டெல்லி கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. திமுக லீகல் டீம்.. செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனுவில் ஆடிய கேம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக அவரின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது நேற்று நடந்த கைது படலத்தில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முதல்நாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது.
மொத்தமாக 17 மணி நேரம் சோதனை நடந்தது. வீட்டோடு சேர்த்து தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

சோதனை முடிந்த அவரின் வீட்டிற்கு உயரதிகாரிகள் வந்தனர். அவரை அலுவலகம் கொண்டு செல்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து நேற்று பிற்பகல் நடந்த விசாரணையில் சென்னை ஹைகோர்ட்டில் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் திமுக சட்டத்துறை செய்த சில விஷயங்கள் டெல்லியை மிரட்டி உள்ளதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக லீகல் டீம் ஆட்டம்: அதன்படி, அமலாக்கத்துறை முதலில் செந்தில் பாலாஜியை டெல்லிக்கு அழைத்து செல்ல முயன்று உள்ளது. கைது இல்லாமல் விசாரணை என்று டெல்லிக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.
டெல்லியில் வைத்து விசாரணை செய்து, பின் அங்கேயே கைது செய்து, அங்கேயே கஸ்டடியில் எடுக்க பிளானாம். சென்னையில் அவரை கைது செய்தால் உடனடியாக சென்னை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும்.
இதனால் அவரை கைது செய்யாமல் விசாரணை என்று அழைத்து செல்ல முயன்றுள்ளனர். இதனால்தான் உறவினர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த நேரம் பார்த்து செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வந்ததால் ட்விஸ்ட் ஏற்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் அவரின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். தனது கணவன் எங்கே என்று கேட்டு செந்தில் பாலாஜி மனைவி மனுதாக்கல் செய்தார். திமுக லீகல் டீம் சொல்லி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு காரணமாக செந்தில் பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டிய கட்டாயம் போலீசுக்கு.
இன்னொரு பக்கம் அமலாக்கத்துறைக்கும் சென்னையிலேயே அதிகாரபூர்வமாக செந்தில் பாலாஜியை கைது செய்து.. கோர்ட்டில் கஸ்டடி கேட்க வேண்டிய கட்டாயம். ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றால் செந்தில் பாலாஜியை அமைதியாக டெல்லிக்கு அமலாக்கத்துறை அழைத்து சென்று இருக்கும்.
அதை ஆட்கொணர்வு மனு தடுத்துவிட்டது. இப்படித்தான் செந்தில் பாலாஜியை டெல்லிக்கு அழைத்து செல்லும் அமலாக்கத்துறையின் திட்டத்தை திமுக முறியடித்து உள்ளது என்று திமுக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர் .












Click it and Unblock the Notifications