• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தூண்டில் மீன்".. இளைஞரிடம் "சரிந்த" பெண்.. ஆபாச வீடியோ + கர்ப்பம் வேற.. அதுக்குன்னு 9 வருஷமா?

Google Oneindia Tamil News

சென்னை: 9 வருடம் கழித்து ஒரு குற்றவாளி போலீசில் சிக்கி உள்ளார்.. அப்பாவி பெண்ணின் படுகொலைக்கு நீதி கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருந்த அந்த குடும்பத்துக்கு இப்போதுதான், ஓரளவு நிம்மதி எட்டிப்பார்த்துள்ளது..!!!

கடந்த கடந்த 2013-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் நடந்த சம்பவம் இது.. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் நாலாச்சோப்ரா என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் சுல்தான்.. 29 வயதாகிறது..

இவர் 19 வயதான ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண், இவர் வீட்டு பக்கத்திலேயே வசித்து வந்தவர்.. ஒருகட்டத்தில் அந்த பெண்ணும், சுல்தானை விரும்பினார்.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்! உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்!

கர்ப்பம்

கர்ப்பம்

ஒருநாள் தனிமையில் அந்த பெண்ணை சந்தித்துள்ளார்.. அப்போது கூல்டிரிங்ஸ் வாங்கி, அதில் மயக்க மருந்து கலந்து காதலிக்கு தந்தார்.. இது தெரியாமல் காதலனை நம்பிய அந்த பெண்ணும் குடித்து, அதே இடத்தில் மயங்கி விட்டார்.. அப்பொழுது சுல்தான் அந்த பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்... அதை செல்போனில் வீடியோவாகவும் ரிக்கார்ட் செய்து வைத்துக் கொண்டார்.. இந்நிலையில், திடீரென்று ஒரு நாள் அந்த பெண் கர்ப்பம் ஆனார்.. இதனால் அந்த பெண் அதிர்ந்து போனார்.. வீட்டுக்கு தெரிந்தால் என்னாவது என்று பயந்துபோய், சுல்தானிடம் ஓடினார்..

கர்ப்பம்

கர்ப்பம்

கர்ப்பமாக இருப்பது தெரிந்தால், தன்வீட்டில் தொலைத்துவிடுவார்கள் என்றும் இந்த விஷயம் மற்றவர்களுக்கு தெரிவதற்கு முன்பு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சுல்தானிடம் கதறி உள்ளார்.. ஆனால் அதை மறுத்துவிட்டர் சுல்தான்... இதனால் மேலும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெண், 'கர்ப்பமாக இருப்பது எப்படியும் அனைவருக்கும் ஒருநாள் தெரிந்துவிடும், அதனால், இந்த விஷயத்தை இப்போதே முன்கூட்டியே எல்லோரிடமும் சொல்லிவிட போகிறேன்.. அவர்கள் சம்மதத்துடன் உன்னை திருமணம் செய்து கொள்ள போகிறேன்" என்று கூறியுள்ளார்.

 கூல்டிரிங்க்ஸ்

கூல்டிரிங்க்ஸ்

இதைக்கேட்டு சுல்தான் சிறிதுகூட சலனமேயில்லாமல், பலாத்காரம் செய்தபோது, எடுத்த ஆபாச வீடியோ பற்றி புட்டுபுட்டு வைத்தார்.. தன்னை பற்றி சொல்லும்முன்பு, அந்த வீடியோக்ளை எல்லாரிடமும் காட்டிவிடுவேன், சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிடுவேன்" என்று மிரட்டி உள்ளார்.. கர்ப்பமாக இருப்பது தெரிந்தாலே குடும்ப மானம் போய்விடும் நிலையில், ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிட்டால் என்னாவது என்று நினைத்து அந்த பெண் பயந்துபோனார்.. தினம் தினம் அழுதுகொண்டேயிருந்த நிலையில், அதேவருடம் ஏப்ரல் 22ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

 கிரேட் எஸ்கேப்

கிரேட் எஸ்கேப்

இதையடுத்து நாலாச்சோப்ரா போலீசார் வழக்கை பதிவு செய்து, விசாரணையையும் துவக்கினர்.. ஆனால், அதற்குள் சுல்தானை காணவில்லை.. எங்கேயோ மாயமானார்.. இதனால் போலீசார், தலைமறைவான போலீசார் சுல்தானை பிடிக்க கடுமையாக முயற்சித்தனர்.. ஆனால் எங்குமே சுல்தான் கிடைக்கவில்லை.. அதே மாநிலத்தில் இருந்தால் எப்படியும் போலீசில் சிக்க வேண்டி வரும் என்பதால், வேறு மாநிலங்களுக்கு தப்பித்து கொண்டே இருந்தார்.. உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் மாநிலங்களில் பதுங்கியிருந்திருக்கிறார்..

 செம்ம ஷாக்

செம்ம ஷாக்

9 வருடம் ஆகிவிட்ட நிலையில், போலீசாரும் தம்மை தேடும் முயற்சியை கைவிட்டுவிட்டதாக நினைத்து, சுல்தானும் நிம்மதியாக இருந்தார்.. இந்நிலையில், நாலாச்சோப்ராவுக்கு மறுபடியும் சுல்தான் வரப்போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. சுல்தான் சொந்த ஊரில் காலடி வைத்ததும், மறைந்திருந்த போலீசார், மடக்கி பிடித்து அவரை கைது செய்துள்ளனர். 9 வருடங்கள் கழித்து போலீசார் பாய்ந்து வந்து கைது செய்ததை அறிந்து சுல்தான் அதிர்ந்துபோனார்.. இப்போது வசமாக சிக்கி உள்ள நிலையில், விசாரணை தீவிரமாகி வருகிறது..!!

English summary
How did Maharashtra Police arrested young man after 9 years and what happened to his girl friend
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X