"கதறிய பிரியா".. "இறுக்கி கட்டினாலே டேமேஜ்தான்.." கிட்னி ஃபெயிலியராகும்! காரணத்தை சொல்கிறார் நிபுணர்
பிரியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு, சிகிச்சை குறித்து டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
சென்னை: பிரியாவின் மரணம் எப்படி நிகழ்ந்திருக்கும்? என்ன ரீதியான சிக்கலை கடைசி தருணத்தில் அவர் எதிர்கொண்டிருப்பார் என்று தீவிர சிகிச்சை நிபுணர்டாக்டர் விஜய் சக்கரவர்த்தி தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Recommended Video
கால்பந்து வீராங்கனை பிரியா, மூட்டு வலி பிரச்சினையால் அவதிப்படவும், சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அப்போது, வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகியிருப்பதாக டாக்டர்கள் சொல்லியதுடன், ஆபரேஷனும் செய்ய வேண்டும் என்று அட்வைஸ் தந்துள்ளனர்..

பிரியா
அதன்படியே ஆபரேஷன் செய்து முடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. இதனால், மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.. ஆனாலும் வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டதையடுத்து, வலது கால் அகற்றப்பட்டது... எனினும், தொடர் சிகிச்சையில் இருந்த பிரியா, இன்று காலை திடீரென உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் தோழிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலர்ஜி
இந்நிலையில், கால்பந்து வீராங்கனை உயிரிழப்புக்கு மருத்துவர்கள் கவனக்குறைவு தான் காரணமா? என்ன பிரச்சனையால் பிரியாவின் மரணம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து, பொது மருத்துவம் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்டாக்டர் விஜய் சக்கரவர்த்தியிடம் கேட்டோம்.. நம் ஒன் இந்தியாவுக்கு டாக்டர் விஜய் சக்கரவர்த்தி அளித்த பதில்கள்தான் இவை: "பிரியாவுக்கு ஒரு மிக மோசமான தசைகள் சேதமாகி உள்ளது.. பெரும்பாலும் இது எப்போது நடக்கும் என்றால், சாலை விபத்துக்களில் நடக்கும்போது, தசைகள் சேதமாகும்.. அல்லது ஒரு மாத்திரையால்கூட அலர்ஜி ஏற்பட்டு இப்படி தசைகள் சேதமாகலாம்.. அல்லது சில வைரஸ்களால் பாதிக்கப்பட நேரும்போது, இப்படி தசைகள் சேதமாகும்..

மயோ குளோபின்
நம்முடைய தசைகளில் நிறைய புரோட்டின்கள் இருக்கும்.. மயோ குளோபின் என்று இதை சொல்வார்கள்.. இது நிறைய ரத்தத்தில் கலந்திருக்கும்.. எப்படி கிச்சனில் வாஷ்பேசின் "சின்க்"கில் அழுக்குகள் எல்லாம் சேர்ந்து அடைத்துக் கொள்ளுமோ, அதுபோல, கிட்னியில் இந்த மயோ குளோபின் என்று சொல்லக்கூடிய இந்த புரோட்டீன்கள் முழுமையாக வந்து அடைத்துக் கொண்டுவிடும்.. இதனால் சிறுநீர் வராமல் நின்றுவிடும்.. கிட்னி தன்னுடைய வேலையை செய்ய முடியாது.. இதனால், உடலில் ஆசிட் அளவு, பொட்டாசியம் அளவு, இதெல்லாம் அதிகரித்துவிடும்.. அந்த மாதிரியான நேரங்களில், எங்கே தசைகள் அதிகமாக சேதமாகி உள்ளதோ, அந்த இடத்தில் இருந்து அவைகளை அகற்ற பார்ப்பார்கள்..

கால் கட்டு
பிரியா கேஸில், காலில் இறுக்கமான கட்டு போட்டதால்தான், அப்படி சேதமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.. ஆனால், அது உறுதியாக தெரியவில்லை.. அது தொடர்பான இறுதி அறிக்கையும் நமக்கு வரவில்லை.. இருந்தாலும், இந்த பிரச்சனைக்காகவே காலை எடுக்க முயன்றுள்ளதாக தெரிகிறது.. அப்படி காலை எடுத்தும்கூட, சரியாகவில்லை.. உடனே டயாலிசிஸ் செய்துள்ளனர்.. எதுக்காக டயாலிசிஸ் என்றால், கிட்னி முழுவதும் புரோட்டீனால் அடைத்துக் கொண்டுள்ளது.. இந்த நேரத்தில்தான் ஐசியூவுக்கு கொண்டு சென்று, உயிரிழப்பு நடக்கும் அளவுக்கு சென்றுவிட்டது..

எலும்பு முறிவுகள்
சில கிராமங்களில் எலும்பு முறிவுகள் என்று வரும்போது இறுக்கமாக இப்படி கட்டுப்போட்டு விடுவார்கள்.. இது கூடுதலாக வலி தந்துவிடும்.. அந்த நேரத்தில் பேஷன்ட் வலி என்று கத்தினாலும்கூட, அது எலும்பு முறிவு வலி என்று நினைத்து கொள்வார்கள்.. உண்மையிலேயே எதனால் வலி என்பதை கண்டுபிடித்து விட்டால், அப்போதே சிகிச்சை தந்துவிடலாம்.. தாமதம் செய்தால், அடுத்தடுத்து தசைகள் சேதமாகி கொண்டே போகும்.. அப்போதெல்லாம் நிறைய மயோ குளோபின் ஏற்பட்டு, கிட்னி வேலை செய்யாமல், பாதிப்புகள் கூடிவிடும்..

தசைப்பிடிப்பு
பிரியா விஷயத்தில் எதுவுமே உறுதியாக தெரியவில்லை.. மருத்துவர்கள் உறுதியாக சொன்னால்தான் தெரியும்.. தசை பிடிப்பு என்பது உயிருக்கு ஆபத்தான நோய் கிடையாது.. ஆனால், அந்த இடத்தில் இறுக்கமாக கட்டு போட்டிருந்தால், அந்த நேரத்தில்தான், தசைகள் டேமேஜ் ஆக ஆரம்பிக்கும்.. இதுபோன்ற சமயத்தில், காலில் ஒரு துளையிட்டு, அடுத்தக்கட்ட சிகிச்சை நடக்கும்.. ஆனால், எந்த ஒரு முயற்சியும் எடுக்க முடியாத அளவுக்கு, அவரது நிலைமை ஆபத்தான சென்றுவிட்டது.. அதனால்தான் எதுவுமே செய்ய முடியாமல் போயிருக்கலாம்" என்கிறார்.
-
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
Election Exclusive: ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல..அம்பத்தூரில் அய்யாவுக்கு ஆப்பு! மது குடிப்போர் கையில் சிலிண்டர் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு!












Click it and Unblock the Notifications