வில்சன் வந்தாலே "வின் சன்".. 3வது பெரிய வழக்கை வென்று கொடுத்துட்டாரே.. மனம் குளிர்ந்த ஸ்டாலின்
சென்னை: ஆளும் திமுகவிற்காக.. தனிப்பட்ட வகையில் திமுக கட்சிக்காகவும் திமுக எம்பி வில்சன் இன்று 3வது பெரிய வழக்கை வென்று கொடுத்துள்ளார். இதில் 2 முக்கியமான வழக்குகள் கட்சி தாண்டி தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் வழக்கின் தீர்ப்பு ஆகும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த போது அவருக்கு மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக அரசை திமுக நாடிய போது அவர்கள் அங்கு இடம் வழங்க மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து போராடி கருணாநிதி விருப்பப்படி அவரை அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ள வைத்த பெரும் பங்கு வில்சனையே சாரும். இவர்தான் திமுக சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் இரவோடு இரவாக ஆஜர் ஆனார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இரவோடு இரவாக இவர் நடத்திய வாதமே திமுக அப்போது வெல்லவும் காரணமாக இருந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த போது அவருக்கு மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யவும் காரணமாக அமைந்தது.
இரண்டாவது வழக்கு
இதுபோக இரண்டாவதாக மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி-OBC) 27% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் உயர் ஜாதி ஏழையினருக்கான (EWS) 10% இடஒதுக்கீடு 2022ம் ஆண்டில் மட்டும் அனுமதிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாமல் இருந்தது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் மத்திய அரசு இதனை செயல்படுத்தாமல் இருந்தது. இதனால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திமுக தொடர்ந்தது. இதில் வாதம் செய்தது வில்சன்தான். அவர்தான் இந்த வழக்கில் தமிழக அரசு திமுக வெற்றிபெற காரணம்.
மூன்றாவது வழக்கு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, துணைவேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து இந்த வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்த, திருப்பி அனுப்பிய மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும்.. 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த உத்தரவு மூலம் பல்கலைக்கழகங்களின் வேந்தரானார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு பல்கலை., சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சிநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் வாதம் செய்தது வில்சன்தான். அவர்தான் இந்த வழக்கில் தமிழக அரசு திமுக வெற்றிபெற காரணம்.
இப்படி ஆளும் திமுகவிற்காக.. தனிப்பட்ட வகையில் திமுக கட்சிக்காகவும் திமுக எம்பி வில்சன் இன்று 3வது பெரிய வழக்கை வென்று கொடுத்துள்ளார். இதில் 2 முக்கியமான வழக்குகள் கட்சி தாண்டி தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் வழக்கின் தீர்ப்பு ஆகும்.
இவர் அரசியலமைப்பு தொடர்பான பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வெற்றி கண்டுள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் மே 2011-ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் 2012-ஆம் ஆண்டு முதல் மே 2014-ஆம் ஆண்டு வரை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தார். இந்த தொடர் வெற்றிகள் காரணமாகவே திமுக எம்பி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது மீண்டும் எம்பி தேர்தல் வரும் நிலையில் இந்த வழக்கு வெற்றி முதல்வர் ஸ்டாலின் மனதை குளிர வைத்திருக்கும்.. இதனால் இவர் மீண்டும் ராஜ்ய சபா எம்பியாக தொடரும் வாய்ப்புகள் உள்ளன.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications