Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நர்ஸ்ஸுக்கு வந்த காதல்.. சாதியை வென்ற திருமணம்.. "மாப்பிள்ளை விருந்து" பயங்கரம்.. நடந்தது என்ன?

கும்பகோணத்தில் வெட்டி கொன்ற புதுமண தம்பதிகளின் பின்னணி தெரியவந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 தினங்களாகவே கும்பகோணம் புதுமண தம்பதியை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த கொலைக்கு பின்னணி என்ன?

கும்பகோணம் அருகே சோழபுரத்தை சேர்ந்த காதல் ஜோடி சரண்யா - மோகன்.. உருகி உருகி காதலித்தனர். வீட்டில் இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், 2 பேரும் ஓடிப்போய் திருமணம் செய்துள்ளனர்...

ஒருகட்டத்தில் சரண்யா விட்டில், மன்னித்து ஏற்றுக் கொள்வதாக சொன்னார்கள்..அவர்களை நம்பி சென்றனர் புதுமண ஜோடி.. அங்கேயே மாப்பிள்ளையை வெட்டி கொன்றுவிட்டனர்.. அலறி உயிர்தப்பி ஓடிய சரண்யாவையும் விரட்டி விரட்டி வந்து, வெட்டி சாய்த்துவிட்டனர்..

 ஆசை ஆசையாய் விருந்து

ஆசை ஆசையாய் விருந்து

இந்த இரட்டை கொலை பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்துள்ளது.. கொன்றவர்கள் 2 பேரும், சரண்யாவின் சகோதர்கள்.. இதுகுறித்து விசாரணை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது.. கொலையாளிகள் கைதாகினார்கள்.. ஆனால், வாழும் ஆசையோடு, எண்ணற்ற கனவுகளோடும் காத்திருந்து துடிதுடித்து போய்விட்ட அந்த உயிர்கள் திரும்பி வர போவதில்லை... இருந்தாலும், இவ்வளவு கொலை வெறிக்கு பின்னணி காரணம் என்ன? வெறும் சாதிதான்..!

 காதலர்கள்

காதலர்கள்

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்வேலியை சேர்ந்தவர்கள்தான் சேகர் - தேன்மொழி தம்பதியினர்.. இருவருமே பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள்.. இவர்களுக்கு சக்திவேல், சதீஷ் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.. ஒரே ஒரு மகள்தான் சரண்யா.. சேகர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு உதவியாக மூத்த மகன் சக்திவேல் இருந்து வருகிறார்.. மற்ற 2 மகன்கள் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

 நர்ஸ் காதல்

நர்ஸ் காதல்

3 மகன்களுக்குமே திருமணம் ஆகிவிட்டது.. ஒரே மகள் சரண்யா படிக்க ஆசைப்பட்டார்.. அதனால் அவரை நர்சிங் படிக்க வைத்துள்ளனர்.. சென்னையில் கடந்த 4 வருடங்களாகவே தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இதே மருத்துவமனையில், சில மாதங்களுக்கு மோகன் என்ற இளைஞரின், அம்மாவை சிகிச்சைக்கு சேர்த்திருந்தனர்.. மனநலம் பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள்.. மோகன் திருவண்ணாமலையை சேர்ந்த மோகன், செங்குந்த முதலியார் வகுப்பை சேர்ந்தவராம்..

 சரண்யா கொலை

சரண்யா கொலை

சரண்யாவும் மோகனும் அந்த மருத்துவமனையில்தான் சந்தித்து கொண்டனர்.. காதல் அரும்பியது.. செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர்.. திருமணம் செய்யவும் முடிவெடுத்தனர்.. மனநல சிகிச்சையில் உள்ள தன் அம்மாவை, சரண்யா நன்றாக கவனித்து கொள்வார் என்று மோகனும் நம்பினார்.. ஆனால் சரண்யாவை, அவரது குடும்பத்தினர், அவரது மாமாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து வைத்திருந்தனர்.. அதனால்தான், காதலர்கள் ஓடிப்போய் திருமணம் செய்யும் நிலைமைக்கு வந்தனர்.. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் அவர்களை கொலை செய்ய இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரண்யாவின் சகோதரர் சக்திவேல், அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

 மாப்பிள்ளை விருந்து

மாப்பிள்ளை விருந்து

அதன்படி திட்டமிட்டு சரண்யா தம்பதியினரை, மதிய விருந்துக்கு வீட்டிற்கு வரவழைத்தனுர்.. விருந்தும் முடிந்தது.. சாப்பிட்டு முடித்துவிட்டு, மறுபடியும் சென்னை கிளம்புவதற்காக, தம்பதியர் 2 பேரும் வீட்டிற்கு வெளியே வந்துள்ளனர்... அப்போதுதான் சரண்யாவின் அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் ஆகிய 2 பேரும் வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, அரிவாளால் மோகனை வெட்டியுள்ளனர்.. தப்பித்து செல்ல முயன்ற சரண்யாவையும் விரட்டி கொன்றது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 சாதி - கொலை

சாதி - கொலை

இந்த சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆகியும் பரபரப்பு இன்னும் தமிழகத்தில் குறையவில்லை.. நம் நாட்டில் சாதி ஆணவக் கொலைகளுக்கென புதிய சட்டம் தேவை என்ற பேச்சு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.. இந்தியாவை பொறுத்தவரையில் சாதி ஆணவ கொலைகளுக்கென தனியாக எந்த சட்டமும் இல்லை. இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ்தான் கைது நடவடிக்கைகளும் நடக்கின்றன..

 விடையும் - தீர்வும்

விடையும் - தீர்வும்

அதை அடிப்படையாக வைத்துதான், தண்டனைகளும் தரப்படுகின்றன. ஆனாலும், தங்களுடைய சாதியை அடிப்படையாக கொண்டு திட்டம் தீட்டி, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரே, சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடியை மிக மிக கொடூரமாக கொல்வது அதிகமாகி கொண்டே செல்கிறது. அதனால், வெறும் கொலைகளுக்கான தண்டனைகளை தராமல், ஆணவ கொலைகளுக்கான சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் விடாமல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.. நாளுக்கு நாள் பெருகி வரும் இந்த ஆணவ கொலைக்கு நிரந்தமான, விடையும், விடிவும் தான் என்ன?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+