Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தூரில் குடிநீர் விஷமாக மாறியது எப்படி? சென்னையில் என்ன செய்ய வேண்டும்.. நிபுணர்கள் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம் என்று பாராட்டப்பட்ட இந்தூர் மாநகரில் குடிக்கும் குடிநீரே பொதுமக்களுக்கு விஷமாக மாறி உள்ளது. இந்தூரின் பாகீரத்புராவில் நர்மா நதி நீர் தான் குடிநீராக விநியோகிக்கப்பட்டது. அந்த குடிநீர் நஞ்சாக மாறியதற்குப் பின்னால் உள்ள மிக அதிர்ச்சிகரமான காரணங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அந்த காரணங்களையும், எதிர்காலத்தில் சென்னையில் என்ன செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறியது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

இந்தூர் பாகீரத்புராவில் குடிநீர் நஞ்சான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக இந்தூர் மேயர் புஷ்யமித்ரா பார்கவா கூறியிருந்தார்.ஊடகங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் தகவலின் படி, 14 பேர் உயிரிழந்திருப்பார்கள் என தெரிகிறது. சுமார் 1,400-க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ( சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Indore water

அங்கு எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் 26-ல் உயிருக்கு ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தசம்பவம் மத்திய பிரதேசமாநிலத்தையே உலுக்கி உளளது. அலட்சியம் தொடர்பான புகார் காரணமாக ஒரு பொறியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தூரில் இரண்டு உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தூரில் குடிநீர் நஞ்சாக மாறியதற்குப் பின்னால் உள்ள மிக அதிர்ச்சிகரமான காரணங்கள் பற்றி பார்ப்போம்.

கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்கள் கலந்த விபரீதம்

மத்திய பிரதேச மாநில அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பாகீரத்புரா பகுதியில் குடிநீர் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் ஒரு கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, அதே இடத்திற்கு மிக அருகிலேயே கழிவுநீர் செல்லும் குழாய்களும் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக, கழிவுநீர் குடிநீருடன் கலந்து வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது

குடிநீர் குழாய்க்கு மேல் கட்டப்பட்ட கழிப்பறை: மிகப்பெரிய நிர்வாகக் குளறுபடியாக, இந்தூர் பாகீரத்புராவில் ஒரு காவல்துறை சோதனைச் சாவடிக்கு அருகே உள்ள பிரதானக் குடிநீர் குழாய்க்கு நேர் மேலேயே ஒரு கழிப்பறை கட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கழிப்பறைக்கு அடியில் முறையான செப்டிக் டேங்க் கட்டப்படவில்லை. இதனால் கழிப்பறையின் கழிவுகள் நேரடியாகக் குடிநீர் குழாய் மீது கசிந்து, குழாயில் இருந்த விரிசல் வழியாக உள்ளே புகுந்தது. இது குடிநீரை முழுமையாக நஞ்சாக மாற்றி உள்ளது.

அலட்சியப்படுத்தப்பட்ட புகார்கள்

இந்தச் சம்பவம் நடப்பதற்கு பல நாட்களுக்கு முன்பே, அந்தப் பகுதி மக்கள் குழாய் நீர் கசப்பாகவும், துர்நாற்றத்துடனும் வருவதாக மாநகராட்சிக்குத் தொடர்ந்து புகார் அளித்திருக்கிறார்கள். தண்ணீர் இரும்பு கலந்த மாதிரி இருக்கிறது என்று மக்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், அதிகாரிகள் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிரிழப்புகள் ஏற்படத் தொடங்கிய பின்னரே அதிகாரிகள் விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆய்வக முடிவுகள் தந்த அதிர்ச்சி

இந்தூர் மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்த 50 குடிநீர் மாதிரிகளில் 26 மாதிரிகளில் மனித உயிருக்கு ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகக் கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி உயிரிழப்புகளுக்குக் காரணமாகி இருக்கிறது

தற்போதைய நிலை என்ன

இந்தூரில் பிரச்சனைக்கு காரணமாக கழிப்பறை தற்போது இடிக்கப்பட்டு, குழாய் கசிவுகள் சரி செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் குழாய் நீரை அருந்த வேண்டாம் என்றும், மாநகராட்சி வழங்கும் டேங்கர் நீரை நன்கு கொதிக்க வைத்துப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒரு சில அதிகாரிகள் அலட்சியமே இன்று 10 பேரின் உயிரை பறித்துள்ளனது. பலரின் உடல் நலன் பாதிப்புக்கு காரணமாகி உள்ளது.

