முதல் நாளே வாயை பிளக்க வைத்த.. கிளாம்பாக்கம் பஸ் நிலையம்.. கவனிச்சீங்களா? கலக்கிய அமைச்சர் சிவசங்கர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் மையத்தில் கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து நிலையம் மாற்றப்பட்டு.. கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டது.

பேருந்து நிலையம் இப்படி திடீரென ஒரே நாளில் மாற்றப்பட்டு, பண்டிகை நாட்களுக்கு முன் சேவை தொடங்கப்பட்டு கூட நேற்று எந்த விதமான குழப்பமும் ஏற்படாமல் மக்கள் பயணம் செய்தனர். எந்த விதமான சிரமங்களையும் எதிர்கொள்ளாமல் மக்கள் மிக எளிமையாக பயணம் மேற்கொண்டனர்.

How did Minister Sivasankar play a major role in changing Koyembedu Bus Stand to Kilampaakkam

மக்கள் பேருந்துகளை பிடிப்பதும் மிக எளிதாக இருந்தது. அங்கே இருந்த போர்டுகள் காரணமாக மக்கள் எளிமையாக பேருந்துகளை கண்டுபிடிக்க முடிந்தது. அதோடு இல்லாமல் போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் சிவசங்கரின் செயல்பாடு காரணமாக மக்களின் பயணம் மிக எளிமையாக இருந்தது.

முறையான திட்டமிடல்: முக்கியமாக கிளாம்பாக்கம் செல்வதுதான் மக்களுக்கு மிகுந்த குழப்பமாக இருந்தது. கோயம்பேடு என்றால் அழகாக சென்றுவிடலாம். கிளாம்பாக்கம் எப்படி செல்வது என்ற குழப்பம் இருந்தது. ஆனால் அதற்கான தீர்வை முதல் நாளே அமைச்சர் சிவசங்கர் வழங்கி விட்டார் .

இதை மனதில் வைத்தே அவர் பின் வரும் 4 அறிவிப்புகளை வெளியிட்டார்.

1.கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும்.
2.கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரம் செல்லும் பேருந்துகள் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும்.
3.கிளாம்பாக்கத்திலிருந்து கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் 3 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இயக்கப்படும்.
4. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 2,386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கூடுதலாக 1,691 நடை பேருந்துகள் என அறிவித்தார்.

இதனால் கோயம்பேடு செல்லும் மக்கள் எளிமையாக கிளாம்பாக்கம் செல்ல முடிந்தது. மக்கள் எளிதாக புறநகர் பேருந்து நிலையத்தை அடைய வசதியான சூழல் இருந்தது. அமைச்சர் சிவசங்கர் முறையான திட்டக்குழு தலைவர் ஆக இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு அவரின் திட்டமிடல் வியக்க வைத்தது.

இதனால் முதல் நாளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் பிரச்சனை இன்றி பயன்படுத்த முடிந்தது. இங்கே குழப்பம் ஏற்படுவதாக நேற்று பயணம் செய்த ஒருவரும் புகார் அளிக்கவில்லை.

கோயம்பேடு முடிகிறது: இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் இத்தனை காலம் பயன்படுத்தப்பட்டு வந்த கோயம்பேடு பேருந்து நிலையம் இந்த பொங்கலுக்கு கடைசியாக ஒருமுறை மக்களை தங்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப உள்ளது. கும்பகோணம் உள்ளிட்ட சில போக்குவரத்து வட்டங்களுக்கு மட்டும் இங்கிருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளன.

அடுத்த சில மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும். இங்கே பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. அதன்பின் பேருந்து நிலையம் மூடப்படும். அருகே இருக்கும் மார்க்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மொத்தமாக மூடப்பட உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது.

ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+