"எடுத்த சபதம் முடிப்பேன்".. 2020 இல் செய்த சூளுரை.. எல் முருகனுக்கு தேடி வந்த அமைச்சர் பதவி!
சென்னை: தமிழக பாஜக தலைவராக உள்ள எல் முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவியானது அவரை தேடி வந்ததற்கு அவர் எடுத்த சபதத்தை முடித்ததுதான் காரணம் என கூறப்படுகிறது.
Recommended Video
பொதுவாக அலுவலகமானாலும் அரசியலானாலும் தலைமை சொல்வதை கேட்டு வெற்றியை வாரி குவிப்பதால் பதவியுயர்வு, பதவிகள் தேடி வரும். இது அனைவரும் அறிந்ததே.
பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க பெரும் பாடுபட்டார். அவரது அணுகுமுறைகளால் மக்களுக்கு பாஜக மீது ஒரு பிடிப்பு வந்தது.

தகுதி
இந்த நிலையில் அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டவுடன் மாநில தலைவர் பதவியை யாருக்கு கொடுப்பது? தமிழிசையை போல் தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தகுதியான நபர் யார் என பாஜக தலைமை அலசி எல் முருகனை நியமித்தது.

சந்திப்பு
இவர் அந்த பதவிக்கு வந்தவுடன் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது தமிழக சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள் நிச்சயம் அலங்கரிப்பார்கள். அதை நிச்சயம் நான் செய்து முடிப்பேன் என தெரிவித்தார். இதையடுத்து மாற்றுக் கட்சியில் அதிருப்தியில் இருந்தவர்களை பாஜகவில் இழுத்தார்.

முக்கிய பொறுப்பு
திமுக ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த கு.க.செல்வம், திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த வி பி துரைசாமி, திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆகியோரை பாஜகவில் ஐக்கியப்படுத்தினார்.

பாஜக
அது போல் தமிழகத்தில் தேசிய அளவில் பாஜகவுக்கு ஒரு முகம் வேண்டும் என நினைத்த போது காங்கிரஸ் கட்சியில் குஷ்பு அதிருப்தியில் இருந்ததை எல் முருகன் அறிந்தார். இதையடுத்து அவரிடம் பேசி பாஜகவுக்குள் அவரை இழுத்தார். ஒரு நல்ல பதவியையும் குஷ்புவுக்கு பெற்று தந்தார்.

சட்டசபை
தமிழகத்தில் பாஜக மலரவே மலராது என எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்த நிலையில் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக மிகவும் பாடுபட்டு பூத் கமிட்டிகளை அமைத்து கட்சியை வலுப்படுத்தினார். இதன் மூலம் 4 எம்எல்ஏக்கள் தமிழக சட்டசபையில் பல ஆண்டுகள் கழித்து கால் வைத்தனர்.

தேடி வந்த பதவி
பொன் ராதாகிருஷ்ணன், ஓபி ரவீந்திரநாத், அன்புமணி உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல் முருகனை தேடி இந்த பதவி வந்துள்ளது. உண்மையில் உழைப்புக்கேற்ற பிரதிபலனாகவே இது பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications