"சர்ப்ரைஸ்".. இனி இங்கேயே நடத்துங்க! சென்னையை பார்த்து வியந்து போன சர்வதேச செஸ் ஒலிம்பியாட் வீரர்கள்
சென்னை: சென்னைக்கு வந்துள்ள சர்வதேச செஸ் வீரர்கள் பலர் சென்னையில் 2022 ஒலிம்பியாட் தொடருக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்த்து வியந்து பாராட்டி உள்ளனர்.
Recommended Video
செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக சென்னை தீவிரமாக தயாராகி வருகிறது. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் தமிழ்நாட்டில் நடக்க உள்ளது. இன்று காலை 10 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் இந்த தொடர் தொடங்க உள்ளது. . மாமல்லபுரத்தில் மட்டுமின்றி சென்னை முழுக்க இதற்காக அலங்காரம் செய்யப்பட உள்ளது
அங்கு இருக்கும் போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச வீரர்கள் அங்கு இருக்கும் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி வரை தொடர் நடைபெற உள்ளது

போலந்து
இந்த ஏற்பாடுகள் குறித்து ட்விட் செய்த போலந்து நாட்டு கிராண்ட்மாஸ்டர் காக்பர் பியோரன், இந்தியாவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்த்து பாஸிட்டிவாகவும், சர்ப்ரைஸாகவும் உணருவதாக குறிப்பிட்டுள்ளார். இவர் ஹோட்டலில் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார். போலந்து நாட்டில் இரண்டு முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சகர்
சர்வதேச அளவில் செஸ் போட்டிகளை நடத்துபவரும், செஸ் விமர்சகருமான பிரபல டேவிட் லால்டா சென்னையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பாராட்டி உள்ளார். அதில், இனிமேல் இந்தியாதான் என்னுடைய விருப்பமான நாடு. நான் இதுவரை 61 நாடுகளுக்கு சென்று இருக்கிறேன். நான் பல நாடுகளில் சிறப்பான உபசரிப்பை இதுவரை பெற்றுள்ளேன். ஆனால் இங்கு இருக்கும் மக்கள் இதயபூர்வமாக கொடுக்கும் உபசரிப்பை போல நான் எங்கும் பெற்றது இல்லை, என்றுள்ளார்.

உக்ரைன்
உக்ரைன் கிராண்ட்மாஸ்டர் ஆன்ரி வோலோகிதீன் செய்துள்ள போஸ்டில், சென்னை ஒலிம்பியாட் தொடருக்காக செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு என்னை கவர்கிறது. எல்லா இடங்களிலும் ஒலிம்பியாட் தொடர்பான போர்டுகள் உள்ளன. மாஸ்கட் தம்பி எல்லா இடங்களிலும் இருக்கிறார். இந்த தொடரை சிறப்பானதாக மாற்ற ஒருங்கிணைப்பாளர்கள் தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அவர்களை மதிக்கிறோம், என்று கூறியுள்ளார்.

சென்னை
சென்னைக்கு வந்த ஸ்பானிஷ் நாட்டு செஸ் வீரர் வெல்லேஜு போன்ஸ் தமிழ்நாடு அரசின் ஏற்பாடுகளை புகழ்ந்து பாராட்டி உள்ளார். இவர் ஸ்பானிஷ் நாட்டு கிராண்ட் மாஸ்டர். அதில், சென்னைக்கு காலை 5 மணிக்கு வந்தேன். எதையாவது பற்றி புகார் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் இதுவரை புகார் சொல்லும் விதமாக எதையும் பார்க்கவில்லை. எல்லாமே மிக சிறப்பாக உள்ளது. நிர்வாகிகள் ஏற்பாட்டாளர்கள் மிக சிறப்பான வரவேற்பை எனக்கு கொடுத்தனர்.

ஸ்பானிஷ் வீரர்
அதோடு ஒலிம்பியாட் வீரர்களுக்கு என்று தனியாக இமிக்ரேஷன் ஏற்பாடுகள் உள்ளன. உடனே எனக்கு ஹோட்டல் அறை கொடுக்கப்பட்டது. இதுவரை இவ்வளவு வேகமாக ஹோட்டல் அறை பெற்றது இல்லை. இதுவரை நான் பார்த்ததிலேயே சிறப்பான செஸ் ஒலிம்பியாட் அரங்கம் இதுதான், என்று வெல்லேஜு போன்ஸ் கூறி உள்ளார். வெல்லேஜு போன்ஸ் த 5 முறை ஸ்பானிஷ் நாட்டு சாம்பியஷிப் பட்டத்தை வென்றவர். 16 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். 2000ம் ஆண்டு நடந்த சர்வதேச அண்டர் 18 உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர்தான் வென்றார்.

லக்சம்பார்க்
லக்சம்பார்க் நாட்டின் கிராண்ட்மாஸ்டர் பியோனா செய்துள்ள ட்விட்டில், இங்கு வந்து 24 மணி நேரம் ஆகிறது. சென்னை செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை பார்த்ததும் நான் வியந்து போனேன். விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. சிறப்பான ஹோட்டல் கொடுக்கப்பட்டு உள்ளது. உணவு மிக சிறப்பாக இருந்தது. இந்தியாவை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications