Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நைசாக கூட்டணியை குழப்பிவிட்ட எடப்பாடி.. ஸ்மார்ட்டாக தடுத்த சிவசங்கர்.. 48 மணி நேரத்தில் அல்லோகலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2 நாட்களாக நடந்த போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் போராட்டம் இன்று முடிவிற்கு வந்தது. இந்த போராட்டம் முடிவிற்கு வந்தாலும் கடந்த 48 மணி நேரமாக நடந்த விஷயம் ஒன்று ஆளும் திமுகவை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளதாம்.

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள. இன்று காலை போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கும் திரும்பி உள்ளனர். தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்ததால், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டது.

How did Edappadi Palanisamy try to break DMK alliance and How did Sivasankar stop it?

போராட்டம்: 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடந்து வந்தது. வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தி வருகிறது. அதிமுக ஆதரவு இயக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு AITUC, CITU உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு வழங்க ஒருமனதாக முடிவு செய்தன. ஏழு கோரிக்கைகளை முன்னிறுத்தி, 7 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கி இருந்த நிலையில்தான் ஸ்டிரைக் நடத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கம் பங்கேற்காது என முதன்மை பொதுச்செயலாளர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது திமுக ஆதரவு தொழிற்சங்கம் ஆகும். இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் பெரும்பாலான இடங்களில் 80 சதவிகிதம் வரை பேருந்துகள் இயங்குகின்றன.

இரண்டாவதாக, தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் விவரத்தை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது போக்குவரத்துத்துறை. சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதலாக 103% இயக்கம். மாநிலம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துகழக பேருந்துகள் 100% இயக்கப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாபஸ்: இந்த நிலையில் தற்போது அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் வாங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 19ஆம் தேதி வரை போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஊழியர்கள் அறிவித்து உள்ளனர். இன்று முதல் ஊழியர்கள் பணிக்கு செல்வார்கள் என தொழிற்சங்கம் உறுதிஅளித்துள்ளது.

எடப்பாடி கூட்டணி குழப்பம்: இதில் எடப்பாடி செய்த கூட்டணி குழப்பம் என்று பார்த்தால்.. அவர் வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தி வருகிறது. அதிமுக ஆதரவு இயக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு AITUC, CITU உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு வழங்க ஒருமனதாக முடிவு செய்தன அதாவது அதிமுகவின் சங்கம் நடத்திய போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இன்னொரு பக்கம் திமுகவின் சங்கம் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

தமிழ்நாட்டில் நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கம் பங்கேற்காது என முதன்மை பொதுச்செயலாளர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது திமுக ஆதரவு தொழிற்சங்கம் ஆகும். இதுவே கூட்டணியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

கையாண்ட சிவசங்கர்: பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்திய நிலையில் அதை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கையில் எடுத்தார். இப்படி வேறு சங்கங்கள் இயக்கம் பேருந்துகளை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மறித்து நேற்று போராட்டம் செய்ய முயன்றனர். இதை உணர்ந்து அமைச்சர் சிவசங்கர், பேருந்து இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ சிறை பிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

How did Edappadi Palanisamy try to break DMK alliance and How did Sivasankar stop it?

எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்கள். பணிமனைகள், பேருந்து நிலையங்களை முற்றுகையிட தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ள நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்தார்.

இது போக கடைசியாக தனியார் நிறுவன டிரைவர், ஆம்னி பேருந்து டிரைவர்கள் ஆகியோரை வைத்து பேருந்துகளை இயக்கம் பணிகளை தமிழ்நாடு போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக பொங்கலுக்கு பணிக்கு வர வேண்டி இருப்பதால் இந்த வாரம் லீவ் எடுத்த ஊழியர்களை இப்போதே வர வைத்து ஓவர் டைம் பார்க்க வைக்கும் முடிவையும் எடுத்துள்ளனர்.

போராட்டம் செய்வது சரி தவறு.. அரசு பக்கம் சரி தவறு என்பதை தாண்டி பொங்கல் நேரத்தில்.. மக்கள் அவதிப்பட கூடாது என்பதற்காக அமைச்சர் சிவசங்கர் ஸ்மாட்டாக் பிளான் போட்டோ 100.6 சதவிகித பேருந்துகள் இயங்குவதை உறுதி செய்துள்ளார். இதை எல்லாம் பார்த்த பின்பே போராட்டம் தோல்வி அடையும் வாய்ப்பு இருந்ததால்.. போராட்டம் செய்த சங்கங்களும் அதை கோர்ட்டில் வாபஸ் பெறுவதாக அறிவித்தன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+