சுத்தி சுத்தி வந்தீக.. லக்னோவிற்கும் லக் நோ! தோனி செய்த சின்ன மாற்றம்! சிஎஸ்கேவிற்கு உதவியது எப்படி?
சென்னை: லக்னோவிற்கு எதிரான டி 20 போட்டியில் சிஎஸ்கே அணி இன்று ஆடிய விதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. பவுலிங்கில் கொஞ்சம் சொதப்பினாலும் தோனி செய்த சிறிய மாற்றம் அணிக்கு பெரிய அளவில் உதவியாக இருந்தது.
ஐபிஎல் 2023 ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி தற்போது இரண்டாவது போட்டியில் லக்னோவை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது மேட்ச் நடந்தது.
இதில் சிஎஸ்கே டாஸ் தோல்வி அடைந்த நிலையில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் இறங்கியது. இன்று சிஎஸ்கே அணியில் டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேட்ச் & டபிள்யூ), ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஆர்எஸ் ஹங்கர்கேகர் ஆகியோர் களமிறங்கினர்.

சிஎஸ்கே
இன்று களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. கடந்த போட்டியில் அதிரடி காட்டிய ருத்துராஜ் இந்த மேட்சிலும் அதே வேகத்தில் அடித்து ஆடினார். 31 பந்துகள் பிடித்தவர் 3 பவுண்டரி , 4 சிக்ஸர் அடித்தார். 57 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். அதை தொடர்ந்து இன்னொரு பக்கம் 29 பந்துகளில் கான்வே 47 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் அடக்கம். இதன் பின்பு தான் சிஎஸ்கே அணி மேட்சில் சிறிய மாற்றம் செய்தது. மொயின் அலியை தோனி களமிறக்காமல் துபேவை களமிறங்கினார்.

துபே
புதிய பந்தில் கொஞ்சம் நன்றாக ஆட கூடிய துபே ஒன் டவுன் இறங்கியது சிஎஸ்கே அணிக்கு சாதகமாக மாறியது. கடந்த போட்டியில் பந்து பேட்டில் மாட்டாமல் தவித்த துபே இந்த மேட்சில் தொடக்கத்தில் இருந்தே நன்றாக ஆடினார். தோனியின் இந்த முடிவு சிஎஸ்கேவிற்கு உதவியது. வெறும் 16 பந்துகளில் 3 சிக்ஸ், 1 பவுண்டரி என்று 27 ரன்கள் எடுத்தார். பின்னர் மொயின் அலி 19, அம்பதி ராயுடு 27 ரன்கள் எடுத்தனர். தோனி கடைசியில் வந்து 3 பந்தில் 2 சிக்ஸ் அடித்து 12 ரன்கள் எடுத்தார்.

சிஎஸ்கே
இதனால் சிஎஸ்கே அணி 217-7 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோவில் கே எல் ராகுல் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கைலி மையர்ஸ் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் அடித்து 22 பந்தில் 53 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். பின்னர் ஸ்டோனிஸ், க்ருனால், ஹூடா வரிசையாக சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். கடைசியில் பூரான் மட்டும் அதிரடியாக ஆடி 18 பந்தில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி என்று 32 ரன்கள் எடுத்து சிஎஸ்கேவிற்கு பிரஷர் கொடுத்தார். இந்த மேட்சில் சிஎஸ்கே அணி ஸ்பின் பவுலிங் கை கொடுத்தது. பொதுவாக சிஎஸ்கே அணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் ஸ்பின் கைகொடுக்கும்.

ஸ்பின்
அதேபோல்தான் இங்கும் ஸ்பின் பவுலிங் சிஎஸ்கேவிற்கு கை கொடுத்தது. சாண்டர் ஹூடா ஓவரில் அவுட் ஆனார். ராகுல் மொயின் அலி பந்தில் அவுட்ப் ஆனார். அதேபோல் பாண்டியாவும் மொயின் அலி பந்தில் அவுட் ஆனார். கைலி மையர்ஸ், ஸ்டோனிஸ் ஆகியோரும் ஹூடா மொயின் பந்தில் அவுட் ஆனார்கள். சுற்றி சுற்றி வந்த ஸ்பின் பவுலிங்தான் சிஎஸ்கே அணிக்கு கை கொடுத்தது. இம்பாக்ட் வீரராக வந்த துஷார் தேஷ் பாண்டே ரன்களை வாரி வழங்கினாலும்ம் பூரான் விக்கெட்டை எடுத்து ஆட்டத்தை மாற்றினார்.

வெற்றி எப்படி?
இதையடுத்து ஆட்டத்தை நெருக்கி கொண்டு சென்ற சிஎஸ்கே அணி 9 பந்தில் 33 ரன்கள் எடுக்க வேண்டும் லக்னோவை கொண்டு சென்றது. அதன்பின் 6 பந்தில் 27 ரன்கள் எடுக்க வேண்டும் ஏற்பட்டது. அந்த ஓவரில் சிக்ஸ் அடிக்க வேண்டும் என்ற நிலையில் முதல் பந்திலேயே துஷார் நோ பால் போட்டார். அவருக்கு இந்த போட்டியில் நோ பால் பிரச்சனை இருந்தது. இந்த நிலையில் அந்த ஓவரிலேயே பதோணி அவுட் ஆனார். கடைசி பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிஎஸ்கே எளிதாக வென்றது .
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications