெங்களூர் புஷ்பாவுக்கு ஒரே நாளில் 4.5 லட்சம் லாபம்.. இன்ஸ்டா வலைவில் ஏமாந்த சென்னை லட்சுமி
சென்னை: 'இன்ஸ்டாகிராம்' மூலம் பல்வேறு வகைகளில் மோசடி நடைபெறுகிறது. முதலில் நம்ப வைப்பதற்காக கவர்ச்சிகரமான டாஸ்குகளை கொடுத்து பணம் தருகிறார்கள். மீனுக்கு உணவளிப்பது போல் சிறிய அளவில் அளித்து, அவர்களை நம்ப வைக்கிறார்கள்.இறுதியில் அவர்களின் பணத்தை முதலீடு செய்தால் பெரிய லாபம் கிடைக்கும் என்று கூறி லட்சக்கணக்கில் ஏமாற்றுகிறார்கள்.. அப்படி சென்னை தனியார் பெண் ஊழியரை ஏமாற்றிய பெங்களூர் புஷ்பா கைதாகி உள்ளனர்.
ஆன்லைன் மூலம் டாஸ்குகளை அனுப்பும் பெங்களூர் புஷ், அதை முடித்துக் கொடுத்தால் பெரிய அளவில் பணம் தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். அதை நம்பி அனுப்பிய டாஸ்குகளை முடித்துக் கொடுக்கிறார்கள் அதற்கு முதலில் பணம் கிடைக்கிறது. அதை வைத்து பல லட்சம் அனுப்பினால் பெரிய அளவில் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி வலைவிரிக்கிறார். வலையில் விழுந்தவர்கள் பணத்தை தொலைத்து, திரும்ப பெற முடியாமல் காவல் நிலையத்தில் கலங்கி நிற்கிறார்கள். சென்னை மண்ணடி பெண்ணுக்கு நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வரும் லட்சுமி என்பவர் மண்ணடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இவர் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனியார் நிறுவன ஊழியர் லட்சுமி கூறுகையில்,
"'இன்ஸ்டாகிராம்' மூலம் தனக்கு அறிமுகமான பெண் ஒருவர், ஆன்லைன் மூலம் தனக்கு டாஸ்குகளை அனுப்பி அதை முடித்துக் கொடுத்தால் பெரிய அளவில் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பி நானும் புஷ்பா அனுப்பிய டாஸ்குகளை முடித்துக் கொடுத்தேன். அதற்கு முதலில் எனக்கு பணம் கிடைத்தது. அதை வைத்து ரூ.4.5 லட்சம் அனுப்பினால் பெரிய அளவில் சம்பாதிக்கலாம் என்றார்.இதை நம்பி நானும் புஷ்பாவிற்கு ரூ.4½ லட்சம் அனுப்பினேன். ஆனால், அவர் எவ்வித பணமும் தராமல் நான் அனுப்பிய ரூ.4½ லட்சத்தையும் சுருட்டிக் கொண்டு ஏமாற்றிவிட்டார். அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேணடும்" இவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த லில்லி புஷ்பா (வயது 27) என்பது தெரியவந்தது. லில்லி புஷ்பாவை போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட புஷ்பாவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இதுபோல் ஆன்லைன் மூலம் நிறைய பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளதால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. யாராவது ஆன்லைனில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று சொன்னால் நம்பிவிட வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications