மகளிர் உரிமை தொகையை வைத்து.. கதையை முடித்த பாஜக.. டெல்லி தேர்தலை புரட்டி போட்ட வாக்குறுதி
சென்னை: டெல்லியில் 27 வருடங்களுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அங்கே பாஜக வெற்றிபெறும் பட்சத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் பற்றிய வாக்குறுதி அந்த கட்சிக்கு சாதகமாக மாறியதாக கருதப்படுகிறது.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன. அங்கே 70 இடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில் 36 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மி - பாஜக - பாஜக இடையே போட்டி நிலவுகிறது. அதேபோல் சிபிஎம், சிபிஐ கட்சிகளும் தனியாக கூட்டணி அமைத்துள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியும் தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகிறது. இந்த நிலையில் இன்று வெளியான எக்சிட் போல் கணிப்புகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.

சாணக்கியா ஸ்ட்ராடஜி கணிப்பு:
டெல்லியில் கடும் போட்டிக்கு இடையே பாஜக ஆட்சியை பிடிக்கும், என்று சாணக்கியா ஸ்ட்ராடஜி நிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய எக்சிட் போலில் தகவல் வெளியாகி உள்ளது. 39-44 இடங்களில் பாஜக வெல்லும் என்று சாணக்கியா ஸ்ட்ராடஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 25-28 இடங்களில் வென்று கடும் போட்டியாக அமையும் என்று சாணக்கியா ஸ்ட்ராடஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மொத்தமாக 70 இடங்கள் உள்ளது. இதற்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. அங்கே ஆட்சியை பிடிக்க 36 இடங்களில் வெல்ல வேண்டும். இந்த நிலையில் பெரும்பான்மைக்கு தேவையானதை விட கூடுதலாக.. அதாவது 39-44 இடங்களில் பாஜக வெல்லும் என்று சாணக்கியா ஸ்ட்ராடஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பீப்பிள் பல்ஸ் கணிப்பு:
டெல்லியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். 51-60 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் என்று பீப்பிள் பல்ஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. ஆம் ஆத்மி வெறும் 10-19 இடங்களில் வென்று தோல்வி அடையும் என்று பீப்பிள் பல்ஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் எதுவும் அங்கே ஒரு இடம் கூட வெல்ல வாய்ப்பில்லை என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டிவி (DV) ஆராய்ச்சி நிறுவனம்:
டிவி (DV) ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பிலும் பாஜகவுக்கு சாதகமான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக 36-44 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 26-34 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றும் கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஆம் ஆத்மி கடுமையான போட்டியளித்தாலும் அவர்களை விட அதிகமாக வெற்றி பெற்று பாஜக தலைநகரை கைப்பற்றும் என்று கூறியுள்ளனர்.
பலோடி சத்தா பஜார்:
பலோடி சத்தா பஜார் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே 34-36 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் 0-1 தொகுதியில் வெற்றி பெறுவதற்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு தொங்கு சட்டசபை உருவாக அதிக வாய்ப்புள்ளது. அப்படி தொங்கு சட்டசபை உருவானால் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும் அது முக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது.
Mind Brink கருத்து கணிப்பு:
Mind Brink கருத்து கணிப்பின்படி மீண்டும் ஆம் ஆத்மி கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் 44 முதல் 49 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில் பாஜக 21 முதல் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 0 முதல் ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Weepreside கணிப்பு:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 46 - 52 இடங்களில் வெல்லக்கூடும் என்றும், பாஜக 18 - 23 இடங்களில் வெல்லும் என்றும் காங்கிரஸ் கட்சி 0 - 1 இடத்தில் வெல்லும் என்றும் Weepreside எக்ஸிட் போல் ரிசல்ட் தெரிவிக்கிறது. தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பின்படி வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சி 49.2%, பாஜக 42.8%, காங்கிரஸ் கட்சி 5.1% பெற்றுள்ளதாக Weepreside தெரிவித்துள்ளது.
pollster கணிப்பு:
டெல்லியில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று pollster கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. டெல்லி தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 36 முதல் 44 தொகுதிகளில் வெல்லும் எனவும், ஆம் ஆத்மி 26-34 இடங்களில் வெல்ல வாய்ப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.
பாஜக சாதகம்;
டெல்லியில் 27 வருடங்களுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அங்கே பாஜக வெற்றிபெறும் பட்சத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் பற்றிய வாக்குறுதி அந்த கட்சிக்கு சாதகமாக மாறியதாக கருதப்படுகிறது.
அங்கே இத்தனை காலம் கெஜ்ரிவால் வீழ்த்தப்படாமல் இருந்ததற்கு ஆம் ஆத்மியின் இலவச வாக்குறுதிகள் முக்கிய காரணம். அதை இந்த முறை பாஜகவும் கையில் எடுத்தது. முக்கியமாக பாஜகவின் மகளிர் உரிமை திட்டம் ( மகிளா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் தொடங்க திட்டம்) பற்றி பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்தது. இந்த தேர்தலில் மகிளா சம்மன் யோஜனா என்ற பெயரில் ரூ.2100 மாதம் பெண்களுக்கு வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. பாஜக சார்பாக மகிளா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக பெண்களுக்கு மாதம் ₹2500 நிதியுதவி வழங்கும் திட்டமான பியாரி திதி யோஜ்னா தொடங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதிகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் பாஜகவிற்கு இது சாதகமாக மாறும் சூழல் உள்ளது.
தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட உரிமை தொகை திட்டம் நாடு முழுக்க பல மாநிலங்களில் அமலுக்கு வர தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டின் திட்டங்கள் பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக மாறி உள்ளன. உதாரணமாக மதிய உணவு திட்டம், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல திட்டங்கள் நாடு முழுக்க கவனம் பெற்றது. அந்த வகையில் தற்போது மகளிர் உரிமை தொகை திட்டம் நாடு முழுக்க பல மாநிலங்களில் அமலுக்கு வர தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் கர்நாடகா, இமாச்சலப்பிரதேசம்,மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டின் இந்த திட்டம் நாடு முழுக்க பல நாடுகளுக்கு ரோல் மாடல் திட்டமாக மாறி உள்ளது.
தமிழ்நாடு முன்னோடி: 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
திட்டத்தின் நோக்கம்: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications