ஸ்டாலின் மனதை குளிர வைத்த வில்சன்.. தொட்டதெல்லாம் வெற்றி.. மீண்டும் எம்பி வாய்ப்பு வந்தது எப்படி?
சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் போட்டியிட உள்ளனர். 4வது வேட்பாளராக திமுக சார்பில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட தேர்வாகி உள்ளார்.
வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக நான்கு மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவைக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும், அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் வரும் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைய போகிறது.

வில்சன்:
ராஜ்ய சபா எம்பியாக இருக்கும் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வில்சன் வந்தாலே "வின் சன்" என்று சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து திமுகவிற்காக, தமிழக அரசுக்காக பல முக்கியமான வழக்குகளை வென்று கொடுத்துக்கொண்டு இருக்கிறார் மூத்த வழக்கறிஞர் வில்சன். இதில் 2 முக்கியமான வழக்குகள் கட்சி தாண்டி தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் வழக்கின் தீர்ப்பு ஆகும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த போது அவருக்கு மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக அரசை திமுக நாடிய போது அவர்கள் அங்கு இடம் வழங்க மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து போராடி கருணாநிதி விருப்பப்படி அவரை அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ள வைத்த பெரும் பங்கு வில்சனையே சாரும். இவர்தான் திமுக சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் இரவோடு இரவாக ஆஜர் ஆனார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இரவோடு இரவாக இவர் நடத்திய வாதமே திமுக அப்போது வெல்லவும் காரணமாக இருந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த போது அவருக்கு மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யவும் காரணமாகஅமைந்தது.
இரண்டாவது வழக்கு
இது போக இரண்டாவதாக மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி-OBC) 27% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் உயர் ஜாதி ஏழையினருக்கான (EWS) 10% இடஒதுக்கீடு 2022ம் ஆண்டில் மட்டும் அனுமதிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாமல் இருந்தது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் மத்திய அரசு இதனை செயல்படுத்தாமல் இருந்தது. இதனால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திமுக தொடர்ந்தது. இதில் வாதம் செய்தது வில்சன்தான். அவர்தான் இந்த வழக்கில் தமிழக அரசு திமுக வெற்றிபெற காரணம்.
மூன்றாவது வழக்கு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, துணைவேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து இந்த வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்த, திருப்பி அனுப்பிய மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும்.. 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு மூலம் பல்கலைக்கழகங்களின் வேந்தரானார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு பல்கலை., சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சிநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. . இதில் வாதம் செய்தது வில்சன்தான். அவர்தான் இந்த வழக்கில் தமிழக அரசு திமுக வெற்றிபெற காரணம்.
இப்படி ஆளும் திமுகவிற்காக.. தனிப்பட்ட வகையில் திமுக கட்சிக்காகவும் திமுக எம்பி வில்சன் பெரிய வழக்குகளை வென்று கொடுத்துள்ளார். இதில் 2 முக்கியமான வழக்குகள் கட்சி தாண்டி தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் வழக்கின் தீர்ப்பு ஆகும்.
இவர் அரசியலமைப்பு தொடர்பான பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வெற்றி கண்டுள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் மே 2011-ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் 2012-ஆம் ஆண்டு முதல் மே 2014-ஆம் ஆண்டு வரை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தார். இந்த தொடர் வெற்றிகள் காரணமாகவே திமுக எம்பி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது மீண்டும் எம்பி தேர்தல் வரும் நிலையில் இந்த வழக்கு வெற்றி முதல்வர் ஸ்டாலின் மனதை குளிர வைத்திருக்கும்.. இதனால் இவர் மீண்டும் ராஜ்ய சபா எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார்.
-
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
அரசு வேலை.. தாமதம் இருக்காது.. உடனே 1.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.. திமுக தேர்தல் அறிக்கை -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
தேவர் Vs தேவர் மகன்.. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்கும் ஐபி செந்தில்குமார்! வரலாறு படைக்குமா திமுக? -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்?












Click it and Unblock the Notifications