இந்தூர் பாகீரத்புராவில் நடந்த துயரமான சம்பவத்தைப் போல, சென்னையில் குடிநீர் நஞ்சாகாமல் இருக்க குடிநீர் வாரியம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நீரியல் நிபுணர்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர்கள் முன்வைக்கும் முக்கிய ஆலோசனைகள் பற்றி பார்ப்போம்.

"எண்டோபாட்": ரோபோக்கள் மூலம் ஆய்வு

சென்னையின் பல பகுதிகளில் குடிநீர் குழாய்கள் 40-50 ஆண்டுகள் பழமையானவையாக உள்ளன. இந்த பழைய குழாய்களில் எங்கு கசிவு அல்லது விரிசல் உள்ளது என்பதைக் கண்டறிய ரோபோடிக் கேமராக்களை பயன்படுத்த வேண்டும். இது குழாயைத் தோண்டாமலேயே உள்ளே இருக்கும் விரிசல்களைக் காட்டிவிடும், இதனால் கழிவுநீர் உள்ளே புகுவதைத் தடுக்கும் ஆற்றல் உடையது.

குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களுக்கு இடையிலான தூரம்

நிபுணர்களின் கூற்றுப்படி, குடிநீர் குழாய்களும் கழிவுநீர் குழாய்களும் ஒன்றோடு ஒன்று மிக நெருக்கமாக இருக்கக்கூடாது. இரண்டுக்கும் இடையே குறைந்தபட்சம் 1.5 முதல் 3 மீட்டர் இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும். பல பகுதிகளில் இவை அருகருகே இருப்பதால், பழைய குழாய்களை மாற்றும்போது இந்த இடைவெளியை உறுதி செய்வது கட்டாயம் என்கிறார்கள் நிபுணர்கள்.

'IoT' மூலம் நிகழ்நேர கண்காணிப்பு

குழாய்களில் நீரின் அழுத்தம் திடீரென குறைந்தால், அங்கு கசிவு ஏற்பட்டுள்ளது என்று பொருள். Internet of Things அதாவது IoT என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக கூறுவார்கள். அந்த ஐஓடிசென்சார்களைப் பொருத்துவதன் மூலம், கசிவு ஏற்படும் இடத்தை உடனடியாகக் கண்டறிந்து, கழிவுநீர் கலப்பதற்கு முன்பே சரிசெய்ய முடியும்.

குழாய் நீரில் குளோரின் அளவு குறையும்போது பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புள்ளது. இந்தசூழலில் சென்னை குடிநீர் வாரியம் தினமும் சுமார் 300 முதல் 600 மாதிரிகளைப் பரிசோதிக்கிறது. குறிப்பாக பருவமழைக் காலங்களில், மக்கள் அதிகம் புகார் அளிக்கும் பகுதிகளில் இந்த எண்ணிக்கையை அதிகரித்து, வாரியம் தனது இணையதளத்தில் அதன் முடிவுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கழிவுநீர் லாரிகள் மீதான கண்காணிப்பு

நீர்நிலைகளில் அல்லது மழைநீர் வடிகால்களில் சட்டவிரோதமாக கழிவுநீரைத் திறக்கும் லாரிகளால் நிலத்தடி நீர் மற்றும் குழாய் நீர் நஞ்சாகிவிடுகிறது. எனவே அனைத்து கழிவுநீர் லாரிகளிலும் GPS கருவி பொருத்தி, அவை முறையாக சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும். அப்படி மீறி கொட்டும் வாகனங்களை கண்காணித்து அவர்களை வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விடலாம்.மன்னிப்பே தராமல் கடுமையான முடிவுகளை அரசு எடுக்க வேண்டும்-

பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி

குடிநீரின் நிறம் மாறியிருந்தாலோ அல்லது துர்நாற்றம் வீசினாலோ, பொதுமக்கள் உடனடியாக 'Dial for Water' அல்லது வாரியத்தின் புகார் எண்களை (044-4567 4567) அழைக்க வேண்டும். இப்புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுப்பது நிர்வாகத்தின் கடமை என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+